குழந்தைகளின் மனக்கவலை.

அன்பு நேயர்களே, நம்மைப் போலவே பெரும்பாலான குழந்தைகள் மனக்கவலையால் அவதிப்படுகின்றார்கள் என்பதையும், அதிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற உணர்வு தான் இந்த தலைப்பை எழுதத் தூண்டியது.அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைத்து எனது கருத்தை தொடருகின்றேன்.

குழந்தைகள் என்று பார்த்தோமானால் கைகுழந்தையல்லாமல் இரண்டு வயதிலிருந்து பதினாறு வயது வரைக் கூட கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இந்த வயதில் அவர்களுக்கு வரும் மனக்கவலை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சனை ஒரே மாதிரியாக தோன்றுவதில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கும்.ஆகவே ஏதாவதொறு வகையில் அவர்களும் இந்தப் பிரச்சனையில் ஆழ்த்தப்பட்டு விடுகின்றார்கள். உதாரணமாக

குழந்தைகளின் பெற்றோர்களின் விவாகரத்து,
தாய் அல்லது தந்தைய்யை விட்டு பிரிந்து வாழ்வது,
பெற்றோர்கள் உறவினர்களிடம் சண்டைப் போடுவது,
கூடப் பிறந்தவர்களால் பிரச்சனை,
மிகவும் பிடித்தமான குடும்ப நபரின் அகால மரணம்,
வீட்டுச் செல்லப் பிராணிகள் இறப்பது அல்லது காணாமல் போய்விடுவது,
அம்மா வேலைக்கு போவது,
புதியதாக, வாழும் சூழ்நிலையின் இட மாற்றம், இதனால் பழகிய நண்பர்களை பிரிவது,
புதிய பள்ளிகூடத்தில் சேர்ந்து படிப்பது,
தினமும் வீட்டுப் பாடம் செய்வது,
விளையாட்டிலோ அல்லது படிப்பிலோ பரிசு வாங்க உழைப்பது,
பெற்றொரின் கருத்துக்கு ஒத்துப் போகமுடியாமல் தவிப்பது,என்று இன்னும் இதுப்போன்ற பலவிதமான மன அழுத்தத்திலிருந்து குழந்தைகளின் மனநிலை பாதிக்கபடாமல், ஆரோகியமாக வாழும் சூழ்நிலைய்யை பெற்றோர்கள், அவர்களிடம் தென்படும் அறிகுறியிலிருந்து கண்டுக்கொண்டு மிக எளிதாக உதவ முடியும் என்று கருதுகின்றேன்.

அறிகுறிகள் என்று பார்த்தால் உதாரணமாக:
குழந்தைகள் காரணமே இல்லாமல் அழுது எதர்க்கெடுத்தாலும் அழுது அடம்பிடிப்பார்கள்.
தூங்கும் பொழுது படுக்கையில் சிறுநீர்க் கழிப்பார்கள்.
கட்டைவிரலை சூப்புவது, நகம் கடிப்பது.
இல்லாத உடல் உபாதைகளை கூறி பெற்றோரின் கவனத்தை பெற முயல்வது.
பள்ளிகூடம் செல்ல மறுப்பது,
பொய் பேசுவது, மாணவர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவது,
சக மாணவர்களிடம் சண்டை வர காரணமாயிருப்பது, என்று இன்னும் இதுப்போன்ற ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டால் கூட அது அவர்களின் மன நோய்க்கான அறிகுறி என்று கருதலாம்.

இதுப் போன்ற அறிகுறிகள் உடைய பெரும்பாலான குழந்தைகள் வளர வளர மாறிவிடுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் பெற்றோர்கள் அதை கவனித்து அவர்களை சரியாக வழிநடத்தாவிட்டால் இந்த அறிகுறிகள் குறைய வாய்ப்பில்லாமல் அதிக அளவில் கூட அதிகரித்து குழந்தைகளின் வாழ்க்கையைக் கூட பாழாக்கி விடும்.இதிலிருந்து குழந்தைகளை அன்பான முறையில் அணுகினாலே பிரச்சனைகள் குறைந்து விடும்.அப்படி முடியாவிட்டால் அதற்குரிய மருத்துவரின் உதவியை நாடியாவது குழந்தையின் மனக்கவலையை போக்க வழிவகைச் செய்ய வேண்டும்.முதலில் பெற்றோரின் பங்கு என்னவென்று ஆராய்ந்துப் பார்த்தோமானால்,

பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மிகவும் மென்மையான மனச் சுபாவம் கொண்டவர்கள். ஆகவே குழந்தைகளை எக்காரணம் கொண்டும் கடின வார்த்தைகளால் பேசக்கூடாது.
பெற்றோர்கள் நல்ல ரோல்மாடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் என்னைப் பொருத்தவரையில் குழந்தைகள் பெற்றோர்களின் நடத்தையைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றோரின் அன்பான பேச்சும்,ஆதரவான அணுகு முறைய்யைத்தான் அதிகமாக எதிர் பார்ப்பார்கள்.

பெற்றோர்கள் இந்த அவசரமான வாழ்க்கை சூழ்நிலையில் கூட தங்களுக்குள்ள பிரச்சனைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, குழந்தைகளிடம் பேசுவதற்க்கென்றே நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் கூறுவதை ஆர்வத்துடன் கேட்டாலே குழந்தைகளுக்கு பாதி மனநோய் குறைந்துவிடும்.

சில குழந்தைகளுக்கு சில பாடங்களைப் பயில கஷ்டப் படுவார்கள், இந்த சந்தர்பத்தில் பெற்றோர்கள் அதைப் பற்றி அதிகம் பேசாமல் மற்ற பாடங்களில் அவர்களுக்குள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுகுள்ள மனக்கவலை குறைந்து கடினமான பாடத்தைக் கூட சுயமுயர்ச்சியால் கற்றுக் கொள்ள வாய்ப்பை நாம் வழங்கிவிடுவோம்.

பொதுவாக குழந்தைகள் அவர்களின் பிரச்சனைகளை அவர்களாகவே சரிசெய்துக் கொள்வார்கள். இதனால் தான் சில நேரங்களில் பெற்றோர்களிடம் அதைப் பற்றி பேசப் பிடிக்காமல் ஒதுங்கிவிடுவார்கள்.அந்தச் சந்தர்பங்களில் பெற்றோர்கள் திரும்ப திரும்ப கேட்டு தொந்தரவுச் செய்யாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட வேண்டும். உதாரணமாக சினிமாவுக்கு அழைத்துச் செல்வது, ஹோட்டலுக்கு கூட்டிச் செல்வது, கடைகளுக்கு அழைத்துச் சென்று ஏதாவது புதிய பொருட்களை வாங்கி தருவதுப் போன்ற அவர்களுக்கு பிடித்த விசயங்களைச் செய்வதால் அவர்களின் மனநிலை பழையபடிக்கு வந்து விடும் என்பதில் சந்தேகமேயிருக்காது.

முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சுபாவங்களான கோபப்படுவது, பயப்படுவது, கவலைப்
படுவது, போன்ற உணர்வுகளால் தாழ்வுணர்ச்சி வராமல் இருக்க பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சொல்லிதர வேண்டும்.கோபப்படுவது கூட தப்பில்லை என்று புரிய வைக்க வேண்டும்.மேலும் குழந்தைகள் ஏன் கோபமடைகின்றார்கள், ஏன் பயப்படுகின்றார்கள், ஏன் கவலைப் படுகின்றார்கள் என்று கேட்டறிந்துக் கொண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்ச்சி செய்யவேண்டும். அதற்க்கு பதிலாக அவர்களின் சுபாவங்களை மாற்ற முயற்ச்சி செய்வது பலனளிக்காது.

குழந்தைகளை சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள், அவர்களை மரியாதையுடன் நடத்தி வளக்க வேண்டும். இதனால் கூட குழந்தைகள் சுய மரியாதையை வளர்த்துக் கொண்டு, பிற்காலத்தில் அவர்களுக்கு மனநோய் வர வாய்ப்பிருக்காது என்று நினைக்கின்றேன். இவைகள் எல்லாமே சாத்தியமாக பெற்றோரின் கையில் தான் உள்ளது.ஆக எந்த சூழ்நிலையையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களின் சரியான அணுகு முறையினால், அதை குழந்தைகளுக்கு சாதகமாக்கிவிடலாம் என்பது என் கருத்து.

ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஏற்ப்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களை கவனமாக அதே நேரத்தில் மிகவும் பாசத்தோடு அரவணைத்து நடத்திச் செல்ல வேண்டும்.ஏனென்றால் குழந்தையின் மனநோய்க்கு பெற்றோரின் அன்பைத் தவிர வேறோரு சக்திவாய்ந்த மருந்து உலகத்தில் கிடையாது என்று, எனது கருத்தை கூறி முடிக்கின்றேன். இந்த விசயத்தைக் குறித்து பெற்றோர்கள் மேலும் கலந்துரையாடி தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.

உங்கள் கருத்தை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையானவை. எனக்கும் அந்த அனுபவம் இருந்தது.

நான் கருவுற்றிருக்கும் போது ஆரம்பத்தில், என் குழந்தை(அப்போது இரண்டரை வயது) என்னை நன்றாக கவனித்துக்கொள்வாள். பார்ப்பவர்கள் அனைவரும் நீ ரொம்ப லக்கி என்று சொல்வார்கள். எனக்கு பால் பிடிக்கது. என்னவர் இவளிடம், அம்மாவை நீ தான் பாத்துக்கணும். அம்மா பால் சாப்பிடலைன்னா, தம்பிக்கு பசிக்கும்-னு சொல்லிட்டார்.அவ்வளவுதான். "அம்மா பால் சாபிட்டியா, தம்பிக்கு பசிக்கும்" என்று சொல்லி நான் சாப்பிடும் வரை விடமாட்டாள். வீட்டிற்க்கு யார் வந்தாலும் முதலில், என் அம்மா வயிற்றினுள் குழந்தை இருக்கிறது, நான் அக்கா ஆகப்போறேன் என் சந்தோஷமாக கூறுவாள். அப்படி இருந்த அவள், கடைசி மாதங்களில் ரொம்பவே மாறிவிட்டாள். சொல்வதை கேட்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் அழுவது, எப்போதும் என்னுடனே இருப்பது போன்ற செயல்களால் நான் மிகவும் கவலையுற்றிருந்தேன்.
இதற்கு காரணம், கடைசி மாதங்களில் அவள் என் மேலே ஏறி குதிப்பது, என்னை மிதிப்பது, போன்ற செயல்களை செய்யும் போது, மற்ற அனைவரும் தடுத்தது. ரொம்பவே பொஸஸிவ்-வாகி விட்டாள். அப்போது, ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்பது எனக்கு புறியவில்லை. பிறகு என் தாய், தந்தை வந்தார்கள். அவளுக்கு ரொம்ப சந்தோசம். நார்மலாக இருந்தாள். என் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன், திரும்பவும் டல்லாகிவிட்டாள். அதனால், நான் என் பையனுக்கு பால் குடுப்பதை தவிர எதையும் செய்யாமல் இவளுடனே இருப்பேன். என் தந்தையும் இவளோடு தான் அதிக நேரம் செலவிடுவார். ஆனால் இவளுக்கு மட்டும் தம்பி வேண்டும். அவனுக்கும் அக்கா வேண்டும். இப்போது(மூன்றரை வயது) இவள்தான் அவள் தம்பியை கவனித்துக்கொள்கிறாள். அதன் பிறகு, இப்போதெல்லாம், ரொம்ப சமத்து ஆகிவிட்டாள்.
ஆரம்பத்தில், அந்த சில மாதங்கள் நான் ரொம்பவே பயந்துக்கொண்டிருந்தேன். பிறகு தான் அப்பா சொன்னார், எல்லா குழந்தைகளும், இரண்டாவது குழந்தை வரும் போது சில நாட்கள் அப்படி தான் இருப்பார்கள். பிறகு மெல்ல மாறிவிடுவார்கள், என்று.

நீங்கள் சொன்னது போல, அவர்கள், அன்பு, பாசத்தை தான் அதிகம் எதிர்ப்பார்கிறார்கள். அது அவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் மட்டும் அல்ல பெற்றவர்களும் மனக்கவலை இல்லாமல் இருக்கலாம்.

