மட்டன் சுக்கா

தேதி: June 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஐந்து
முழுப்பூண்டு - ஒன்று
மிளகுத்தூள் - இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
முந்திரி - பத்து


 

மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறிது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒன்றரை தேக்கரண்டி உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு மற்றும் மிளகாய் வற்றலைப் போட்டு கிளறிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறி விட்டு, பின் வேக வைத்த மட்டன் குழம்பை போட்டு வதக்கவும்.
மட்டன் நன்கு வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், வறுத்த முந்திரியை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம் நீங்கள் செய்த மட்ட்ன் சுக்காவில் கடைசியில் முந்திரியை போட சொன்னிங்க.
அரைத்து விடனுமாம்? அல்லது முழுதாக போடனுமா?
பதில் சொல்லவும்.

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்...இப்பொழுது தான் பார்த்தேன்.
முந்திரியை வறுத்து அல்லது அப்படியே சிறு துண்டுகளாக்கி சேர்க்கலாம்.
என்னுடைய குறிப்பிலும் மாற்றிவிட்டேன்...
நன்றி...

நன்றி...

மேடம்
என்க்கு சமையல் பற்றி கொஞ்சம் தான் தெரியும். நான் அறுசுவையினை பார்த்து தான் புது சமையல் செய்கிறேன்.
நாளை மட்டன் சுக்கா செய்து விட்டு பதில் தருகிறேன்.

எனது குறிப்பை வைத்து சமைத்து பார்த்து உங்கள் பதிலை தாருங்கள்....நன்றி....
நன்றி...

நன்றி...

மிகவும் சுவையாக இருந்தது மேடம்.

எப்படி இருக்கீங்க? நீங்க செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி...என்னை மேடம்-னு எல்லாம் சொல்ல வேணாம்...வாணி-னு சொன்ன போதும்...சரியா...
நன்றி...

நன்றி...

போன வாரம் உங்கள் சுக்காவை சமைத்தேன். அருமையாக இருந்தது. செய்வதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. நன்றி வாணி.

ஜானகி

நேற்று மட்டன் சுக்கா,வணிதா அக்கா கிராமத்து கறி குழம்பு செய்தேன்.நான் செய்யும் மட்டன் ருசியஹ இருக்காது என்பார் husband
ஆனால் நேற்றுசெய்யும் பொழுதே ருசி பார்த்து சூப்பர் என்று அவர் நண்பர்களும் பாராட்டு மிகவும் சுவையாக இருந்தது பல வருடம் கழித்து நான் எதிர்பார்த்த ருசி கிடைத்தது என்று சொன்னாங்கா thank u akka.