பீன்ஸ் உசிலி

தேதி: June 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் பொடிதாக நறுக்கியது - ஒரு கப்
கடலைப் பருப்பு - கால் கப்
பெருங்காயத்தூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிட்டிகை
தனி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

கடலை பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து விட்டு எடுத்து அத்துடன் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மிக்சியில் இட்டு கொரகொரப்பாக நீர் விடாது அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கின பீன்ஸ் துண்டங்களைப் போட்டு லேசாக வதக்கி அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அடுப்பை மிகவும் சிம்மில் வைத்து வேகவைக்கவும். தேவையானால் சிறிது நீர் தெளிக்கலாம்.
பீன்ஸ் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள கடலை பருப்பை போட்டு, பீன்ஸ் உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்