காலிஃப்ளவர் பகோடா

தேதி: June 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஓமம் - அரை தேக்கரண்டி (அல்லது)
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயத்தாள் - இரண்டு
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க


 

காலிஃப்ளவரை சுடுத்தண்ணீரில் இரண்டு நிமிடம் போட்டு வைத்து எடுக்கவும்.
பின் சிறுதுண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவருடன் கடலைமாவு, மிளகாய்த்தூள், ஓமம் அல்லது பெருங்காயதூள் மற்றும் உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை கிள்ளிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வெங்காயத்தாளை சிறிதாக அரிந்து அதன் மேலே தூவி, பின் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த காலிஃப்ளவர் பகோடா மிகமிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

for kadalimavu change cournflour it will be very taste.add ginger, greenchill, and garic paste also.