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர் எப்படி இருக்கீங்க? தங்களின் பதிலைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை விட சந்தோசம் தங்களின் அன்புச் செல்லங்களின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு. மிக்க நன்றி.
தங்களின் அனுபவத்தைப் பார்க்கும் பொழுது நீங்கள் கட்டாயம் உங்கள் பெற்றோருக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவர்களின் வருகையால் தான் தங்கள் குழந்தையின் மனநிலை மாறியுள்ளது என்று நினைக்கின்றேன். குழந்தைகளின் குணதிசயங்கள் மாறிக் கொண்டே இருக்கும், அதற்கேற்றார் போல் பெற்றோர்களும் தங்களை மாற்றிக் கொள்வது நல்லது.
நீங்களும் குழந்தையின் மனநிலை மாறிவிட்டது என்று அஜாக்கிரதையாக இருந்து விடவேண்டாம். அக்காவின் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தம்பிக்கு வேண்டியதை அவர்களின் அனுமதியுடன் செய்து வந்தால் மீண்டும் அதுப் போன்ற பிரச்சனை வரவே வாய்ப்பிருக்காது என்றே கூறுவேன்.

மேலும் ஊரில் இருந்தால் எந்த நேரமும் உறவினர்கள் யாராவது சிறிய குழந்தைய்யை அல்லது கைக்குழந்தையை கவனித்துக் கொள்வார்கள்.ஆனால் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு அந்த சூழ்நிலை கிடைக்காது. ஆகவே வீட்டில் தம்பி அல்லது தங்கையின் வரவால் நாம் தனிமையாக்கப் பட்டோம் என்ற கவலை ஏற்படாதபடி சிறியக் குழந்தைகளிடம் அன்பாக பேசி புரியவைத்து குழந்தைகளை ஒன்றாக வளர்த்து வருவதுகூட ஆரோக்கியமான வளர்ப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த விசயத்தைப் பற்றிய தங்களின் கருத்து நிச்சயமாக மற்ற தாய்மார்களுக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன். மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.

நான் நலமாக உள்ளேன். நீங்கள் எப்படி இருக்கீங்க?

உங்கள் கருத்து உண்மையான ஒன்று.
நான் இப்போது நீங்கள் கூறியது போல தான் செய்கிறேன். என் மகனுடைய விளையாட்டு பொருட்களிலிருந்து, அவனுடைய துணிமணிகள் வரை என் பொண்ணு தான் தேர்ந்தெடுப்பாள். கடைக்கு சென்றால் என் மகன் பிறக்கும் முன்பே அவனுக்கு நிறைய உடைகள் வாங்கி விட்டாள். அந்த விஷயத்தில் அவ ரொம்ப சமத்து. இப்பவும் அவனை நான் குளிப்பாட்டிவிட்டு வருவதற்க்குள், என் பயனுக்கு அவன் போடவேண்டிய துணியிலிருந்து, அவனுடைய க்ரீம், பவுடர், மை டப்பா என அனைத்தும் ரெடியாக எடுத்துவைத்துவிடுவாள்.

அவள் டல்லானதற்க்கு காரணமே நான் தான். நார்மலாக பெண் குழந்தைகள் அப்பாவிடம் தான் க்லோஸாக இருப்பார்கள். என் மகள் அதற்கு நேர் எதிர். என்னுடன் தான் இருப்பாள். என் பெற்றோர்கள் வரும் போது எனக்கு ஒன்பது மாதங்கள் முடிந்துவிட்டது. அதனால் கடைசி மாதங்களில், அவளை என்னால் அப்போது முன்பு போல கவனிக்க முடியவில்லை. என்னவர் தான் அவளை பார்த்துக்கொள்வார். அது தான் அவளை டல்லாக்கிவிட்டது. நான் அடிக்கடி படுத்துவிடுவேன். அவளுடன் என்னால் என் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. அதெல்லாம் தான் அதுக்கு காரணம்.
இப்போது நான் முன்பு போல அவளுடனே இருப்பதால், அவளும் முன்பு போல் ஆகிவிட்டாள்.

என் பையனுக்கு என்னைவிட அப்பா மேல் தான். எப்ப அவர் வருவார் என் பார்த்துகொண்டெ இருப்பான். வந்தவுடன் அவனுக்கு யாரும் வேணாம்.

என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தாங்கள் எற்படுத்தித்தந்த சந்தர்ப்பத்திற்க்கு உங்களுக்கு மிக்க நன்றி...

நன்றி...

நன்றி...

