சுட்டி குழந்தை

அன்பு சகோதரிகளே,
எனக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான், ரொம்ப சுட்டி. ஒரு நிமிடம் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். படிப்பிலும் படு சுட்டி. பொருமை என்ன விலை என்று கேட்பான், எது செய்தாலும் அவசரம், சில சமையம் டெஸ்டில் அவன் அவசரத்தால் நிறைய பிழை செய்து மதிப்பெண் கம்மியாக வாங்குகிறான். நானும் எவ்வளவோ தரம் பொருமையாக இருக்கும்படி சொல்லி பார்த்துவிட்டேன், நான் சொல்லும் பொழுது சரி அம்மா அப்படியே செய்கிறேன் என்பான் (ரொம்ப சமர்த்தாக). ஆனால் அடுத்த நாளே அவசரப்பட்டு எதாவது செய்வான்.

எங்காவது வெளியில் சென்றாலும் இதே நிலை தான். அவன் பள்ளியிலும் பாடம் கற்பதிலும் இவன் அனைவறை விடவும் சற்று வேகமாக கற்றுக்கொள்கிறான். அதுக்கப்புரம் அவனுக்கு பொருமை இருப்பதில்லை, அதாவது அடுத்த பிள்ளைகளுக்க டீச்சர் மறுபடியும் சொன்னால் இவனுக்கு போர் அடித்து விடுகிறது. அதனால் அவன் ஆசிரியர், இவனை நீ கொஞ்ச நேரம் விளையாடு அல்லது படங்களுக்கு கலர் அடித்து கொண்டிரு என்று சொல்லிவிட்டு மத்த பசங்களுக்கு பாடம் எடுப்பாராம்.

நாங்கள் இருப்பது அமெரிக்காவில், இங்கு குழந்தைகளை அவர்கள் போகில் தான் விட்டு பிடிப்பார்கள். நானும் என் கணவரும் எவ்வளவோ பொருமையை பற்றி எடுத்து சொல்லிப்பார்தோம். அவன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறான். சில சமையம் தனியாக ஒரு இடத்தில் உட்காற சொல்லி இருக்கிறோம் (10 நிமிடம்), அப்படி செய்தால் கோபப்படுகிறான்.

எங்களுக்கு எப்படி கையால்வது என்ரு தெரிய வில்லை. நார்மலாவே அவனுக்கு நிறைய கோபம் வருகிறது. ஒரு சில சமயம் ரொம்ப நல்ல பையனாக இருக்கிறான். சரி யோகா அல்லது தியானம் கற்றுத்தரலாம் என்றால், அவனுக்கு அதில் இஷ்டம் இருப்பதில்லை. வலுக்கட்டாயமாக தினிக்கவும் எங்களுக்கு விருப்பம் இல்லை.

குழந்தைக்கு எப்படி பொருமையாக இருப்பதை சொல்லித்தருவது என்று தெரிந்தவர்கள் ஐடியா தந்து உதவினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

நன்றி,
srinithi

ஹலோ ஸ்ரீநிதி, எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் மகனுக்கு எப்படி பொருமையாக இருக்க சொல்லிதருவது என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக எனக்கு தெரிந்ததைக் கூறுகின்றேன். பொதுவாக குழந்தைகளின் சுபாவம் வயதைப் பொறுத்து மாறிவிடும். சில சுபாவங்கள் மாறாமலும் இருக்கும். ஆகவே சிறு குழந்தைகளின் சுபாவத்தை வைத்து நாம் அதிகம் கவலைப் பட தேவையில்லை என்று தான் கூறுவேன்.

மேலும் உங்களின் கேள்விக்கு விடையாக முதலில் நீங்கள் இதைக் குறித்து கவலைப் படுவதைப் நீக்கி விட்டு அதற்கு பதிலாக பொறுமையாக இருக்க பழகிக் கொள்வது தான் நல்லது.காரணம் உங்களின் பொறுமையான அணுகு முறை மட்டும் தான் உங்கள் குழந்தைக்கு தேவை வேறொன்ரும் தேவையில்லை என்று தான் கூறுவேன்.

குழந்தைக்கு பொருமை தேவை என்று நீங்கள் கூறியுள்ளதுப் போல் யோகா போன்ற பயிற்சிகள் பயன் தராது, அதற்க்கு பதிலாக அவருக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுத்தி, தாங்களும் அதில் ஈடுபட்டு அவரை சாந்தமாக வைத்துக் கொள்வது நல்லது.ஆகவே வளரும் குழந்தைகள் பொருமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்களை வளர்க்கும் பெற்றோர்களுக்குத் தான் பொருமை தேவை என்பது தான் என் கருத்து.

