தாம்பாள் பணியாரம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 2 கப்
வெல்லம் - 500 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
பாசிப்பருப்பு - 100 கிராம்
நெய் - 50 கிராம்


 

அரிசியை ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பினை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தினை கெட்டியான பாகாக காய்த்துக் கொள்ளவும்.
பிறகு அரிசிமாவு, வேகவைத்த பாசிப்பருப்பு, வெல்லப்பாகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அதில் முந்திரி, ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, மாவினை பரவலாக ஊற்றி இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்