என்னுடைய தோழிக்கு 2 வயது 11 மாதங்களான ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை U.S.-ல் தான் பிறந்தாள்.
இத்தனை நாட்கள் என் தோழி, அவளுடைய குழந்தையுடனே இருந்துவிட்டாள். இப்போது காலேஜில் சேர்ந்து இப்போ ஒரு மாதமாக, படிக்க செல்கிறாள். சாதாரணமாகவே அவளுடைய குழந்தை யாருடனும் சேரமாட்டாள்.
இப்போது அவளை day care-ல் சேர்த்துள்ளார்கள். அனால் குழந்தை தினமும் daycare செல்வதற்க்கு அழுகை, இரவில் தூக்கத்தில் எதையோ பார்த்து பயந்தது போல உளருகிறாளாம். எதை பார்த்தாலும் பயப்படுகிறாள். வெளியே செல்லவும் பயப்படுகிறாள். எங்கே தன்னை daycare-ல் விட செல்கிறார்களோ என பயந்து அழுகிறாள். daycare-லும் காலை விட்டு சென்றதிலிருந்து மதியம் அவளை சென்று அழைத்துவரும்வரை தினமும் அழுதுக்கொண்டே இருக்கிறாளாம்.
என் தோழியும், அவள் கணவரும் இதனால் ரொம்பவே upset.
ஒரு நாள் ரொம்ப அழவே, தெரிந்தவர்களுடன் இருந்தால் கொஞ்சம் மாறிவிடுவாள் என, வாரத்தில் ஒரு நாள், என்னிடம் விட்டுவிட்டு செல்கிறார்கள். இப்போது எங்கள் வீட்டிற்க்கு வரவும் பயப்படுகிறாள். அனால் daycare-ஐ போல என்னிடம் அழுவதில்லை. என் பெண்ணுடன் விளையாடுகிறாள்.
இந்த ப்ரெச்சனையால் குழந்தை சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை. இந்த ஒரு மாதத்திலேயே மிகவும் இளைத்துவிட்டாள். என்னிடம் மட்டும் கொஞ்சம் சாப்பிடுகிறாள்.

இதற்கு என்ன செய்யவேண்டும்? அவளுடைய வகுப்பு மதியம் வரை தான். இப்போது படிப்பை பாதியில் நிறுத்திவிடலாமா என, என் தோழி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். இதற்கு வேற வழி ஏதேனும் உண்டா?

உங்கள் ஆலோசனை இதற்கு தேவை, மனோகரி மேடம்.

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர், தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. மேலும் தங்கள் தோழியின் குழந்தைக்காக ஆலோசனை கேட்டு எழுதியிருந்தீர்கள்.அது தங்களின் நல்ல உள்ளத்தை காட்டுகின்றது மிக்க மகிழ்ச்சி.

தாங்கள் குறிப்பிட்டுள்ள குழந்தையைப் போலவே தான் பெரும்பாலான குழந்தைகள் அனைவருமே Daycare அல்லது பள்ளிக்கூடம் செல்வதற்கு அழுது அடம் பிடிப்பார்கள். ஆகவே இதற்காக பெற்றோர்கள் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியா இருப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கின்றேன்.

பொதுவாக குழந்தைகளிடம் வீட்டில் பள்ளிகூடத்தைப் பற்றி நினைவுப் படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொழுது ஃபிரீயாக விட்டுவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு இரண்டு உலகத்தைப் பற்றியும் வித்தியாசத்தை உணர முடியும்.

மேலும் குழந்தைகளிடம் பள்ளிகூடத்தைப் பற்றி பேசி பேசி தயார் படுத்துவது ஒரு சில குழந்தைகளுக்குத் தான் ஒத்து வரும்.ஆகவே இவ்வாறான சுபாவம் கொண்ட குழந்தைகளுக்கு அதைப் பற்றி அதிகம் பேசாமல் அமைதியாக கொண்டுச் சென்று அழுத்தமான குரலில் எதையும் கூறி விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும்.

இதனால் கூட குழந்தைகள அம்மா வரும் வரை எந்த சூழ்நிலையைப் பற்றியும் கவலைப் படாமல் காத்திருப்பார்கள். அதை விடுத்து பெற்றோரும் சோகமான முகத்துடன் குழந்தையை கொஞ்சிக் கொண்டு அழைத்துச் செல்வது பலனளிக்காது.

கசப்பான மருந்தைக் கூட நோய் போக வேண்டும் என்றால் எப்பாடு பட்டாவது குழந்தைக்கு கொடுத்துவிடுவதுப் போல இதுப் போன்ற விசயங்களில் பெற்றோர் குழந்தையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

குழந்தை அழுகின்றது, சாப்பிடுவதில்லை, உறக்கத்தில் உளருவதுப் போன்ற செயல்கள் சாதாரணமாக சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கூட ஏற்படும்.

