மைக்ரோவேவ் ஓவன்

Micriwave Ovenல் ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் குழம்பு, பொறியல் முதலியவற்றை சூடு செய்ய கூடாது என்பதை சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். இது உண்மையா? நான் இங்கு U.S.A வில் வசிக்கிறேன். நான் வேளைக்கு செல்வதால், 2 நாட்களுக்கு ஒரு முறை தான் சமைக்கிறேன். வீட்டில் குழந்தை பள்ளி செல்வதால், வேலை விட்டு வந்தவுடன் அவன் படிப்பை கவனிக்க சரியாக உள்ளது. ஒரு சில சமயம் வாரம் ஒரு முறை தான் சமைப்பேன்.
<!--break-->
சமீபத்தில் ப்ளாஸ்டிக் பாத்திறத்தில் சூடு செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கெடுதல் என்று படித்ததில் இருந்து மனதிற்கு சற்று வறுத்தமாக உள்ளது. நான் Glad, Zip Lock போன்ற டப்பாக்களை உபயோகிக்கிறேன். இதை பற்றி யாருக்காவது விஷயம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன். என்னைப் போன்று நிறைய்ய பேருக்கு அது உதவியாக இருக்கும்.

நன்றி,
சுகன்யா

anbudanஹாய் சுகன்யா,

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்கள்
உபயோகிப்பது நல்லது.

வித்யாவாசுதேவன்

anbudan

ஹலோ சுகன்யா எப்படி இருக்கீங்க? ஆமாம் நீங்கள் புத்தகத்தில் படித்த மைக்ரோஅவெனைப் பற்றிய செய்தி உண்மையாக இருக்கும் என்று நானும் நம்புவதால் அதிகமாக பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதில் பயன் படுத்துவதில்லை.மேலும் தாங்கள் கூறியுள்ள கன்டைனர்ஸ் மிகவும் மெல்லிய பிளாஸ்டிக்காலான பாத்திரங்கள் ஆகவே மிகவும் வேகமாக உருக வாய்ப்பிருக்கும். பிறகு கறியிலுள்ள எண்ணெயுடன் சேறும் பொழுது நிச்சயமாக உடல் உபாதைகள் தோன்ற வாய்ப்பிருக்கும்.ஆகவே அது போன்ற கன்டைனர்ஸ்ஸை குளிர் சாதனப் பெட்டியில் உணவை வைப்பதற்க்கு மட்டும் உபயோகித்து, சூடுபடுத்துவதை தவிர்த்து விடலாம்.

மேலும் இதைப் போன்ற பிளாஸ்டிக் டப்பாக்க்ளுக்கு பதிலாக சாப்பிடும் டின்னர்வேரிலேயே அல்லது செராமிக் தட்டில் வேண்டிய உணவை வைத்து, பிறகு அதை மைக்ரோஅவெனில் வைத்து சூடுபடுத்திக் கொண்டால் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.நன்றி.

ஹலோ வித்யா,
உங்களுடைய பதில் மிகவும் உபயோகமாக உள்ளது. நான் கண்ணாடி பாத்திரஙள் வாங்கலாம் என்று இருக்கிரேன். மிக்க நன்றி.

சுகன்யா.

நன்றி,
சுகன்யா

ஹலோ மனோஹரி மேடம்,
நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய பதிளுக்கு மிக்க நன்றி. எனக்கு இந்த செய்தியை புத்தகத்தில் படித்ததில் இருந்து மனதிற்குள் ஒரு சின்ன குழப்பம், அதனால் தான் அறுசுவையில் என்னுடைய சந்தேகத்தை பதிவு செய்தேன். ஊங்கள் பதில் மிகவும் உதவியாக உள்ளது. நான் அடுத்த முறை கடைக்கு போகும் போது கண்ணாடி (பைரெக்ஸ்) அல்லது கார்னிங்வேர் வாங்கலாம் என்று உள்ளேன். உங்கள் ஆலோசனை தேவை, please.

சுகன்யா.

நன்றி,
சுகன்யா

Pyrex Glassware வாங்கும்போது rectangular shape உள்ளதை வாங்கவும். ஃப்ரிட்ஜின் உள்ளே வைக்க easy-யாக இருக்கும்.ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கலாம்.