எந்தெந்த விசயங்கள் அவருக்கு பிடிக்காதோ அல்லது கோபத்தை தூண்டுபவையாக இருக்கின்றதோ அதை அறவே தாங்கள் செய்யாதிருப்பது நல்லது. முக்கியமாக குழந்தைக்கு புத்திமதி கூறாதிருப்பதே நல்லது. காரணம் குழந்தைகளால் அதை புரிந்துக் கொண்டு கடைப்பிடிக்க முடியாது. ஆகவே தொடர்ந்து உங்களுக்கு வேண்டியதை நீங்கள் சளிப்படையாமல் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பொறுமையாக இருப்பதென்றால் உதாரணமாக உங்கள் குழந்தைக்கு கோபம் வந்து வீட்டிலுள்ள பொருட்களை அல்லது விளையாட்டுச் சாமான்களை இங்கும் அங்கும் விட்டெரிகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நீங்கள் பதிலுக்கு கோபப்படாமல், அவரிடம் தயவுசெய்து இந்தப் பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைக்கமுடியுமா அம்மாவிற்க்கு அதிக வேலை இருக்கின்றது என்று, கெஞ்சுவதுப் போல் கேட்டீர்களானால் நிச்சயமாக அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நம்பலாம்.

மேலும் குழந்தைகளுடன் எந்த விசயத்தைப் பற்றியாவது அவர்களின் கவனத்தைச் செலுத்த வைக்க வேண்டுமென்றால் ,அவரின் உயரத்திற்கேற்றவாறு நீங்கள் அமர்ந்துக் கொண்டு அவரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து உங்களின் வேண்டுகோளை மிகவும் தாழ்மையான குரலில் கூற வேண்டும் அல்லது மெதுவாக பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நம்பலாம்.

குழந்தையை எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும், தனிமைப் படுத்துவது அல்லது பொருமையாக இருக்க தண்டனைக் கொடுப்பது போன்ற செயல்களை தவிர்த்து விடுவது நல்லது. கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டீர்களானால் மிகவும் நல்லது. அந்த புத்தகங்களை நீங்கள் படித்து காட்டி ஆர்வத்தை வளர்க்க வேண்டும். ஒரு வருடத்திற்க்கு சப்ஸ்கிரைப் செய்து குழந்தையிடம் கூறிவிடுங்கள். பிறகு பாருங்கள் ஆர்வத்தை.

எந்தக் காரணத்தைக் குறித்தும் குழந்தைய்யை பயமுருத்துவது எந்த பலனையும் தராது. உதாரணமாக அப்பாவிடம் கூறுகின்றேன். அல்லது நண்பரிடம் கூறுகின்றேன் போன்று குழந்தைகளை பயமுருத்தாமல் வளப்பது நல்லது.

குழந்தை செய்யும் ஒரு சிறு விசயத்தைக் கூட உதாரணமாக சிறிய கைவேலைப்பாடு போன்ற விசயங்களை பெரியதாக புகழ்ந்து பாராட்டி மகிழ்ச்சியடைய வேண்டும். எல்லோரிடமும் அதைப் பற்றி சத்தமாக பேசி தாங்கள் மகிழ்ச்சியடைவதை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும். இதனால் அம்மாவை தான் மகிழ்ச்சியடைய வைத்தோம் என்று குழந்தைகளால் நன்கு உணர முடியும். முயன்று பாருங்கள். இதுப் போன்ற நம்முடைய்ய செயல்கள் கூட அவர்களை அமைதியாக வைத்திருக்க முடியும் என்று நினைக்கின்றேன்.

குழந்தைக்கு நீங்கள் அடிக்கடி முத்தமிடுவதைப் போலவே அவரிடமிருந்து நீங்கள் இருவருமே முத்தத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். இதனால் உங்களிடம் அவர் நெருக்கமாக உள்ளதை குழந்தையால் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.

பொதுவாக இதுப் போன்ற படு சுட்டியான குழந்தைகளை படிப்பைத் தவிர்த்து விளையாட்டில் அதிகமாக அவரை ஈடுபடுத்தி விட்டால் பின்னாளில் கட்டாயமாக ஏதாவதொரு விளையாட்டில் சாதனை படைக்கக் கூடிய அளவில் திறமைசாலியாக இருப்பார்கள். காரணம் படிப்பில் அதிக கவனமெடுத்து படிக்க அவர்களுக்கு பொருமையும், அதில் அதிக நாட்டமுமிருக்காது என்று நினைக்கின்றேன்.

ஆகவே தாங்கள் இதைக் குறித்து மேலும் கவலைப் படுவதை விட்டு விட்டு நீங்களும் உங்கள் கணவரும் உங்கள் குழந்தையை மிகவும் மகிழ்ச்சியுடனும், பொருமையுடன் வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மேற்க்கண்ட குறிப்புகளில் ஒரு சிலவாவது தங்களுக்கு உதவுமென்று நினைக்கின்றேன். மேலும் தங்களுக்கு இதைப் பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருந்தாலும் தயங்காமல் கேட்கவும்,இன்னும் விரிவாக கூட உரையாடலாம்.
நன்றி.

