அன்புள்ள மனோஹரி மேடம்,

நலமாக இருக்கிறீர்களா? என் மகளுக்கு (13y) முடி நீளமாகவும் நல்ல அடர்த்தியாகவும் இருக்கிறது. சமீபமாக அதிகம் உதிர்கிறது.அமெரிக்கா வந்த்திலிருந்து எண்ணையே வைத்துக்கொள்ள மாட்டேங்கிறாள். முடி மிகவும் ட்ரையாக இருப்பதால் சிக்காகிவிடுகிறது.ஏதாவது வீட்டு டீரீட்மன்ட் சொல்வீர்களா?
Thanks in advance.

ஹலோ சாந்தி எப்படி இருக்கின்றீகள்? நான் நலமாக இருக்கின்றேன், நன்றி. தங்கள் மகளின் முடி ஆரோக்கியத்தை பற்றி கேட்டுள்ளீர்கள். உங்கள் மகள் மட்டுமல்ல இந்த காலத்தில் பெண்கள் தலைக்கு அதிகமாக எண்ணெய் பூசுவதில்லை, அதற்க்கு கால அவகாசமும் கிடைப்பதில்லை என்று தான் நினைக்கின்றேன்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் super store என்ற பலசரக்கு அங்காடி இருந்தால் அங்கு castor oil hair & scalp conditioner என்ற எண்ணெய் கிடைக்கும். ஹேர் ஸ்பிரே மற்றும் ஷாம்பூகள் இருக்கும் பகுதியில் வைத்திருப்பார்கள். அதை வாங்கி வந்து வாரத்திர்க்கு ஒரு நாள் அவர்களின் தலையில் பூசிவிடுங்கள். உங்களுடைய்ய விரல்களைக் கொண்டு மண்டையில் நன்கு அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள். பிறகு பிரஷ்ஷால் முடியின் சிக்குகளை எடுத்து விட்டு இறுக்கமாக கட்டி அல்லது பின்னி விட்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள்.
பிறகு ஷாம்புவையும், கன்டிஷனரையும் தனி தனியாக போட்டு எண்ணெய்யை அலசி எடுத்து விடுங்கள்.
இந்த முறைய்யை வாரா வாரம் செய்தாலே போதும். குழந்தைக்கு முடி கொட்டுவது நிற்ப்பதுடன் முடியும் நல்ல ஆரோக்கியமாகவும் வளரும். செய்துப் பாருங்கள் நன்றி.

உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி. castor oil hair conditionar இது அமெரிக்கன் shop-ல் இருக்குமா அல்லது இன்டியன் கடையா என்று சொல்லுகிறீர்களா?

ஹலோ சாந்தி, இந்த எண்ணெய் ஆப்ரிக்கன் கோல்ட் என்ற பிரான்டில் கிடைக்கும். இங்கு கனடாவில் ரியல் கனேடியன் சூப்பர் ஸ்டோரில் கிடைக்கின்றது. அங்கு எந்த ஸ்டோரில் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்தியன் கடைகளில்கூட கேட்டுப் பார்க்கவும்.அவ்வாறு இந்த product கிடைக்க வில்லை என்றால் பரவாயில்லை வெறும் கேஸ்டர் ஆயில் மட்டும் கிடைத்தால் கூட போதும். அதையே வாங்கி உபயோகைப்படுத்தவும்.நன்றி.

Hello shanthi,
The product Manohari madam mentioned is available in US also..I have seen in all walgreens and walmart stores...Pls do check in hairdye sections.

Arise,Awake, Stop not till the goal is reached.

மேலும் சில பதிவுகள்