புளியோதரை

தேதி: June 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (16 votes)

கோயில் புளியோதரை செய்முறை குறித்து ஒரு நேயர் கோரிக்கை விடுத்திருந்தார். கோயில் புளியோதரை செய்முறைக்கு ஒத்தாற்போல் உள்ள இந்த புளியோதரை செய்முறையை <a href="experts/232" target="_blank">திருமதி. மனோகரி </a>அவர்கள் இங்கே படங்களுடன் விளக்குகின்றார்.

 

அரிசி - மூன்று கோப்பை
<b>பொடி தயாரிக்க:</b>
காய்ந்த மிளகாய் - பத்து
தனியா - மூன்று தேக்கரண்டி
கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி
வெந்தயம் - முக்கால் தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
எள்ளு - இரண்டு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்
உப்பு - ஒரு தேக்கரண்டி.
<b>புளிக்காய்ச்சல் தயாரிக்க:</b>
புளி - ஆரஞ்சு பழமளவு
எண்ணெய் - அரைக்கோப்பை
கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - நான்கு தேக்கரண்டி


 

முதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
பொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
அதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.
அறுசுவையில் முந்நூறுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள <a href="experts/232" target="_blank">திருமதி. மனோகரி ராஜேந்திரன் </a> அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hello manohari madam,

I tried puliothara recipe at home,it came out well. Thanks for the recipe... I would also like to learn manohari madam's chicken biryani,i would be happy if it can be done with boneless chicken.

jpriya

ஹலோ பிரியா எப்படி இருக்கீங்க?இந்த புளியோதரை குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்கநன்றி. நிச்சயமாக நீங்கள் கேட்டுள்ள சிக்கன் பிரியாணியை கூடிய விரைவில் செய்துக் காட்டுகின்றேன். நன்றி.

திருமதி மனோகரி மேடம்,
தாங்கள் குறிப்பின்படி புளியோதரை நேற்று செய்தேன்.அப்படியே கோயில் புளியோதரை போன்று இருந்தது.வீட்டில் அனைவரும் என்னை பாராட்டினர்.மிக்க நன்றி.
மேடம் வத்த குழம்பு கல்யான வீட்டில் உள்ளது போல் எனக்கு வரவில்லை.தாங்கள் குறிப்பினை கொடுத்து உதவவும்.மிக்க நன்றி.

Dear mam i tried the receipe it turned out well thank you for your receipe saranyamohan

saranyamohan

We got the site info from my friends sister.. We have been trying this for the first time self... Turned out excellent...Excited and helpful to see this site.. Hope we can use this site very frequently as we stay very far from our home.. I can spread this site details across to my friends :)

டியர் மனோகரி மேடம்
உங்கள் புளியோதரை மிகவும் அருமை எனக்கு ரொம்ப் பிடிச்சிருக்கு. வாரத்தில் இரண்டு முறை கட்டு சாதம் தான் செய்வேன். அதுவும் புளியோதுரை செய்யும் போது இனி உங்கரெசிபிதான்
ஜலீலா

Jaleelakamal

இந்த புளியோதரை குறிப்பை செய்து பார்த்து பின்னூடம் அனுப்பியுள்ள அன்பு நேயர்களாகிய,சுபத்ரா, சரண்யா, குரு, மற்றும் ஜலீலாபானு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி.

உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது
எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்
மிக்க நன்றி

டியர் தேவி எப்படி இருக்கீங்க?இந்த குறிப்பை செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பியதைப் பார்த்து உற்சாகமாக இருந்தது. மிக்க நன்றி.