Well explained, Mrs.Manohari...:)

Kids are kids... Parents should'nt expect them to behave like grownups, be it at home or elsewhere...They'll mature as they growup...:)

ஹலோ Dsen எப்படி இருக்கின்றீர்கள்? பதில் எழுதியதற்கு மிக்க நன்றி.தங்களுக்கு பதிலைப் படித்தவுடனே நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் மற்ற பதிவுகளிலும் கவனம் சென்றபடியால் மறந்துவிட்டேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நீங்கள் கூறியிருப்பது மிக்க சரி. குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிக அளவில் எதையும் எதிர்ப் பார்க்கக் கூடாது தான். ஆனாலும் சில நேரங்களில் குழந்தைகள் செய்யும் செயல்கள் பெற்றோர்களுக்குக் கூட சலிப்பை ஏற்படுத்திவிடும், இதில் திருமதி ஸ்ரீநிதியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே தான் பொருமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். பெற்றோரே பொருமைய்யை இழந்து விட்டால் பிறகு அந்தக் குழந்தைகளை வேறு யாராலும் சரி படுத்த முடியாது தானே.

மேலும் தாங்கள் கூறியிருப்பதுப் போல், சிறு வயதில் படு சுட்டியான பெரும்பாலானக் குழந்தைகள் வளர வளர மிகவும் பொருமைசாலியாகக் கூட மாறிவிடுவதைப் பார்த்திருக்கின்றேன்.ஆகவே பெற்றோர்கள் இதற்கு கவலைப் படத் தேவையில்லை என்று தான் கூறுவேன்.தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஹலோ மனோஹரி மேடம்,

எப்படி இருக்கிறீர்கள்?. தாமதமாக பதில் அளிக்க மண்ணிக்கவும். வேலை பழு காரனமாக அறுசுவை பக்கம் சிறிது நாட்களாக வரமுடியவில்லை. உங்கள் பதில் மிகவும் உதவியாக உள்ளது. நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலில் உள்ள ஒரு சில பாயின்டுகள் சரியாக இருந்தது. நானோ எனது கணவரோ குழந்தையிடம் பெரியவர்களை போன்ற பொருமையை எதிர் பார்க்கவில்லை நாங்கள் எதிர்பார்பதோ, அவன் வயதிற்கு உள்ள நிதானம் தான்.

உதாரனத்திற்கு, அவன் வீட்டுபாடம் செய்யும் பொழுது அவசரம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாக செய்யுமாரு கேட்கிறோம். அவன் அவசரத்தால் பிழைகள் நிறைய வருகிறது. இதே தப்பை பள்ளியிலும் செய்கிறான், அதனால் அவனுக்கு மதிப்பெண் கம்மியாகி விடுகிறது. டெஸ்டை சீக்கிரம் முடித்தாலும், பதிலை ஒரு முறை சரி பார்க்க வேண்டும் என்பதை, எவ்வளவு முறை சொன்னாலும் அவனுக்கு தெரிய மாட்டேன்கிறது. அதாவது, அவனுக்கு அனைவருக்கும் முன் நாம் செய்து முடித்து விடவேண்டும் என்ற அவசரத்தில், தான் செய்யும் தப்பு தெரிவதில்லை. எங்கள் கவலை என்னவென்றால், இவன் இப்படியே இருந்தால் பெரிய வகுப்பு போகப்போக ரொம்ப கஷ்டபடுவான் என்பது தான்.

பேசுவதில் கூட அவனுக்கு அவசரம், வேக வேகமாக பேசுகிறான், அதனால் சில சமயம் அவன் என்ன சொல்கிறான் என்பதுகூட தெரிவதில்லை. நாம் மறுபடி மறுபடிகேட்டால் 'ஒன்றும் இல்லை உங்களுக்கு புரியவில்லை விட்டு விடுங்கள்' என்கிறான் (இதற்கும் ஜீனுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா ஏன் என்றால் எனது தந்தை மிக வேகமாக பேசுவார்?). அவனது பேச்சிலும், பேசும் பொழுது காட்டும் உணர்விலும், ஒரு ஈர்ப்பு தன்மை இருக்கிரது. ஆனால் அவனது வேகத்தால் அந்த ஈர்ப்புத்தன்மை எடுபடுவதில்லை.

