முட்டை ஃப்ரைட் ரைஸ்

தேதி: June 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

முட்டை - நான்கு
பாசுமதி அரிசி - 2 கப்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - நான்கு
பச்சை பட்டாணி - அரை கப்
கேபேஜ் - ஒரு கப்(துருவியது)
வெங்காயத்தாள் - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
வெள்ளை மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி(தேவைபட்டால்)
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை(தேவைபட்டால்)
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி


 

அரிசியை ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கேரட்டை கழுவி, தோலெடுத்து பொடியாக அரிந்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பீன்ஸை பொடியாக அரிந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முதலில் கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணியை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிவிட்டு கேபேஜ், வதக்கிய காய்கள் மற்றும் முட்டையை போட்டு கிளறவும்.
உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிட்டு, சாதத்தை உதிரி உதிராக போட்டு மெதுவாக அரிசி உடையாமல் பார்த்து கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் VaniRamesh, உங்க முட்டை ப்ரைட் ரைஸ் இன்று செய்தேன்... நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)