பொதுவாக குழந்தைகள் எல்லோருமே, பெற்றோரை விட புத்திசாளியாகத்தான் இருப்பார்கள்,கடைசி வரைக்கும் தனக்கு வேண்டியதைப் போராடியாவது அடைய முயன்று பார்ப்பார்கள்.

ஆகவே பெற்றோர்கள் பயப்படாமல் மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் பெற்றோரே தங்களையறியாமல் குழந்தையின் மன வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தி விடுவார்கள்.

மேலும் அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்லும்படி கூறவும்.முக்கியமாக குழந்தையிடம் பள்ளிகூடத்தைப் பற்றி வீட்டில் பேச வேண்டாம் என்று கூறவும்.

ஆகவே குழந்தையின் மனவளர்ச்சி சாதாரணமாக இருக்க வேண்டுமென்றால் பள்ளிகூடத்திற்க்கு தொடர்ந்து அனுப்பும் படி கூறவும்.

எப்படியும் குழந்தை நாளடைவில் இரண்டு உலகத்தையும் பற்றி தெரிந்துக் கொண்டு தன்னைத் தானே மாற்றிக் கொள்வார்கள்.ஆகவே தங்கள் தோழியை, இதைப் பற்றி கவலைப் படாமல் அவர்களின் படிப்பை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதே, நன்கு அதை பயன்படுத்தி கொள்ளும் படி நான் கூறியதாக கூறவும்.நன்றி டியர்.

உங்கள் கருத்தைப் பார்த்தபிறகு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் இதுபற்றி என் தோழியிடம் கூறுகிறேன். உண்மையில், daycare செல்ல வேண்டும் என்பதால் அடிக்கடி, அவளுக்கு புறிய வேண்டும் என நினைத்து, அது பற்றி மெல்ல அவளிடம் பேசுகிறோம். இப்போது தான் எனக்கு புரிந்தது. அது தவறு என்று. உங்களுடைய கருத்து என் தோழிக்கு மட்டுமல்லாது இன்னமும் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இங்கே வந்தபிறகு பல விஷயங்களுக்கு என்ன செய்வது என்பது தெரியாமல் எங்கள் வயதை ஒத்த அனைவரும் நிறைய இதுபோன்ற தவறுகள் செய்கிறோம். உங்கள் அறிவுரைகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
மிக்க நன்றி...

நன்றி...

என்னுடைய பொன்னுக்கு இரண்டரை வயது ஆகும் போதே நாங்கள் அவளை Daycare க்கு அனுப்பி விட்டோம்.அவள் தினமும் 3மணி நேரம் அங்கு இருக்க வேண்டும். மதியம் வீட்டிற்கு வந்து விடுவாள்.அங்கு இருக்கும் அந்த 3 மணிநேரமும் அழுது கொண்டே தான் இருப்பாள்.சமயத்தில் அழுது அழுது 1 பாத்ரும் கூட பேண்டில் போய் விடுவாள்.அங்கிருப்பவர்கள் அவளுக்கு வேறு உடை மாற்றி அனுப்பி வைப்பார்கள்.தினம் தினம் புதுப்புது ஆடையில் தான் வருவாள்.எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்.இன்னைக்காவது என் பொண்ணு அழாமல் இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி கொண்டு தான் Daycareல் விட்டுட்டு வருவேன்.ஆனால் எப்போதும்daycare ல் விடுவதை மட்டும் நான் நிறுத்தவே இல்லை.இப்போது என் பொண்ணுக்கு 4 வயது ஆகிறது.இப்போதெல்லாம் என்னை Daycareல் விடு அம்மா.நான் அங்கு போய் ப்ளே பண்ணனுமுன்னு சொல்றா.காலையில் எழுந்தவுடன் அம்மா என்னை சீக்கிறம் கிளப்பிவிடு Daycareல் போய் விளையாடப்போனுமுன்னு சொல்றா.எத்தனை மாற்றங்கள் பார்கிறேன் அவளிடம்.
அதனால் உங்கள் தோழி இடம் சொல்லுங்கள்.எப்போதும்Daycare ல் விடுவதை மட்டும் நிறுத்தவே வேண்டாம் என்று.காலப்போக்கில் Daycareஅவளுக்கு பழகிவிடும்.வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.நன்றி.

