ட்ரை ஃபில்

தேதி: May 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

அறுசுவை தளத்தில் ஏராளமான இஸ்லாமிய உணவுக் குறிப்புகளைத் தந்துள்ள <a href="experts/216" target+"_blank">திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் </a>அவர்கள், இந்தக் குறிப்பினையும் வழங்கி, செய்முறையையும் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். காரைக்காலை சொந்த ஊராக கொண்டு, அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியில் சுமார் 5 வருடங்கள் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது வசிப்பது பிரான்ஸில்.
<br /><br />
இவரது தாயார் பாரம்பரிய இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். சிறுவயது முதல் தாயாரிடம் இருந்து சமையல் கற்றுக் கொண்ட இவருக்கு, அவரைப் போலவே அனைத்து வகை இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதிலும் திறன் பெற வேண்டும் என்பது ஆசை. கணவர் திரு. ஷர்ஃபுதீனும் சமையல் கலையில் வல்லவர். மலேசிய நாட்டில் சுமார் 8 வருடங்கள் உணவு விடுதி நடத்தியவர். அனைத்து வகை உணவுகளையும், மிகவும் வேகமாக தயாரிப்பதில் தனிப்பட்ட திறன் வாய்ந்தவர். கணவரின் ஊக்கமும், பயிற்சியும் திருமதி. அஸ்மா அவர்களின் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. புதுப்புது உணவுகள் தயாரிப்பதை தனது பொழுதுபோக்காகவே வைத்துள்ளார்.

 

<b>முதல் பாகம் </b>
பழக்கலவை (Fruit Cocktail) - 1 டின்
வெஜிடபிள் (கிரிஸ்டல்) ஜெல்லி (75 g பாக்கெட்) - ஒன்று
தண்ணீர் - 350 மில்லி
<b>இரண்டாம் பாகம் </b>
கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 200 மில்லி
சீனி - 3 டீஸ்பூன்
ஐஸ்கிரீம் எஸென்ஸ் அல்லது வனிலா எஸென்ஸ் - 5 துளிகள்
<b>மூன்றாம் பாகம் </b>
ஃபுல் கிரீம் - ஒரு பாக்கெட்
சீனி - 3 டேபிள் ஸ்பூன்
<b>அலங்காரத்திற்கு</b>
(கலர்) ஸ்வீட் மணிகள் மற்றும் சாக்லேட் பீஸ்கள் - சிறிது


 

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். பழங்களை டின்னில் இல்லாமல் தனித்தனியாகவும் வாங்கி சிறிய துண்டங்களாக கட் பண்ணி செய்யலாம். திக்கான கிரீம், ஸ்ப்ரே பண்ணுவதுபோல் ரெடிமேடாகவும் கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் அதில் இனிப்பு சுவை சற்று கம்மியாக இருக்கும்
முதலில் சுமார் 3/4 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பளிங்கு கோப்பையில் பழங்களை தண்ணீர் வடித்துவிட்டு பரத்தவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து ஜெல்லியை கொட்டி நன்றாக கரையும் வரை கலக்கி, பிறகு ஆறவைக்கவும்.
நன்கு ஆறிய பிறகு, ஆனால் உறையும் பதம் வரும் முன் பரப்பி வைத்துள்ள பழங்களின் மீது ஊற்றவும்.
கஸ்டர்டு பவுடரை சிறிது பால்விட்டு கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
மீதி பாலில் 3 டீஸ்பூன் சீனியும், 5 துளி எஸென்சும் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரில் ஊற்றவும்.
உடனே அடுப்பை அணைத்துவிட்டு, கட்டி விழுந்துவிடாமல் நன்கு கலக்கவும்.
சற்று ஆறியவுடன், பழத்தின் மேல் ஊற்றி வைத்துள்ள ஜெல்லி உறைந்த பிறகு, அதன் மேல் ஊற்றவும்.
ஃபுல் கிரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டு, அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து முட்டை கலக்கும் மெஷினால் நன்கு கலக்கவும். கிரீம் நன்கு திக்காகி வரும்போது மெஷினை நிறுத்திவிடவும். மேலும் தொடர்ந்தால் தண்ணீர் போல் தெளிந்துவிடக்கூடும்.
திக்காகிய கிரீமை கஸ்டர்டு மேல் குவிந்தாற்போல் வைக்கவும்.
பிறகு அதன் மேல் ஸ்வீட் மணிகள் மற்றும் சாக்லேட் பீஸ்களை தூவி அலங்கரிக்கவும். இப்போது சுவையான ட்ரை ஃபில் ரெடி!
இதனை சுமார் 1 மணி நேரமாவது ஃபிரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து பின்னர் பரிமாறவும். விருந்தாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் செய்து கொடுப்பதற்கேற்ற ஒரு அருமையான டெஸ்ஸெர்ட்!