அதனால் இப்பொழுதே பொருமையாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தோம். அவனுக்கு படிப்பிலோ அல்லது புதியதாக கற்று கொள்வதிலோ எந்த கஷ்டமும் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில், மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். கற்றுக்கொடுத்தால் கற்பூரமாக சீக்கிரத்தில் புறிந்து கொள்கிறான்.

நீங்கள் சொல்வதைபோல் அவன் செய்யும் சிறு விஷயத்திற்கு கூட நாங்கள், மிகவும் பாராட்டுகிறோம். அவன் 100 மார்க் வாங்கினால், இரவு உணவு வெளியில் சாப்பிட்டோ அல்லது அவனுக்கு பிடித்த இனிப்பு வீட்டில் செய்து கொண்டாடுவோம். அவன் மார்க் ஷீட் பார்த்தவுடன், நானும் என்னவரும் அவனை கட்டி அனைத்து முத்தமிடுவோம். அவன் எதாவது ஆசைப்பட்டாலும், வாங்கி கொடுக்கிறோம், சில சமயம் எடுத்து சொல்வோம், கண்ணா இது கொஞ்சம் விலை அதிகமா இருக்கு அடுத்த முறை பார்க்கலாம் என்று. அவனும் கேட்டு கொள்வான்.

அவனிடம் உள்ள இந்த அவசரத்தன்மையை எப்படி நிதான நிலைக்கு மாற்றுவது என்று தான் தெரியவில்லை. அவனுக்கு போதிய சுதந்திரம் கொடுக்கிறோம், சில சமயம் , அம்மா ப்ளீஸ் கொஞ்சம் விளையாடிட்டு அப்புறம் படிக்கிறேன் என்பான், நானும் அவரும் சரி என்று அவன் போக்கில் விட்டுத்தான் பிடிக்கிறோம்.

அவனுக்கு உடைகள் வாங்க போனாலும், அவன் இஷ்டப்பட்டதை வாங்க அனுமதிக்கிறோம். சில சமயம் இல்லடா கண்ணா அம்மா சொல்றதை இந்த தரம் வாங்கிக்கோ என்றாலும் சமர்த்தா கேட்டுகொள்வான்.

செய்யும் செயலில் கொஞ்சம் நிதானம் கடைபிடித்தால், அவன் வாழ்க்கை நன்கு அமைய மிகவும் உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து. உங்களிடம் எதும் ஐடியா இருக்கா?

ஸ்ரீநிதி

ஹலோ மனோஹரி மேடம்,

எப்படி இருக்கிறீர்கள்?. தாமதமாக பதில் அளிக்க மண்ணிக்கவும். வேலை பழு காரனமாக அறுசுவை பக்கம் சிறிது நாட்களாக வரமுடியவில்லை. உங்கள் பதில் மிகவும் உதவியாக உள்ளது. நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலில் உள்ள ஒரு சில பாயின்டுகள் சரியாக இருந்தது. நானோ எனது கணவரோ குழந்தையிடம் பெரியவர்களை போன்ற பொருமையை எதிர் பார்க்கவில்லை நாங்கள் எதிர்பார்பதோ, அவன் வயதிற்கு உள்ள நிதானம் தான்.

உதாரனத்திற்கு, அவன் வீட்டுபாடம் செய்யும் பொழுது அவசரம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாக செய்யுமாரு கேட்கிறோம். அவன் அவசரத்தால் பிழைகள் நிறைய வருகிறது. இதே தப்பை பள்ளியிலும் செய்கிறான், அதனால் அவனுக்கு மதிப்பெண் கம்மியாகி விடுகிறது. டெஸ்டை சீக்கிரம் முடித்தாலும், பதிலை ஒரு முறை சரி பார்க்க வேண்டும் என்பதை, எவ்வளவு முறை சொன்னாலும் அவனுக்கு தெரிய மாட்டேன்கிறது. அதாவது, அவனுக்கு அனைவருக்கும் முன் நாம் செய்து முடித்து விடவேண்டும் என்ற அவசரத்தில், தான் செய்யும் தப்பு தெரிவதில்லை. எங்கள் கவலை என்னவென்றால், இவன் இப்படியே இருந்தால் பெரிய வகுப்பு போகப்போக ரொம்ப கஷ்டபடுவான் என்பது தான்.

பேசுவதில் கூட அவனுக்கு அவசரம், வேக வேகமாக பேசுகிறான், அதனால் சில சமயம் அவன் என்ன சொல்கிறான் என்பதுகூட தெரிவதில்லை. நாம் மறுபடி மறுபடிகேட்டால் 'ஒன்றும் இல்லை உங்களுக்கு புரியவில்லை விட்டு விடுங்கள்' என்கிறான் (இதற்கும் ஜீனுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா ஏன் என்றால் எனது தந்தை மிக வேகமாக பேசுவார்?). அவனது பேச்சிலும், பேசும் பொழுது காட்டும் உணர்விலும், ஒரு ஈர்ப்பு தன்மை இருக்கிரது. ஆனால் அவனது வேகத்தால் அந்த ஈர்ப்புத்தன்மை எடுபடுவதில்லை.

