தேதி: June 22, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சின்ன முள்ளங்கி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - நடுத்தர அளவில் இரண்டு
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி(நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - மூன்று மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும். குடைமிளகாயையும் நறுக்கி கொள்ளவும்.

தேவையான மசாலாத் தூள்களையும், இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.

அதில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்து வந்ததவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் கொத்துமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

இப்போது சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.

இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <a href="experts/57" target="_blank"> திருமதி. வாணி ரமேஷ் </a> அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருவது கலிஃபோர்னியாவில். சமையலில் தான் இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக அடக்கமுடன் கூறும் இவர், வித்தியாசமான, புதுபுதுக் குறிப்புகளை முயற்சித்துப் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். இங்கே அறுசுவையில் நேயர்கள் பயனுறும் வண்ணம் பல குறிப்புகளை படங்களுடன் அளித்து வருகின்றார்.

Comments
டியர் வாணி ரமேஷ்
உங்கள் முள்ளங்கி சாம்பார் செய்தேன். அருமையாக இருந்தது.
மாங்காய் சாம்பார் எப்படி செய்வது ? தெரிந்தால் சொல்லுங்களேன் .....
நன்றி
அனிதா
hi
டியர் அனிதா,
நன்றி...
எப்படி இருக்கீங்க?
http://www.arusuvai.com/tamil/node/4224
இந்த லின்க்-ல பாருங்க...
முள்ளங்கி போடும் இடத்தில் மாங்காய் சேர்க்கவும்...நன்றி...
நன்றி...
டியர் வாணி,
டியர் வாணி,
நான் நலம். நீங்கள் எப்படி உள்ளீர்கள் ? உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.
ஒரு சிறிய சந்தேகம்... மாங்காய் சாம்பார் செய்யும் போது, மாங்காயை தனியாக வேக வைத்து கடைசியில் தான் போட வேண்டுமா ? முதலில் மாங்காயை போட்டால் குழந்து போய் விடாதா ?
hi
டியர் அனிதா,
node/4224 இல் உள்ளப்படி செய்துப்பார்க்கவும்...தண்ணீர் வேகும்போது மாங்காய் சேர்க்க வேண்டும்...பாதி வெந்தவுடன் பருப்பு சேர்த்து, பருப்பு கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்...
நன்றி...
நன்றி...
முள்ளங்கி சாம்பார்
வாணி இந்த சாம்பார் ரொம்ப நன்றாக இருந்தது. இட்லிக்கும் நல்ல காம்பினேஷன்.
dear vani ramesh
மிக்க நன்றி வாணி
மாங்காய் சாம்பார் நன்றாக வந்தது.
அனிதா
hi
Very Good
I tried this Mullangi sambar for the firt time and it was so good. My friend appreciated my cooking. Tks a lot....
Very Good
I tried this Mullangi sambar for the firt time and it was so good. My friend appreciated my cooking. Tks a lot....
இன்றைக்கு
இன்றைக்கு எங்கள் வீட்டில் இந்த சாம்பார் தான். வேலை இருக்கிறது. சாம்பார் வைத்துச் சாப்பிட்டு விட்டு பதில் எழுதுகிறேன்.
பூங்கோதை
Marvelous
The way you explain step by step with photos is really good.
Today I m going to do this. It helps lot whoever comes from india, especially Tamil Nadu.
Appreciated!!!
Thanks.
-Panneer
hello வாணி ரமேஷ்
உங்களின் முள்ளங்கிசாம்பார் குறிப்பு நன்றாக இருந்தது. இன்றைய பகல் சாப்பாட்டிற்கு செய்தேன்.
நான் இலங்கை,அதனால் உங்களின் சாம்பார் எனக்கு வித்தியாசமாக இருந்தது
அன்புடன் அதி
சாம்பார்
இந்த சாம்பார் செய்தேன் கொஞ்சம் புளி சேர்த்து செய்தேன் நல்லாஇருந்தது