தேதி: April 24, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 2
தக்காளி - 1
உப்பு - சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
தண்ணீர் - 3/4 கப்
நல்லெண்ணெய் - 1 கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளி - 50 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்
துவரம் பருப்பு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், பூண்டு, மீதி காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.