அதனால் இப்பொழுதே பொருமையாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தோம். அவனுக்கு படிப்பிலோ அல்லது புதியதாக கற்று கொள்வதிலோ எந்த கஷ்டமும் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில், மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். கற்றுக்கொடுத்தால் கற்பூரமாக சீக்கிரத்தில் புறிந்து கொள்கிறான்.

நீங்கள் சொல்வதைபோல் அவன் செய்யும் சிறு விஷயத்திற்கு கூட நாங்கள், மிகவும் பாராட்டுகிறோம். அவன் 100 மார்க் வாங்கினால், இரவு உணவு வெளியில் சாப்பிட்டோ அல்லது அவனுக்கு பிடித்த இனிப்பு வீட்டில் செய்து கொண்டாடுவோம். அவன் மார்க் ஷீட் பார்த்தவுடன், நானும் என்னவரும் அவனை கட்டி அனைத்து முத்தமிடுவோம். அவன் எதாவது ஆசைப்பட்டாலும், வாங்கி கொடுக்கிறோம், சில சமயம் எடுத்து சொல்வோம், கண்ணா இது கொஞ்சம் விலை அதிகமா இருக்கு அடுத்த முறை பார்க்கலாம் என்று. அவனும் கேட்டு கொள்வான்.

அவனிடம் உள்ள இந்த அவசரத்தன்மையை எப்படி நிதான நிலைக்கு மாற்றுவது என்று தான் தெரியவில்லை. அவனுக்கு போதிய சுதந்திரம் கொடுக்கிறோம், சில சமயம் , அம்மா ப்ளீஸ் கொஞ்சம் விளையாடிட்டு அப்புறம் படிக்கிறேன் என்பான், நானும் அவரும் சரி என்று அவன் போக்கில் விட்டுத்தான் பிடிக்கிறோம்.

அவனுக்கு உடைகள் வாங்க போனாலும், அவன் இஷ்டப்பட்டதை வாங்க அனுமதிக்கிறோம். சில சமயம் இல்லடா கண்ணா அம்மா சொல்றதை இந்த தரம் வாங்கிக்கோ என்றாலும் சமர்த்தா கேட்டுகொள்வான்.

செய்யும் செயலில் கொஞ்சம் நிதானம் கடைபிடித்தால், அவன் வாழ்க்கை நன்கு அமைய மிகவும் உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து. உங்களிடம் எதும் ஐடியா இருக்கா?

ஸ்ரீநிதி

மண்ணிக்கவும் இரண்டு முறை "பதிவு செய்" பட்டனை சொடிக்கிவிட்டேன்.

ஹலோ ஸ்ரீநிதி, நான் நல்ல சுகம் அதுப் போல் நீங்களும் சுகமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். தங்கள் பதிலைப் பார்த்தேன் அதில், குழந்தை வளர்ப்பில் உங்கள் இருவரின் அணுகு முறையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.அதுப் போல் உங்கள் குழந்தையின் சுபாவமும், அவர் வாழ்க்கையில் எந்த பிரச்சனையையும் விளைவிக்காது என்றே கருதுகின்றேன்.உங்கள் குழந்தையைப் பொறுத்தவரையில் அவருக்கு தேவை பொறுமையல்ல, தன்னம்பிக்கை மட்டும் தான் என்று நம்புகின்றேன்.அதை உங்கள் இருவரால் மட்டும் தான் வளர்க்க முடியும். ஆகவே உங்கள் குழந்தைக்கு உதவ உங்களுக்குத்தான் பொறுமை அவசியம் என்பதை வலியுருத்தவும்,தங்களின் கவலைக்கு மருந்தாகவும் இந்த ஆலோசனை தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.ஆகவே மிகவும் உன்னிப்பாகவும், சுவாரஸியமாகவும் உங்கள் கணவரையும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

தங்கள் குழந்தையைப் போலவே தான் பேற்பாதியாவது மற்ற குழந்தைகளின் சுபாவம் இருக்கும், ஆனாலும் வளர வளர பழக்க வழக்கங்கள் என்று பார்க்கும்பொழுது நீங்கள் கூறியிருப்பதுப் போல் ஜீன்களின் காரணமாக இது போன்ற அவசர புத்தி அல்லது பொருமையின்மை ஏற்ப்பட காரணமாயிருக்கும் என்று அனுபவப்பூர்வமாக எண்ணால் உறுதியாக கூற முடியும்.

