தேங்காய் பால் சிக்கன் பிரியாணி.

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
சிக்கன் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 6,
தேங்காய் - 1,
இஞ்சி - 1 துண்டு,
முழு பூண்டு - 2,
பச்சை மிளகாய் - 10,
கசகசா - 2 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
சிவப்பு கலர் கேசரி பவுடர் - 1 டீஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
ஏலக்காய் - 3,
புதினா - 1 கட்டு,
கொத்தமல்லி - 1 கட்டு,
எலுமிச்சம் பழம் - 1,
முந்திரி - 10,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
நெய் - 4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பட்டை, கிராம்பு சேர்த்து, உதிராக வேக வைத்து வடித்து வைக்கவும்.
மீதி பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
சிக்கனை கழுவி வைக்கவும்.
வெங்காயம், மிளகாய், முந்திரியை அரைத்து வைக்கவும்.
தேங்காயை கெட்டியாக பால் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி, புதினா, சேர்த்து அரைத்து வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அரைத்த வெங்காயம் மசாலா, அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், தயிர், சிக்கன், எழுமிச்சம் பழச் சாறு சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.
கறி வெந்து, மசாலா சுருண்டு வரும் போது, வடித்த சாதம் சேர்த்து கிளறி, 1/2 மணி நேரம் தம்மில் வைத்து இறக்கவும்.


தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

this receipe came out well.gives a different taste.

thyagu

மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

please give some different and delecious vegetarian dishes

thyagu