கவுனி அரிசி

தேதி: May 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கவுனி அரிசி - ஒரு ஆழாக்கு
தேங்காய் - ஒரு மூடி
சீனி - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி


 

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு உப்புச்சேர்த்து குக்கரில் 4 விசில் வைக்கவும். பிறகு தேங்காய் துருவி, சீனி, நெய் சேர்த்து பிசறி சாப்பிடலாம்.


இது சிகப்பாக இருக்கும். செட்டிநாட்டில் பிரசித்திபெற்றது. பெரிய ஊர்களில் டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும். விலை சற்று அதிகம் ஒரு கிலோ 60 ரூபாய். செட்டிநாட்டு கல்யாணங்களில் சிறந்த சிற்றுண்டி.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள் கொடுத்த இந்த recipe செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்திருந்தது. நல்ல ருசியாகவும் இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் madam. எனது உறவினர் ஒருவர் ராமநாதபுரத்திலிருந்து இந்த வகை அரிசி கொண்டு வந்து கொடுத்துள்ளார்கள். என்ன செய்வது என்று இருந்தேன் தங்களின் recipe பார்த்தேன் செய்து விட்டேன். madam இதை தவிர இந்த அரிசியை வைத்து வேறு என்ன செய்யலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
hi moon
தாங்கள் அனுப்பிய கருத்திற்கு நன்றி. கவுனி அரிசியில் வேறு எதுவும் செய்து சாப்பிட்டதில்லை. இது ஒன்றுதான் செய்வோம். யாரிடமாவது தாங்கள் தெரிந்துகொண்டால் இதில் தெரியப்படுத்தவும். நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

ஹலொ சரஸ்வதி மேடம்,
நான் உங்களின் கவுனி அரிசி செய்தேன். நன்றாவே வந்தது, இருந்தது. பின்னுட்டம் திருமதி தேவா அவர்களின் குறிப்பின் கீழும் கொடுத்துள்ளேன் (ஒரு சிறிய அனுபவத்தை விளக்கி) தவரில்லைதானே!!!!!

நன்றி
இப்படிக்கு
இந்திரா

indira