ஆகவே தாங்கள் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகளைக் குறித்து கவலைப் படுவதில் அர்த்தமில்லை. அவர் வழியிலேயே விட்டு விடவும். பெரியவரானதும் நீங்கள் எதிர்பார்ப்பதுப் போன்ற பொறுமையான குணவானாகி விடுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் பொருப்பு என்பதை தாங்கள் எதிர்ப்பார்க்காமல் இருப்பது தான் நல்லது.

இதுப் போன்ற பிள்ளைகளுக்கு பெற்றோரின் புத்திமதியோ, பெரியவர் அல்லது ஆசிரியரின் அறிவுரையோ போன்ற, போதிப்புகள் எடுப்படாது.அறியுரையை பொறுமையாக கேட்பார்கள், ஆனால் அதை செயல் படுத்த தவறுவார்கள். காரணம் அதி புத்திசாலியாக இருப்பதால் நாம் கூறும் எல்லா விசயங்களைப் பற்றியும் மாற்றாகவே யோசிப்பார்கள்.

பொதுவான விசயங்களில் மிகவும் வெகுளியாக இருப்பார்கள். ஆனால் ஏமாறமாட்டார்கள்.ஏமாருவதுப் போல் தோன்றினாலும் அது அவர்களாக பார்த்து விட்டுக் கொடுத்திருப்பார்கள் என்று பின்னால் தான் மற்றவருக்கு புரியவரும்.

எல்லோரிடமும் பாசமாக இருப்பார்கள், ஆனால் அதற்க்கு அடிமையாக மாட்டார்கள். ஆகவே உன் மீது உயிரையே வைத்திருக்கின்றோம் போன்ற வசனங்கள் எல்லாம் எடுபடாது.பெற்றோரிடம் கூட இடைவெளி விட்டு தான் பழகுவார்கள். ஆனால் இனிமையாக பழகுவார்கள்.

தங்களின் அடக்கமான பண்பினால் மற்றவர்களை மிகவும் எளிதாக வசீகரித்து விடுவார்கள், ஆனால் யாருக்கும் தீங்கை கணவிலும் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.சுகவாசியாகவும், ஆடம்பரமாக வாழ்வதிலும் அதிக நாட்டமுடன் இருப்பார்கள்.
மிகவும் வெளிப்படையாக திறந்த புத்தகமாக இருப்பதுப் போல் மற்றவர்களுக்கு தோன்றினாலும் தனக்கென்று ஒரு பக்கத்தை மூடியே வைத்திருப்பார்கள்.

இதுப் போல் இன்னும் நிறைய இருக்கலாம். ஆனால் இதுப்பொன்ற சுபாவங்களை அவர்களிடமிருந்து கண்டுக்கொள்ள வேண்டுமானால், பெற்றோர்கள் காத்திருக்க வேண்டும்.ஆனால் பெற்றோரின் நடத்தையால் இதுப் போன்ற குணமுடைய குழந்தைகளை நல்வழிப் படுத்தவும் முடியும், தவறானப் பாதையிலும் விட்டு விட முடியும். ஆகவே இதுப் போன்ற சுட்டிக் குழந்தைகளின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கு என்ன என்று பார்த்தோமானால்:

குழந்தையின் முன்பாக நீங்கள் எதற்கும் சண்டை போட கூடாது.
அடிகடி இடமாற்றுவது, வீட்டை மாற்றுவது, பள்ளிகூடத்தை மாற்றுவது போன்ற நிலையிலாத வாழ்க்கை முறையைத் தவிர்த்து விடலாம்.
கட்டுதிட்டங்கள் போடகூடாது. அதற்கு பதில் வேண்டுகோள் விடுக்கலாம்.

உங்களுக்கு அவரின் செயல்களின் நிமித்தம் கோபம் ஏற்ப்படால் அதை நீங்கள் ஒருவர் மட்டும் கையாள வேண்டும். அப்பாவிடம் கூறுகின்றேன் போன்ற மிரட்டல்கள் கூடாது இதனால் யாரை நேசிப்பது என்று குழப்பமடைய நேரிடும்.
அதுப் போல் உங்கள் கணவர் கையாளும் விசயத்தைக் கூட நீங்கள் அங்கிருக்காமல் நகர்ந்து விடுவது நல்லது. அதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்றுவிடக் கூடாது. கண் பார்வையிலே இருக்க வேண்டும் ஆனால் தந்தை கண்டிக்கும் பொழுது கண்டுக் கொள்ள கூடாது.
எல்லோரிடமும் அவர் காதுபட அவரின் குறும்புகளையும், அஜாக்கிரதையைப் பற்றி பேசக்கூடாது.காரணம் அவர்கள் மனதில் நாம் இப்படிதான் போல என்று கருதிவிட நாமே வாய்பளித்து விடுவோம்.
உங்களின் எதிர்பார்ப்பை குழந்தையின் மீது திணிக்க வேண்டாம். அதற்கு பதில் நம்பிகையை நாள் தோறும் திணித்து வரவும்.
தவறு செய்யும் போது கூட உங்கள் அதிர்ப்தியைக் கொஞ்சம் கூட காட்டக் கூடாது. பதிலாக அவர் செய்த தவரைப் பற்றி பேச வேண்டும். கருத்தை மட்டும் கூற வேண்டும். யோசனைச் செய்ய விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. காரணம் கற்பூரத்தைப் போல் உங்களின் கருத்து அவருக்கு ஏற்கெனவே அதி விரைவில் உள்வாங்கியிருக்கும். ஆகவே உடனே டாப்பிக்கை மாற்றி விட வேண்டும்.
வீட்டின் சூழ்நிலை கூடிய மட்டும் மகிழ்ச்சி நிறைந்ததாக கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

