தக்காளி துவையல்

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 3 பல்
தக்காளி - 3
புளி - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 3 கொத்து
உப்பு - தேவையானது
எண்ணெய் - 50 மி.லி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பின் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி ஆற விட்டு அரைக்கவும்.
மறுபடியும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்தவற்றை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்