என்னுடைய மகனுக்கு 6வயது ஆகிறது.நான் அவனுக்காக வேலைக்கு எதுவும் செல்லாமல் அவனுடன் இருந்தாலும் அவன் நன்றாக வளர்ந்திருக்கிறானா என்பது சரியாக தெரியவில்லை.நாங்கள் இருவரும் அவனிடம் எதிர்பார்பது நல்லபழக்க வளக்கங்க்ள்.schoolல் first வர வேண்டும்,எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.நாங்கள் அவனுக்கு தேவையான எல்லாவற்றைம் வாங்கி தருகிறோம் ஆனாலும் எப்பொழுது வெளியே சென்றாலும் எதையாவது கேட்டு அழுகை,அடம் பிடிக்கிறான்.அவனிடம்50 toy cars இருந்தாலும் மேலும் கேட்டு அழுகிறான்.chocolate வீட்டீல் இருக்கும் அவன் மேலும் எடுத்து கொண்டு வருவான். no சொல்லுவதால் கோபப்படுகிறான்.நாங்கள் அவனை நன்றாக வைத்துகொள்வதில்லை என்கிறான்.hotelபோனால் நன்றாக behave பண்ண மாட்டான். நல்ல சந்தோஷமாக சென்று வர முடிவதில்லை.அவனிடம் பல முறைபேசி பார்த்து விட்டேன்.அப்பொழுது சரி இனி நன்றாக இருப்பதாக சொல்வான்.ஆனால் மீண்டும் அதே கதை தான்.மற்றபடி நன்றாக இருக்கிறான்.He is active,smart and getting mostly A's at school. நாங்கள் இருவரும் அவனிடம் அன்பாகத்தான் இருக்கிறோம்.எங்களுக்குள்ளும் பிரச்சனை இல்லை.ஆனால் இவன் எதெற்கு இப்படி?அவனை எந்த முறையில் மாற்றலாம்?சில சமையம் கடினமாகவும் இருந்திருக்கிறேன்.உங்களின் அஙுபவங்கள் என்க்கு உதவலாம்.

நலமா?
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கொஞ்சம் பிஸி. வார இறுதியல்லவா?
உங்கள் அனுபவம் என் தோழிக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவளும், உங்களுக்கு முன்பு இருந்தது போலத்தான் கவலைப்படுகிறாள். நான் இதை அவளிடம் தெரிவிக்கிறேன்.
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி...

நன்றி...

எப்படி இருக்கீங்க?
உங்கள் மகனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அதாவது அவருடன், விளையாடுங்கள். வெளியே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பக்கத்தில் ஏதாவது பார்க் இருந்தால் அழைத்து செல்லவும். பார்க் இல்லைனாலும் அவருடன் வாக்கிங் செல்லவும். வாக்கிங் செல்லும் போது அடம் பிடித்தால். உங்களுடைய கவலையை அவருக்கு சொல்லி புரியவைக்க பாருங்கள்.
உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் உங்கள் மகனுடன் விளையாட, பக்கத்தில் அமர்ந்து பேச, என நேரம் ஒதுக்கிகொள்ளுங்கள். விளையாட என்றால் games என்று அல்ல, உங்கள் மகனை சிரிக்கவைத்து நீங்களும் சிரித்துக்கொண்டு, உங்கள் மகனுடன் கலந்து பேசவேண்டும். அதாவது உங்கள் மகன் தான் உங்களுக்கு எல்லாமே என்பது போல அவருடன் நீங்கள் இருக்கவேண்டும். அப்போது அவர்களுக்கு அவர்களுக்கு நாம் நன்றாக பார்த்துகொள்கிறோம் என்பது மெல்ல மெல்ல புரியும். அவர்களே மாறிவிடுவார்கள். இதில் உங்களுடைய கணவரிடம் பங்களிப்பின் மிக முக்கியம். அவரும் வீட்டில் இருக்கும் போது அவனுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.
அதாவது உங்கள் நேரத்தை உங்கள் மகனுக்காக ஒதுக்கிக்கொள்ளவும். சில நாட்கள் தான் அவர்களிடம் பெரிய மாற்றம் தெரியும்.
இது என் அனுபவமும் கூட...
நன்றி...

நன்றி...

மேலும் சில பதிவுகள்