மைக்ரோவேவ் பீட்ரூட் அல்வா

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - 100 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
நெய் - 50 கிரம்
திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

பீட்ரூட்டின் தோலை சீவி கொள்ளவும்.
பிறகு நறுக்கிய பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
துருவிய பீட்ரூட்டை பாத்திரத்தில் உப்பு போட்டு தண்ணீரில் 4 நிமிடம் வேகவிடவும்
சீனிப்போட்டு 1 நிமிடம் வேகவிடவும்.
அதில் நெய் போட்டு 1 நிமிடம் வேகவிடவும்.
வறுத்த முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சையை அதனுடன் சேர்த்து கிளறவும்.
மைக்ரோவேவ் பீட்ரூட் அல்வா ரெடி.


மேலும் சில குறிப்புகள்