பச்சை தக்காளி சட்னி - 2

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை தக்காளி - நான்கு
பச்சை மிளகாய் - மூன்று
எள்ளு - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சைமிளகாயை அரிந்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை போட்டு தக்காளி கூழாகும் வரை வதக்கவும். பின்னர் அதை ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் எள்ளை பொடித்துக்கொள்ளவும். பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் பச்சைமிளகாயை அதனுடன் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி வாணி ரமேஷ்

முட்டை தோசைக்கு மிகவும் அருமையாக இருந்தது. நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126