திடீர் சட்னி

தேதி: May 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

சோம்புவை பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கொதித்த பிறகு பொடி செய்துள்ள சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.


இதை சப்பாத்தி, இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்