தேதி: June 19, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலைப்பருப்பு - ஒரு கோப்பை
வெங்காயம் - நான்கு
தக்காளி - ஒன்று
துருவிய தேங்காய் - ஒரு கோப்பை
பச்சைமிளகாய் - ஆறு
நசுக்கிய முழு பூண்டு - ஒன்று
இஞ்சி - இரண்டு துண்டு
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரைதேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
ஏலக்காய் - நான்கு
கிராம்பு - நான்கு
பிரிஞ்சி இலை - இரண்டு
எண்ணெய் - முக்கால் கோப்பை
உப்பு - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காய்ப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மைய்ய அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சை மிளகாயில் நான்கை மட்டும் மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

ஊறிய பருப்புடன் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும்.

பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.

அதைத் தொடர்ந்து நறுக்கின தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காய்ப் பால் மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும்.

பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.

இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

அறுசுவையில் முந்நூறுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள <a href="experts/232" target="_blank">திருமதி. மனோகரி ராஜேந்திரன் </a> அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.

Comments
நன்றி
வடகறியை படத்துடன் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி.இக்குறிப்பை செய்து பார்த்து என் கருத்தை அனுப்புகிறேன். மீண்டும் மிக்க நன்றி.
ஹலோ சுபாஷினி
ஹலோ சுபாஷினி எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பை அறுசுவையில் செய்து காட்ட சந்தர்ப்பம் அளித்ததற்கு மிக்க நன்றி. கட்டாயம் செய்து பார்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.
எனது பெயர்
எனது பெயர் தமயந்தி நானும் இந்த அங்கத்தில் உறுப்பினர்.நான் டொரொன்டொ வில் இருக்கிறென்.யாராவது டொரொன்டொவில் இருப்பவர்கள் இருந்தால் இன்ட்ரொடுcஎ செய்யவும்.
இப்படிக்கு
தமயந்தி
Tஒரொன்டொ
வடகறி
திருமதி மனோகரி அவர்களுக்கு வணக்கம்
தங்களுடைய வடகறி குறிப்பில் கடலை பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பு (Green Gram) கொண்டு இந்த கறியை செய்தால், எப்படி செய்வது. நன்றி
வணக்கம் Mr JimmiR
வணக்கம் Mr JimmiR. அறுசுவையில் உங்களிடம் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன். எப்படி இருக்கின்றீர்கள்? வடகறி பற்றிய தங்களின் கேள்வியான கடலைப் பருப்புக்கு பதில் பாசிப்பருப்பை பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் பாசிப்பருப்பு சற்று பிசுபிசுப்பு தன்மை வாய்ந்ததால் ஊறவைத்து கரகரப்பாக கெட்டியாக அரைத்தவுடன், பக்கோடாக்களாக எண்ணெயில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்து பிறகு, குழம்பில் போட்டு கலக்கி உடனே இறக்கி விடவும். மற்றபடி மேற்கூறியுள்ள செய்முறையில் மாற்றம் தேவையில்லை. இவ்வாறு செய்துப் பாருங்கள்,ஆமாம் தங்களுக்கு ஏன் கடலைப் பருப்பின் மீது அவ்வளவு வெறுப்பு? நான் பாசிப்பருப்பை உபயோகித்து இதுவரை வடகறி செய்ததில்லை, தங்களின் தயவால் செய்து பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். நன்றி.
