பாதாம் ஆயிலை தேய்த்து குளிக்கலாமா?

ஹாய் மனோகிரி மேடம், என் பொண்ணுக்கு 4 வயதாகிறது.அவளுக்கு முகம் மற்றும் உடம்பில் தேங்காய் ஆயிலுக்கு பதில் பாதாம் ஆயிலை தேய்த்து குளிக்கலாமா?இதனால் கெடுதல் ஏதேனும் உண்டா?நன்றி

ஹலோ லெட்சுமி எப்படி இருக்கின்றீர்கள்? தங்களை காக்கவைத்ததற்க்கு மன்னிக்கவும்.எனது கம்பியூட்டரின் பிரச்சனையால் கடந்த இரண்டு தினங்களாக இணையதளத்திற்க்குள் நுழையமுடியாமல் இருந்தேன். இப்பொழுது பிரச்சனை இல்லை, கூறியபடியே சரி செய்து விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
தங்கள் குழந்தைக்கு பாதாம் ஆயிலை தேய்த்து குளிக்க வைக்கலாமா என்று கேட்டுள்ளீர்கள். குழந்தைக்கு அது தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.காரணம் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதாக இருப்பதால் சாதாரணமாக தேங்காய் எண்ணையே போதுமானது. அல்லது johnson&johnson baby oilலை உபயோகிக்கலாம். மற்ற எண்ணெய்கள் வரண்ட சருமம் உள்ளவர்களுக்கு தான் பயன்படும், குழந்தைகளுக்கு அல்ல.நன்றி.

என் பெயர் சுதா,
ஜான்சன் பேபி ஆயில் liquid paraffin கொண்டது உபயோகிக்கும் முன் யோசிக்கவும்

நன்றி
சுதா

மேலும் சில பதிவுகள்