நன்றி...

ஹாய் வாணி,
Pyrex ல் rectangular shapes ல் பெரிய அளவில் கிடைக்குமா? ஆமாம் என்றால், USல் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?

சுகன்யா

நன்றி,
சுகன்யா

ஹலோ சுகன்யா நானும் நலமாக இருக்கின்றேன் நன்றி. தாங்கள் வாங்க பிரிபப்பட்டுள்ள இரண்டு வகையான பாத்திரங்களுமே நல்லத் தரம்வாய்ந்த பொருட்கள்தான். ஆனால் நீங்கள் அவைகளை எதற்க்கு பயன்படுத்த விரும்புகின்றீர்கள் என்பதைப் பொருத்து வாங்குவது தான் நல்லது என்று நினைக்கின்றேன்.
மைக்ரோ அவெனில் மட்டும் பயன்படுத்த வேண்டுமென்றால் வட்ட வடிவமான பாத்திரங்களாக பார்த்து வாங்கவும். இதனால் சீராக பொருட்கள் சூடாகும்.மேலும் உயரமும் குறைவாக இருந்தால் சமைக்கும் பொழுது சீக்கிரத்தில் பொருட்கள் சூடாகும்.ஆகவே உயரம் குறைவான அகலமான பாத்திரங்களயே தேர்வுச் செய்து வாங்கவும்.

மற்ற வடிவங்கள் ஸ்டவ் டாப் அவெனில் பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே வாங்கவும்.மற்றபடி குளிசாதனைப் பெட்டியில் பொருட்களை வைப்பதற்க்கு என்னைப் பொருத்தவரையில் பிளாஸ்டிக் டப்பாககளே போதுமென்று நினைக்கின்றேன்.அது தான் கையாளுவதற்க்கும் சுலபமாக இருக்கும். மேலும் சந்தேகமிருந்தாலும் கேட்கவும்.நன்றி.

ஹலோ மனோஹரி மேடம்,
நான் மைக்ரோவேவ்-வை குழம்பு மற்றும் காய்கரிகளை சூடு படுத்த மட்டுமே உபயோக படுத்துகிறேன், அதிகமாக சமைக்க உபயோகிப்பதில்லை. அதனால் நீங்கள் சொன்ன படி வட்டவடிவ பாத்திரம் வாங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது வேரு எதும் ஐடியா இருந்தால் சொல்லவும்.

சுகன்யா

நன்றி,
சுகன்யா

டியர் சுகன்யா,

சாரி, நீங்கள் கேட்டதை இப்போது தான் பார்த்தேன். மனோகரி மேடம் சொன்னது போல வட்ட வடிவமானது தான் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

எது வாங்கினாலும் airtight மூடி உள்ளதாக வாங்கவும். இன்னொன்று ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க ஏதுவாக உள்ளவையாக வாங்கினால்
ஃப்ரிட்ஜில் வைக்கவும் சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் pyrex தான் உபயோக படுத்துகிறேன். எனக்கு எந்த குழம்பு எதில் உள்ளது எனப்பார்ப்பதற்க்கும் ஃப்ரிட்ஜில் அடுக்குவதற்க்கும் கண்ணாடி பாத்திரம் சுலபமாக இருப்பதால் அதனை உபயோகப்படுத்துகிறேன். அதனால் தான் அடை பரிந்துரைத்தேன்.

நீங்கள் ஃப்ரிட்ஜில் வைப்பதற்க்கு plastic containers-ஐ உபயோகபடுத்திவிட்டு சூடு பண்ண மட்டும் use பண்ணுவதானால் corning ware வாங்கலாம். நீங்கள் மட்டுமன்றி வீட்டிற்க்கு யாரேனும் வந்தால் பரிமாறுவதற்க்கும் அழகாக இருக்கும். உள்ளெ உள்ளவை யாருக்கும் தெரியாது.

நன்றி...

நன்றி...

அன்புள்ள மனோகரி மேடம்,

நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரிந்தது. நான் rectangular shape-ல் உள்ளவைகளை உபயோகபடுத்துகிறேன். இனி வட்ட வடிவமானதாக தான் நானும் வாங்கவேண்டும்.

நன்றி...

நன்றி...

மேலும் சில பதிவுகள்