வடகறி
மனோகரி மேடம் தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நலமா. நான் நலமே. வேலையின் காரணமாக நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து செல்வேன். ஆனால் தங்கள் அறுசுவை அரிய படைப்புகளைக் காணத்தவறுவதில்லை. வாழ்த்துக்கள் பல.
வடகறி
வணக்கம் மேடம்,கடலைப்பருப்பினை அரைத்து அவித்து பொரிக்க தேவையில்லையா?[காரணம் கறிக்குள் போடும் போது குழைந்து கொள்ளாதா?] நன்றி.
THuSHI
வணக்கம் லக்ஷனா
ஹலோ.... வணக்கம் லக்ஷனா எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் சுகம் தானே. வடகறிக்கு பயன்படுத்தும் கடலைபருப்பை அரைக்கும் பொழுது கரகரப்பாக அரைப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் குழையாது.வெந்த பருப்பை போட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் இறக்கி விடுகின்றோம், ஆகவே ஆவியில் வெந்த பருப்பை மீண்டும் பொரிக்க தேவையில்லை. மேற்கூறியுள்ள செய்முறை இட்லிக்கு மிக பொருத்தமாக இருக்கும்.ஒகேவா,நன்றி.
ஹலோ மனோகரி மேடம்...,
ஹலோ மனோகரி மேடம், இடியப்பத்துடன் வடகறியை சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா?.நன்றி.
வணக்கம்
வணக்கம் மனோகரி மேடம்,
வடகறியை நான் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. படத்துடன் விளக்கி கூறியமைக்கு தங்களுக்கு நன்றி.
ஹலோ அன்பு மலர்
ஹலோ அன்பு மலர், எப்படி இருக்கின்றீர்கள். இடியாப்பத்துடன் வடகறி பொருந்தாது. காரணம் இடியாப்பத்திற்க்கு சற்று நீர்த்த மாதிரியான குழம்பே பொருத்தமாக இருக்கும். வடகறி கெட்டியாக இருப்பதால் அதற்கு பொருந்தாது. வடகறியின் சுவையைக் கூட்ட இட்லியால் மட்டும் தான் முடியும்.நன்றி.
வடகறி
வணக்கம் டியர் சுபாஷினி, வடகறியை செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. இன்னும் வேறு ஏதாவது குறிப்பு வேண்டுமென்றால் கூட தயங்காமல் கேட்கவும். தெரிந்திருந்தால் நிச்சயம் செய்துகாட்டுகின்றேன்.நன்றி.
ஹலோ மனோகரி மேடம்
ஹலோ மனோகரி மேடம், நான் நலமாக இருக்கிறேன்.தாங்கள் நலமா?.தாங்கள் தந்த பதிலுக்கு மிக்க நன்றி.
hai manohari madam
how are you? என்னுடைய சந்தோஷத்தையும் பாராட்டையும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வந்திருக்கிறேன்.எனக்கு செட் தோசை வடகறி என்றால் ரொம்ப பிடிக்கும் சமீபத்தில் ஒரு நாள் ஹோட்டலில் ருசித்தேன். அன்றிலிருந்து வடகறி செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை. சரி இருக்கவே இருக்கு நமது அறுசுவை என்று உள்நுழைந்தேன். போன உடனே உங்களுடைய வடகறி குறிப்பு இருந்தது உடனே செய்து பார்த்து விட்டேன்.superb madam.ரொம்ப நன்றாக வந்திருந்தது.பாராட்டையும் பெற்று தந்தது.ரொம்ப நன்றி மேடம்.சமையல் அல்லது மற்ற விஷயங்களிலும் உங்களது பங்களிப்பு ப்ரமாதம்.உங்களது ஆலோசனைகள் பல எனக்கு உதவி இருக்கிறது.
thank you madam,
bye bye
மிக்க மகிழ்ச்சி