குறிப்பு:- ஒரே கோப்பையில் செய்யாமல் ஒரு நபருக்கு ஒரு கப் கொடுப்பது போன்று தனித்தனி சிறிய கோப்பைகளில் பிரித்தும் செய்யலாம். இது செட் ஆனபிறகு மேலிருந்து கீழாக வெட்டி சாப்பிடவேண்டும். அப்போதுதான் மேலேயுள்ள கிரீம், அதற்கு கீழுள்ள கஸ்டர்டு, அதன் கீழுள்ள பழங்கள் என்று ஒரே சமயத்தில் பல சுவைகளோடு சாப்பிட முடியும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நலமா? எனக்கு உங்கள் மீது கோபம். (விளையாட்டிற்குத் தான்). அட நாமும் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவோமே என நினைத்து என்ன ரெஸிபி கொடுக்கலாம் என்று மண்டையை போட்டு பிய்த்து இனிப்பாகவும், அதே சமயம் கோடைக்கு ஏற்றாற்போல் சில்லுன்னு யோசித்து அறுசுவைப் பக்கம் வந்தால் உங்கள் ட்ரை ஃபில் என்னைப்பார்த்து சிரிக்கிறது. அதுவும் அழகாக படத்துடன் கொடுத்து அசத்திவிட்டீர்கள். பார்க்கவே சில்லுன்னு இருக்கு. அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி.

வ அலைக்குமுஸ்ஸலாம்!
நான் நலமே அல்ஹம்துலில்லாஹ்! நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? தங்களின் தமாஷ் கலந்த பாராட்டினைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். இந்தியா செல்லும் முன் அறுசுவை நேயர்களுக்கு ஏதாவது இப்படி ஒரு 'சில் பார்ட்டி' கொடுத்துவிட்டு செல்வோமே என்று தோன்றியது. அதான் கொடுத்தேன். இன்ஷா அல்லாஹ் ரமலானில்தான் ஃபிரான்ஸ் திரும்புவோம். அதனால் இனி ரமலான் முடிந்துதான் மற்ற ரெசிப்பி கொடுக்க நேரம் கிடைக்கும். முடியும்போது செய்து, சுவைத்துப் பார்த்து ரிசல்ட் சொல்லுங்கள்! தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி!

ஆமா.....! நீங்கள் login க்காக உங்கள் பெயரிலிருந்து சுருக்கி janu என்று கொடுத்துள்ளீர்களா? அல்லது உங்கள் பெயரின் சுருக்கம் செல்லப்பெயராகிவிட்டதா? என் friend பெயர் போல் உள்ளது, அதான் கேட்டேன்.

அல்ஹம்துலில்லாஹ், நான் நலம்.தாங்கள் நலமா? இந்தியா செல்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். நலமாக சென்று வர இறைவனிடம் துவா செய்கிறேன். பானுவாக இருந்த செல்லப்பெயரை (ஏற்கனவே ஒரு பானு உள்ளதால்) தலையையும், வாலையும் ஒட்டி ஜானுவாக்கிவிட்டேன்.இன்ஸா அல்லாஹ் தங்கள் ரெஸிபியை செய்து பார்க்கிறேன்.

நன்றி

பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. madam எனக்கு ஒரு சந்தேகம் ஃபுல் கிரீம் என்று கொடுத்துள்ளீர்கள் அப்படி என்றால் என்ன அது கடைகளில் கிடைக்குமா இல்லை நாமே செய்ய வேண்டுமா?

எப்படியிருக்கிறீர்கள்? தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி!

