வயிற்றோட்டம்

மகளுக்கு (11 மாதம்) தண்ணீரை போல வயிற்றோட்டமாக உள்ளது.டாக்டர் சொன்ன rehydration fluid இனையும் குடிக்க மறுக்கிறாள்.டாக்டர் ஆலோசனை படி உணவும் அறவே கொடுப்பதை நிறுத்தி விட்டேன். தயவு செய்து ஏதாவது நிவாரணத்திற்கான உடன் வழியை கூறுவீர்களா சகோதரிகளே

ஒருபிடி அரிசியுடன் ஒரு கேரட்டை போட்டு நன்கு வேகவைத்து கஞ்சியாகவோ இல்லை பிசைந்தோ கொடுங்கள்
கேரட் சாறு உங்கள் குழந்தைக்கு பிடித்தால் அதில் சிறிது சீனி போட்டும் கொடுக்கலாம்
இல்லையென்றால் வெறும் சட்டியில் ஒரு கரண்டி மிளகைப்போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும் மேலே புகையாக வரும் அப்பொழுது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு ஒரு டம்ளர் அளவு வற்றியதும் அதில் சீனி போட்டு பால் பாட்டிலில் ஊற்றி குடிக்க கொடுக்கலாம் சரியாகும் வரை பால் கொடுக்காதீர்கள் அதற்கு பதில் டாக்டரிடம்
கேட்டுக்கொண்டு சோயாபால் வாங்கிகொடுக்கலாம் அது ரொம்ப நல்லது
இதை செய்து பாருங்கள் நன்றாகிவிடும் கவலைபடாதீர்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நன்றி சகோதரி,உங்கள் அன்பிற்கும் உடனடி ஆலோசனைக்கும் மிக நன்றி.பால் கொடுப்பதையும் ஏற்கனவே நிறுத்தி விட்டேன்.நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்.

வசம்பு - தீயில் சிறிது நேரம் காட்டினால் கருப்பு நிற சாம்பல் கிடைக்கும். ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து கொடுதால் உடனே கேட்கும். ஒரு நாளைக்கு 3 முறை இதை குடுக்கலாம்.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச

பால் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.சகோதரி ஜுலைகா சொன்னது போல் கேரட் சூப் கொடுங்கள்.வெறும் டீ(டிக்காஷன்) சற்று சீனி கலந்து கொடுங்கள்.அல்லது coing(french name) என்ற மஞ்சள் நிற பேரிக்காய் வகை பழம்(quince என்று நினைக்கிறேன்),இந்த பழ கூழ் கொடுங்கள்,இது டாக்டர் பரிந்துரைத்த முறையில் ஒன்று.இறைவன் அருளால் நலமாகி விடும்

ஹலோ சுகு, எப்படி இருக்கின்றீர்கள்? குழந்தையின் வயிற்றுப் போக்கிற்க்கு ஆரோரூட் மாவில் (arrow root) கஞ்சி செய்து கொடுக்கலாம். ஆரோரூட் பிஸ்கட் தரலாம். தயிர் சாதம் குழைத்து தரலாம்.இட்லியை சர்க்கரை தொட்டு கொடுக்கலாம்.வேகவைத்த புழுங்கல் அரிசி சோற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து அதில் சர்க்கரை அல்லது உப்பை போட்டும் ஸ்பூனால் ஊட்டி விடலாம். குடிப்பதற்க்கு ஒரு டம்ளர் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் ஒரு சிட்டிக்கை உப்பையும் போட்டு நன்கு கலக்கி ஸ்பூனால் சிறிது சிறிதாக குடிக்க வையுங்கள். வயிறு காலியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எப்படி உள்ளது என்று கூறவும்.நன்றி.

Cheers
Malar

Cheers
Malar

அன்புள்ள சுகு,

கவலைபட வேண்டாம். என் மகளுக்கு 6 மாதம் ஆகிறது. சென்ற மாதம் 1 வாரம் வயிற்றுபோக்கு இருந்தது. நீங்கள் தாய்ப்பால் கொடுத்தால் , இந்த மாதிரி சமயத்தில் அடிக்கடி கொடுக்கவும். மற்றபடி தண்ணீர் நிறைய கொடுக்கவும். ஏதாவது நீர் ஆகாரம் கொடுத்துக்கொண்டெ இருக்கவும். தேன் ஒரு வயது வரய் கொடுக்கமல் இருப்பது நல்லது.
Doctor டம் Bacterial or viral infection ஆ என கேட்டு அதற்கு ஏற்ற மருந்து வாங்கி கொடுக்கவும். 1 வாரத்திற்கு மேல் Doctor ஐ சென்று பார்க்கவும், அதற்கு மேல் வீட்டு வைதியம் சரி படாது.

Cheers
Malar

நன்றி அக்கறையுடன் எழுதப்பட்ட உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

மிகவும் நன்றி நீங்கள் கூறியபடி டீ ஏற்கனவே கொடுத்தேன், சிறிது மட்டுபட்டது.மிகவும் நன்றி

மிகவும் நன்றி மேடம்.குழந்தை தண்ணீரில் எதை கலந்தாலும் குடிக்க மறுக்கிறாள்(except glucose).நான் சவ்வரிசி கஞ்சி வைத்து நேற்று கொடுத்தேன்.அடிக்கடி போவது குறைந்துள்ளது.நீங்களும் sister ஜுலைகாவும் சொன்னது போல் அரிசி கஞ்சி செய்து கொடுத்துள்ளேன்.உணவு இன்றி தண்ணீர் மட்டுமே குடித்ததால் குழந்தை ஆசையாக கஞ்சி சாப்பிட்டாள்.இன்று சிறிது தெளிவாக இருக்கிறாள்.சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன்.உங்கள் அன்பிற்கும் ஆலோசனைக்கும் மீண்டும் நன்றி.

மேலும் சில பதிவுகள்