மட்டன் சாப்ஸ் வறுவல்

தேதி: May 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - 500 கிராம்
மிளகாய் - 12
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
இஞ்சி - சிறிது
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு


 

கறியைத் தவிர மற்றவற்றை எல்லாம் நன்கு அரைத்து கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறி கலவையை கொட்டி நன்கு கிளற வேண்டும். கறியை அடிப்பிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.
அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கடாயை மூடி வேக விட வேண்டும்.
கறி வெந்தவுடன் தீயை குறைத்து கறியை கிளறி கொண்டே இருந்தால் கடாயில் ஒட்டாமல் வரும் போது இறக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்