kulanthayin mananilai

eenakku kanavar mami manniyal oru pirachnai. kanavar nan solvathai keppatillai. pillayin vidayathilum en pechchai ketpathilai avarin amma thankagin sollai kettu eb=nnudan sandai podurar. nan enna seivTHU. PLEASE HELP ME AND MY KID.

ஹலோ ப்ரியா எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் கேள்வியைப் பார்த்ததும் உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டுமென்று நினைத்தேன். காரணம் குடும்பம் என்பது இது போன்ற பிரச்சனைகளை கொண்டதுதான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த குடும்பமும் கிடையாது. ஆகவே நீங்கள் முதலில் மனதிலுள்ள கவலைய்யை நீக்கி விட்டு மேற்கொண்டு வாசிக்கவும்.

உங்களின் பிரச்சனை பொதுவாக பெரும்பாலான, ஏன் எல்லா குடும்பத்திலும் ஏற்ப்படுவது தான். அதிலும் அன்பு எங்கெல்லாம் அளவுக்கதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் பிரச்சனைகளும் அதிகமாகத்தான் இருக்கும்.ஆனால் அதை நாம் எவ்வாறு கையாளுகின்றோமோ அதைப் பொருத்து தான் பிரச்சனை அதிகமாவதும், குறைவாவதும்.

தங்களின் குடும்பத்தை போன்றே பல குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றார்கள்.ஆனால் அதை நம்முடைய்ய சரியான அணுகு முறையினால் கட்டாயமாக சரி செய்து விடலாம். அது எப்படி என்று பார்த்தோமானால்,அதாவது உங்களுக்கு உங்கள் குழந்தையிடம் எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதுப் போல் உங்கள் கணவருக்கும் சரிசமமாக உரிமை இருக்கின்றது. அதைப் போல் தன் பேரக்குழந்தையிடன் உங்கள் மாமியாருக்கும், மற்ற உறவுகளுக்கும் முழு உரிமை இருக்கின்றது.அதிலும் அவர் உங்கள் கணவரைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர். நம்மை விட வாழ்க்கையிலும் குழந்தை வளர்ப்பிலும் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்று நாம் நம்ப வேண்டும். அது தான் உண்மையும் கூட.

தாங்கள் தங்கள் கணவரின் மீதும், குழந்தையின் மீதுமுள்ள அளவுக்கதிகமான பாசத்தினால் தான் நீங்கள் கவலைப் படுகின்றீர்கள், என்பதை என்னால் நன்கு புரிந்துக்கொள்ள முடிகின்றது. ஆனால் இதற்க்கு மாமியாரையோ மற்றும் உறவினரையோ குற்றம் கூறி பயனில்லை. அவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் உங்கள் கணவர் சண்டைப் போடுகின்றார் என்பது உண்மையான கூற்றாக இருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று தான் நினைக்கின்றேன்.காரணம் உங்கள் கூற்றின் படியே உங்கள் கணவர் உங்கள் பேச்சை கேட்கமல் இருப்பது தான் உண்மையான காரணம் என்று நினைக்கத் தோன்றுகின்றது.ஆண்களுக்கு பொதுவாகவே சண்டைப் போட ஒரு காரணம் வேண்டும். ஆனால் பாவம் தங்களின் பிள்ளைகளின் செயல்களுக்கு மாமியார்களோ, அல்லது தங்களின் கணவரின் செய்யலால் மருமகள்களோ குற்றவாளியாகின்றார்கள் என்பது தான் உண்மை.

ஆகவே குடும்பங்களில் சண்டை யாரால் வந்தது? எதனால் வந்தது? என்று காரணம் கண்டு பிடித்தோமானால் பிறகு எந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழவே முடியாது, ஆகவே இதில் யாரையும் குறை சொல்வதில் பயன் கிடையாது என்று தான் கருதுகின்றேன்.

ஆகவே ப்ரியா அறிவது தாங்கள் மனதை தெளிவு படுத்தி பிரச்சனைய்யை மட்டும் பார்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் பேச்சை உங்கள் கணவர் குழந்தை விடயத்தில் கூட கேட்பதில்லை என்றால் அதற்க்காக கவலைப் படாதீர்கள். அது அவரின் சுபாவமாக கூட இருக்கலாம். உங்கள் குழந்தையை உங்களை விட்டு உலகத்தின் எந்த சக்தியாலும் அந்த உறவை பிரிக்கவோ மாற்றவோ முடியாது என்பது தானே உண்மை.

மேலும் உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் அவர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது, என்பதனால் அந்த உரிமைய்யை அவர்களுக்கு நீங்கள் தான் மனமுவந்து தர வேண்டும். ஆலோசனைகள் கேட்க வேண்டும்.முக்கியமாக குழந்தையின் மன வளர்ச்சி, மற்றும் ஆரோக்கிய சம்பந்தமான விடயங்களை கூட அவர்களிடம் கேட்டு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன் படி நடக்க முயர்ச்சி செய்ய வேண்டும். காரணம் தன் பேரக்குழந்தைக்கு எந்த பாட்டியும் தீங்கை செய்ய மாட்டார்கள் என்று அவர்களை உறுதியாக நம்ப வேண்டும். நல்லதையே நம்ப வேண்டும் அப்பொழுது தான் நமக்கெதிராக எழும் தீமைகள் கூட நன்மைகளாக மாறிவிடும்.

முக்கியமாக என்னுடைய்ய கருத்து என்னவென்றால் பெண்கள் கணவரை மட்டும் நேசிப்பதை விட்டு விட்டு,அதைவிட அதிகமாக அவரின் அன்னைய்யை தந்தைய்யை அவரின் கூட பிறந்தவர்களை அதிகமாக நேசியுங்கள்.கணவரின் ஆலோசனையை கேட்பதற்க்கு பதிலாக அவரின் அன்னையின் கருத்துக்களுக்கும் மேலும் அவர் யாரை அதிகம் நேசிக்கின்றாரோ அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை தாருங்கள். பிறகு பாருங்கள் சுற்றி சுற்றி வந்தீக என்று பாடவேண்டியதாகி விடும். முயன்று பாருங்கள்.

ஆகவே வாழ்க்கையிலும், குடும்பத்தினராலும், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனம் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் சிரிச்சிக்கிட்டிருங்க சந்தோசமயிருக்க முயர்ச்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.மேலும் இது சம்பந்தமாக எந்த விதமான சந்தேகமாயிருந்தாலும் தாராளமாக தயங்காமல் கேட்கவும். நன்றி

மேலும் சில பதிவுகள்