ஃபுல் கிரீம் என்பது அதே பெயரிலேயே கடைகளில் கிடைக்கும். அல்லது கேக் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடைகளில் 'Whipping Cream' அல்லது 'Double Cream' அல்லது 'Heavy Cream' என்று கேட்டுப் பாருங்கள்! அவற்றில் எது கிடைத்தாலும் Ok, நீங்கள் ஃபுல் கிரீம் செய்யலாம். மேலே சொன்ன கிரீம்கள் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாக இருக்கும். அதனால் முதல்முறையாக செய்யும் உங்களுக்கு பதம் தவறாமல் வருவதற்கு, கிரீம் கலக்கும் கிண்ணத்தை விட சற்று பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை பாதியளவு நிரப்பிக் கொண்டு, அதன் நடுவில் கிரீம் கலக்கும் கிண்ணத்தை வைத்து கிரீமை ஊற்றி, சீனி, எஸென்ஸ் சேர்த்து முட்டை கலக்கும் மெஷினால் கலக்குங்கள். நன்கு திக்கலாகி வந்தவுடன் நிறுத்திவிட்டால், தேவையான பதத்தில் கிரீம் கிடைக்கும்.

கிரீமை நாமே செய்யவேண்டுமென்றால், இனிப்பு சேர்க்காத கன்டன்ஸ்டு மில்க், பட்டர், எஸென்ஸ், சீனி சேர்த்து மேற்கூறிய முறையில் ஐஸ் கப் வைத்தும் செய்யலாம். ஆனால் அது சற்று சிரமமான வேலை.

எல்லாவற்றைவிட ரொம்ப சுலபமானது, கேக் அலங்காரத்திற்காக விற்கப்படக்கூடிய, ரெடிமேடாக பாட்டில்களில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி மேலே ஸ்ப்ரே பண்ணிவிடுவதுதான். நீங்கள் இருக்கும் ஏரியாவில் விசாரித்து, கிடைத்தால் செய்து பார்த்து சொல்லுங்கள். வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள். நன்றி!

என் சந்தேகத்தை மிகவும் தெளிவாக தீர்த்தமைக்கு மிகவும் நன்றி. இந்த recipe செய்து பார்த்து விட்டு பதில் அளிக்கிறேன்.
நன்றி

நேற்று இதை செய்து பார்த்தேன். taste நன்றாக இருந்தது.creamகட்டியாக இருக்க வில்லை.happy journey.

நலமா? ட்ரை ஃபில் taste நன்றாக இருந்தது, cream தான் கட்டியாகவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சகோதரி பூஜாவுக்கு நான் மேலே கூறியபடி, cream கள் கடையில் கேட்டுப் பாருங்கள். அதைக் கொண்டு மீண்டும் செய்துப் பாருங்கள். கஷ்டமாக இருந்தால் ரெடிமேட் கிரீம் வாங்கி பயன்படுத்துங்கள். உங்களுக்கு சுலபமாக இருக்கும். பயண வாழ்த்துக்கு நன்றி!

டியர் அஸ்மா
ஜெல்லி என்று கடைகளில் கேட்டாலே தருவார்கள் தானே

நலமா? ஜெல்லி என்று கேட்டாலே கடைகளில் கிடைக்கும். ஆனால், கண்டிப்பாக 'வெஜிடபிள் ஜெல்லி' என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை "வெஜிடபிள்" என்று குறிப்பிடப்படாமல் விற்கப்படும் ஜெல்லிகளில் பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டவைதான் உள்ளன. அதனால், வெஜிடபிள் ஜெல்லி என்று இருந்தால் மட்டும் வாங்குங்கள். அதில் சிலவற்றில் "ஹலால்" முத்திரை கூட போடப்பட்டிருக்கும். அல்லது "suitable for vegetarian" என்று குறிப்பிட்டிருப்பார்கள். தயவு செய்து சிரமம் பார்க்காமல் கவனித்து வாங்குங்கள். நன்றி!

நீங்கள் europe ல் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா?

டியர் அஸ்மா நான் நலமாக இருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
நீங்கள் சொன்னது போல பார்த்து வாங்குகிறேன்.அயர்லாந்தில் வசிக்கிரேன்.
உங்கள் விளக்கத்திர்க்கு மிகவும் நன்றி

ஹாய் பர்வீன் பானு,எப்படி இருக்கீங்க?இப்போது தான் உங்கள் பதிலை பார்த்தேன்.நீங்கள் அயர்லாண்டில் இருப்பதாக எழுதி இருந்தீர்கள்.நானும் அயர்லாண்டில் தான் இருக்கிறேன்.நீங்கள் அயர்லண்டில் எங்கு இருக்கீங்க?டப்ளினிலா?விருப்பமிருந்தால் கூறவும்.நன்றி.

தங்களின் பதிலுக்கு நன்றி பர்வீன்!