காரணம் மறைமுகமாக நீங்களும் உங்கள் கணவரும் சண்டை போட்டால் கூட தனது சாமார்த்தியதால் அவரால் சூழ்நிலையை எளிதாக கண்டுக் கொள்ள முடியும். ஆகவே குழந்தை வீட்டில் இல்லாத சமையத்தில் மட்டும் சண்டையை துவக்கலாம்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தான் காரணம்மில்லா விட்டாலும் கூட, இவர்கள் மனச்சோர்வடைந்து விடுவார்கள். ஏனென்றால் இறுக்கமான சூழ்நிலையை இவர்களால் சமாளிக்க முடியாத இளகிய மனதுடன் இருப்பார்கள்.

ஆகவே குழந்தையின் நலனுக்காக தங்களின் சொந்த கோபதாபங்களை விட்டுக் கொடுக்குமாரு கேட்டுக் கொள்கின்றேன்.
வீட்டில் எந்நேரமும் தங்கள் குழந்தையைப் பற்றி புகழ்ந்துக் கொண்டே இருங்கள். நேரிடையாக நீ புத்திசாலி, உன்னால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, நீ எங்களுக்கு மகனாக கிடைத்திருப்பதற்கு நானும் அப்பாவும் மிகவும் லக்கியானவர்கள்,போன்று தினமும் கூறும்படியான சந்தர்பத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. காரணம் நமக்கு வேண்டுமானால் இது வெறும் வார்த்தைகள், ஆனால் வளரும் குழந்தைகளுக்கு அவர்களை நல்வழிப்படுத்த,அமைதிபடுத்த, தன்னம்பிக்கையை வளர்க்க, பயன்படும் சக்தி வாய்ந்த ஆயுதமாகவே கருதலாம்.

அதேப் போல் நெகடிவ்வான விசயங்களை அவர் தவறு செய்யும் சந்தர்பங்களில் பேசாமல் பிரச்சனையை மட்டும் அனுகி அதற்கு மட்டும் தீர்வு காணச் செய்து, பிறகு நல்ல மூடில் குழந்தை இருக்கும் பொழுது பக்கதில் படுத்துக் கொண்டோ தலையை கோதி விட்டுக் கொண்டு, அல்லது கை கால்களை பிடித்து விட்டுக் கொண்டு சாவகாசமாக மெதுவாக அமைதியான குரலில் பேசலாம்.அமைதியாக கூறும் விசயங்கள் மிகவும் எளிதில் அவர்களை சென்றடையும்.

நீங்கள் படிப்பை பற்றியோ கவனக்குறைவால் அவர் எடுக்கும் மார்குகளைப் பற்றியோ கவலையே படாதீர்கள்.மார்கு மட்டும் ஒருவரின் திறமையை நிச்சயிப்பதிலை. கிடைக்கும் வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு செம்மை படுத்துகின்றார்கள் என்பதில் தான் அவர்களின் திறமை வெளிப்படும்.
நூறு மதிப் பெண்கள் எடுக்கும் பொழுது நாம் காட்டும் உற்சாகமும் மகிழ்ச்சியும், அவர்களாகவே சாப்பிட்டு தட்டை காலி செய்வதிலும் காட்ட வேண்டும், பள்ளிகூடம் அனுப்ப அவர்களை தயார்படுத்த ஒத்துழைப்பிற்கும் நன்றி கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் உற்சாகத்தை வழங்குவதால் அவர்கள் செய்யும் எல்லா விசயங்களைக் குறித்தும், அவர்களுக்குல்ல பங்கை அவர்களால் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.