ஹலோ moon நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? நான் நல்ல சுகம்.நன்றி. இந்த வடகறி குறிப்பை செய்துப் பார்த்து, பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளதை பார்த்து எனக்கும் சந்தோசமாக இருந்தது. மேலும் என்னுடைய ஆலோசனைகளும் தங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.நன்றி.
வடகறி
ஹலோ மனோகரி madam எப்படி இருக்கீங்க?
இந்த வடகறி குறிப்பு பார்க்க நன்றாக இருக்கு
இந்த கடலையை பொரித்து சமைத்தால் நன்றாக இருக்குமா?
please கொஞ்சம் சொல்வீர்க்ளா madam
வடகறி
அன்பு தங்கை தேவி எப்படி இருக்கீங்க? சமையலில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது,அதை நன்கு பயின்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்.
ஆமாம், பருப்பு வடைக்கு பொரிப்பதுப்போல் ஆனால், அதன் நிறம் மாறுவதற்கு முன்பாகவே அரை வேக்காடாக பொரித்து எடுத்து, நன்கு எண்ணெய்யை வடிய விட்டு மசாலாவில் போடவேண்டும். இந்த முறையிலும் சுவையாக இருக்கும்.நன்றி.
thankyou so much Manohari madam
எனது கேள்விக்கு இவ்வளவு சீக்கிரத்தில் பதில் அனுப்பியதற்கு மிகவும் நன்றி Manohari madam நிற்சயம் இதனை செய்து விட்டு உங்களுக்கு அறிய தருகிறேன் நன்றி.
thanks
hi manokari,
vada curry super. unkal receipies ellamae super. presentation also very super. thanks for this receipe
வடகறி
எங்க போயிட்டீங்க நீங்க??உங்க வடகறியை பாத்து பாத்து ஏங்குவேன்..இடிலியுடன் தான் சுவையாக இருக்கும் என்பதால்..இங்க இட்லி செய்தால் செலவாகாது..இதில் ஏதாவது மாற்றம் வந்தால் சப்பாத்தியுடன் சாப்பிட முடியுமா?பார்க்கவே சாப்பிட வேன்டும் போல உள்ளது
அது போல் தேங்காய்ப் பொடி சேர்த்து பால் செய்யலாமா?அதாவது கொகொனட் மில்க் பவுடரால்
டியர் தளிகா
ஹலோ ஹலோ சுகமா? ஸாரி டியர் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், நீங்க கேட்டிருந்த ரெடிமேட் தேங்காபால் பவுடரை கரைத்து கூட இந்த குறிப்பிற்க்கு பயம்படுத்தலாம். மேலும் பருப்பை அரைத்து அவிப்பதற்கு பதில் பகோடாக்களாக பொரித்து செய்தால் இட்லியுடன் மற்ற பலகாரங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். டிரை செய்து பாருங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.
பாண்டி பஜாரில் !!! மனோஹரி மேடம்!!!
சென்னையில் வேலை செய்த போது... பாண்டி பஜாரில் பாலஜி பவனில் காலை 7 மணி வரைதான் கிடைக்கும் இந்த வடகறி!!!கொஞ்சம் தாமதம் ஆனாலும் கிடைக்காது!!!
பக்கதில யாராவது வடகறி சாப்பிட்டுகொண்டிருந்தால் அதை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு மத்த ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுவோம்
:-((
இதுக்காகவே என் ரூம்மேட் மேரியும் நானும் சீக்கிரம் போவோம்....
இன்று தான் என்னால் செய்ய முடிந்தது.... இனி நானும் சூப்பர் வடகறி செய்யமுடியும் என்று உங்கள் வடகறியை செய்து சாப்பிட்டு முடிவுக்கு வந்துள்ளேன்...
மிக்க நன்றி!!! இனி அடிக்கடி செய்ய வசதியாக சில வடைகளை பிரீஸ் செய்யலாம் என்று இருக்கிறேன்.. அது கூட நல்லா இருக்குமா??
Hope is just the part of the equation
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
