சுட்ட மீன்

தேதி: June 4, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாறை மீன் - 2 (கானாங்கெழுத்திபோல் உள்ளது)
லெமென் கிராஸ் - பாதி துண்டு
மிளகாய்பழம் - 2(காரம் அவரவர் சுவைக்கேற்றாற்போல் சேர்க்கலாம்)
தேங்காய் - பாதி மூடி
நாட்டு வெங்காயம் - 3
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் மீனை தலையுடன் செவுள் பகுதி வழியாக உள்ளே சுத்தம் செய்து உப்பு போட்டு உரசி கழுவவும்.
பிறகு முதுகு புறத்திலிருந்து வயிற்று பகுதிவரை முல்லை ஒட்டினாற்போல் கீறவும். இரண்டாக வெட்டகூடாது. (அதாவது கருவாடு செய்வதற்கு கீறுவதுபோல்)
பின்பு லெமென் கிராஸை பொடியாக நறுக்கவும். பின்பு மிளகாய், தோல் உரித்த வெங்காயம், லெமென் கிராஸ், துருவிய தேங்காய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து உரலில் இட்டு இடிக்கவும். (இல்லையென்றால் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்)
தேவையான உப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து மீனின் எல்லா பாகத்திலும் பரவினாற்போல் தடவவும், பிறகு அரைத்த தேங்காய் கலவையை மீன் உட்புறம் எல்லா இடங்கலிலும் பரவினாற்போல் வைக்கவும்.
பின்பு மீனை மூடவும். இப்பொழுது ஒரு நாண் ஸ்டிக் தவாவை அடுப்பில் ஏற்றி மீனை அதில் போட்டு மிதமான தீயில் சுடவும்.
சிறிது நேரத்திற்கு ஒருமுறை திருப்பி போட்டுக் கொண்டே இருக்கவும். இதற்கு எண்ணெய் விடக் கூடாது.
மீன் சிவந்து பின்பு கருத்து வரும் மீன் நன்கு வெந்ததை உறுதி செய்து எடுக்கவும். இது வெள்ளை சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதை சூடாகவே சாப்பிடவும்.


இது ஒரு சிங்கப்பூர் சாப்பாடு.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் லெமென் கிராஸ் என்பது என்ன? அது எங்கே கிடைக்கும்? அதற்கு மாற்று ஏதேனும் உண்டா?

டியர் அன்பு சிவம்,
லெமென் க்ராஸ் என்பது எழுமிச்சை கலரில் பனங்கிழங்கு வடிவத்தில் இருக்கும் இது எழுமிச்சைய்யின் வாசனைய்யுடன் இருக்கும்!இது சைனீஸ் கடைகலில் கிடைக்கும்.இதர்க்கு பதில் வேறு சேர்த்தால் அதோட ஒரிஜினல் சுவைய்யில் வேருபடும்!இது போல் மல்லி இலை சேர்த்து,மற்றும் இஞ்சி, பூண்டு ,கரம் மசாலா, மிளகு சேர்த்து செய்யலாம் அது இந்திய உணவாக இருக்கும்!!!