ஆகவே நல்ல புத்திசாளியான, திறமை வாய்ந்த பிள்ளையத்தான் தாங்கள் பெற்றிருகின்றீர்கள். அதற்கு அந்த ஆண்டவனுக்கு நீங்கள் நன்றி சொல்லி சந்தோசமுடன் உங்கள் பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடைசியாக ஒரு விசயத்தை உங்களுக்கு மட்டுமல்ல மற்ற இளம் தாய்மார்களுக்கும் வளியுருத்த விரும்புகின்றேன், அதாவது பொறுமை, நிதானமாக செயல்படுவது, கவனமாக இருப்பது,கோபப்படுவது, வருத்தப்படுவதுப் போன்ற விசயங்கள் மனிதர்களின் கூடவே பிறக்கும் குணதிசயம்.ஆகவே இந்த குணதிசயங்களின் மூலமாக பிள்ளைகள் ஓரளவிற்கு தன்னை காத்துக் கொள்ள யார் உதவியுமில்லாமல் கூட அவர்களால் நிச்சயமாக முடியும்.பொருமையின்மையால் பெரியவர்கள் செய்யும் காரியங்களை பட்டியல் போட ஆரம்பித்தால் இந்த ஒரு நாள் போதாது என்றே நினைக்கின்றேன். மேலும் தாயின் இதயத் துடிப்பை அந்த தாயின் வயிற்றிலேயே உணர்ந்தவர்கள் குழந்தைகள்,ஆகவே அவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை எவ்வளவு பெரியவர்களானாலும் அவர்களால் அதை உணர முடியும். ஆகவே குழந்தையைப் பற்றி நல்லவிசயங்களையே நினையுங்கள், அப்பொழுது தான் அது நல்லதாகவே பாஸிட்டிவாகவே வெளிப்படும் என்பது என் கருத்து.

இவ்வாறு சுட்டியான குழந்தைகளைக் கூட பெற்றோரின் அணுகு முறையினால் அவர்களை அமைதிபடுத்தி, நீங்கள் நினைப்பதை சாதிக்கலாம் என்று முழு மனதாக நம்பலாம், நானும் நம்புகின்றேன்.மேற்கொண்டு எழும் எந்த சந்தேகங்களையும் கூட தயங்காமல் கேட்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

டியர் சஹோதரி மனோஹரிக்கு,
நான் நலமாக உள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். தாமதமாக பதில் அனுப்புவதற்கு மண்ணிக்கவும், நாங்கள் வெளியூர் சென்று, இன்று தான் வந்தோம். உங்கள் பதில் எங்களுக்கு 100 சதவிகிதம் பொருந்துகிறது. நீங்கள் கூறியதுபோல் நான் கடவுளுக்கு இதுபோன்ற அருமையான மகனை கொடுத்ததற்காக நன்றி கூறுகிறேன். உங்கள் பதிலில் இருந்து நானும் எனது கணவரும், குழந்தைக்கு தேவை தன்னம்பிக்கை தான் என்பதை புறிந்து கொண்டோம். உங்கள் பதில் மிகவும் உதவியாக உள்ளது. இதுவரை இது போன்ற ஆலோசனைகளை கேட்க தகுந்த நபர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது அந்த கவலை இல்லை, அறுசுவை மற்றும் மனோஹரி மேடம் இருக்க கவலை ஏன்.

நீங்கள் என்னக்காக நேரம் ஒதுக்கி மிகவும் உபயோகமான பதில் அளித்தமைக்கு மிக மிக நன்றி. எனக்கு ஒரு நல்ல சகோதரி கிடைக்க செய்தமைக்கு அறுசுவைக்கு நன்றி.

ஹலோ ஸ்ரீநிதி நானும் நல்ல சுகமுடன் உள்ளேன், நன்றி. தங்களுக்கு எனது ஆலோசனைகள் உதவுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் இதைப் போல் மற்ற எந்த விதமான ஆலோசனைகளையும் தயங்காமல் இந்த சகோதரியிடத்தில் கேட்கலாம், அல்லது மன்றத்தில் பதிக்கலாம். தெரிந்தால் கட்டாயமாக விடையளிப்பேன் என்று உறுதியாக கூறுவேன். மிக்க நன்றி டியர்.

Dear Manohari madam,

இப்பொழுது தான் இந்த thread ஐ படித்தேன்.எவ்வளோ ஆழமான + அற்புதமான கருத்துக்கள். என்னோட பொண்ணும் ரொம்ப சுட்டி.ஆனா பொறுமை கிலோ எவ்வளவுனு கேப்பா.எனக்கு ஒரு கவலை இருக்கு.எப்பவும் அவ தான் centre of attraction ஆக இருக்கனும்.அப்படி அந்த எடத்துல அவள யாரும் கவனிக்கலேனா உடனே அங்க இருக்க கூடாது.இப்படி இருக்கிறதுனால் எனக்கு என்ன பயம்னா inferiority complex வந்துடுமோனு பயம்.Your opinion pls.

cheers
Shuba

cheers
Shuba

மேலும் சில பதிவுகள்