வடகறி
வடகறி பிரமாதமா வந்தது....... நன்றிகள் பல.
ஜெனிலா
ஜெனிலா
வடகறி
நன்றி இலக்குமி, வடகறி குழம்பு நீங்க கூறுவதுப் போல் சென்னையில் பிரபலம் வாய்ந்த ஒன்று தான்.நானும் அதை அடிக்கடி செய்து சுவைத்து மகிழ்வேன். ஆனால் வேகவைத்த வடையை நான் ஃபிரீசரில் வைத்ததில்லை, ஆனாலும் அவ்வாறு வைத்திருந்து செய்வதில் சுவை மாறாது என்றே நினைக்கின்றேன் ஆகவே ஒரு நாளைக்கு நானும் அவ்வாறு வைத்திருந்து சமைத்துப் பார்க்கலாமென்று இருக்கின்றேன்.இந்த குறிப்பை செய்து பின்னூட்டம் தந்தமைக்கும்,ஃபிரீசரில் வைக்கும் டிப்ஸ் தந்தமைக்கும் மிக்க நன்றி.
நன்றி ஜெனிலா
நன்றி ஜெனிலா, அப்ப... உங்க வீட்டிற்கு நான் வந்தால் கட்டாயம் இட்லி, தோசைக்கு வடகறி கிடைக்கும் தானே? இந்த குறிப்பைச் செய்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி டியர்.
அன்புள்ள மனோஹரி மேடம்
அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமா. வீட்டில் அனைவரும் நலமா.உங்களுடன் பேசி நிறைய நாள் ஆகிறது.உங்களுடைய வட கறி செய்தேன். தோசைக்கு சூப்பராக இருந்தது.எப்பவே செய்து பார்க்கனும்னு ஆசை இன்று தான் நிறைவேறியது. போட்டோ எடுத்து வைத்து இருக்கிறேன் பாபு அண்ணனுக்கு அனுப்பிய பின் போட்டோவை போடுவார்கள். மிகவும் சுவையான வட கறியை போட்டோ உடன் செய்து காட்டியதற்க்கு மிக்க நன்றி மேடம்.
அன்புடன் கதீஜா.
வணக்கம் மேடம்
வணக்கம் மேடம்,
வடகறியும்,பருப்பு தோசையும் செய்தேன்,அருமை...என்னவர் விரும்பி சாப்பிட்டார்,மூன்றாவது முறையாக செய்கிறேன்,நன்றி மேடம்
சுதாஸ்ரீ
sudhasri
vadakari
i tried this it really taste's very much.
சுவையான வடைகறி!
உங்க வடைகறி செய்தேன். நல்ல சுவையாக இருந்தது. என் கணவரும் மிகவும் பிடிச்சிருக்குனு சொன்னார்.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
தங்களின் குறிப்புகளை
தங்களின் குறிப்புகளை பின்பற்றி இன்று காலை வடகறி செய்துப் பார்த்தேன்.மிகவும் அருமையான ருசியுடன் மணத்தது.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
மனோகரி மேடம், எப்படி
மனோகரி மேடம், எப்படி இருக்கீங்க? முதலில் தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். உங்க வடைகறி குறிப்பை பார்த்து ரெண்டு வாரம் முன்னாடி சப்பாத்தியுடன் செய்தேன். என் கணவர் என்னை இதுவரையில்லாத அளவு ரொம்ப பாராட்டினார். நாளை காலை தோசையுடனும் வடைகறிதான். ரொம்ப நன்றி மேடம் அருமையான குறிப்பிற்காக.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
Very nice
Thanks a lot for this superb dish.... Yesterday only I did this it was so nice...
Super akkka. 2row side dish
Super akkka. 2row side dish ready
Please help
நான் முதல் முறையாக பதிவு செய்கிறேன். தவறு இருதால் மன்னிக்கவும். ஏனக்கு இரண்டறை வயது பெண் குழந்தை உள்ளது. ஏனக்கு இதுவறை மாதவிலக்கு சரியாக இறுந்தது.ஆனால் கடந்த இரண்டு மாதமாக ஒரு வாரம் தள்ளி இருதாலும் 7 நாள் முடியவேன்டிய உதிரம் 13 நாளாக உள்ளது. இப்போது என்னுடைய மாதவிலக்கு 04-03- 15, எனொகி உதிரம் நிற்க்கவில்லை.ஆனால் கடந்த முன்று நாளாக ஒவ்வொரு துளியாக உள்ளது akka.