வாவ் ரொம்ப நாளா இத பார்காம விட்டுட்டேனே.. புளியோதரை சீக்ரெட் இப்பதான் தெரிஞ்சது.நன்றி

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹாய் சுபத்ரா

நலமா, நலமே.
நீங்கள் நெல்லை சமையல் பிரிவில் திருமதி சுப்புலக்ஷ்மி அவர்களின் வத்தல் குழம்பு
செய்து பார்க்கவும்

anbudan

என்னுடைய கருத்துக்கு பதில் அனுப்பியதற்கு நன்றி
உங்களுடைய அணைத்து குறிப்புகளும் நன்றாக தான் இருக்கின்றது

மனொஹரி மேடம்

நான் அருசுவைக்கு புதுசு.உங்க புளியொதரை மிகவும் சூபர் நன்றி. எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்?

Kala

மனோகரி அக்கா, KT என்ற பேர்ல கேள்வி கேக்கரவுங்க இப்பதான் தட்டு தடுமாறி தமிழ்ல டைப் பண்ண கத்துக்கறாங்க. அவங்கள ஒரு ராகிங் பண்ணிட்டு அப்புறமா பதில் குடுங்க.

puliyodharai recipie super

hello manohari madam ,
i prepared this recipie it's really super
thanks
lathaganesh

hello manohari madam ,
i prepared this recipie it's really super
thanks
lathaganesh

அன்புள்ள சகோதரிக்கு என்னுடைய வணக்கம்!

உங்களுடைய குறிப்பை செய்தேன் மிகவும் அருமையாக வந்தது. என் பாட்டி நான் அமெரிக்கா வரும்பொது செய்து கொடுத்தார்க்ள். 6 மாதம் வரை கெடமால் இருந்தது. வாசனையும் குறையவில்லை. உங்கள் குறிப்பினை பார்த்து செய்ததும் அதே வாசனை தந்தது.

நன்றி.
வித்யா ராஜ்

வித்யா ராஜ்

சகோதரி கலா அவர்களுக்கு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மன்னிக்கவும் ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பொழுதுதான் இதைப் பார்வையிட நேர்ந்தது. இந்த புளியோதரையை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு வெளியில் வைத்திருக்கலாம் ஆனால் புளிக்காய்ச்சலை மட்டும் அதை சோற்றுடன் கலக்காமல் வைத்திருந்தால் இரண்டு வாரம் வரை வெளியில் வைத்திருக்கலாம், வெளியூர் பயனத்தின் போது கூட எடுத்துச் செல்லலாம் கெடாது,ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் இரண்டு மாதம் வரைகூட வைத்திருந்து பயன்படுத்தலாம். பழம்புளியாக இருந்தால் மேலே கூறியுள்ள காலவரையை விட இன்னும் கூட அதிக நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

பின்னூட்டம் அனுப்பியுள்ள சகோதரிகள் அலமேலு மற்றும் லதாகணேஷ்,உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன்.

ஹலோ வானதி டியர் எப்படி இருக்கீங்க?குழந்தைகள் நலமா?அதிகமாக உங்கள பார்க்க முடிவதில்லையே ஏன் ரொம்ப பிஸியா, என் மருமகள் எப்படி இருக்காங்க நல்லா சாப்பிடுராங்களா?

வணக்கம் வித்யா. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே.அருமையான உங்கள் பின்னூட்டத்திற்கு எனது நன்றி. நீங்க சொல்வதைப் பார்த்தால் உங்கள் பாட்டி சமையலில் மிகப் பெரிய வல்லுனராக இருப்பார் போல் தோன்றுகின்றது,முடிந்தால் அவங்களுடைய குறிப்புகளை இங்கு எங்களுடனும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன் எல்லோருக்கும் பயன்னுள்ளதாக இருக்கும் தானே.எனக்கும் எனது பாட்டி செய்யும் புளிசாதத்தின் சுவையும் அதன் நிறமும் இன்னும் நினைவில் உள்ளது அந்த காலத்தில் அவங்க உபயோகித்த பொருட்கள், உபகரணங்கள் அவைகளை கையாண்ட விதம் ஆகியவற்றால் அதே குறிப்புகளைக் கூட இந்த காலத்தில் அதன் சுவையில் மாற்றம் உள்ளது என்னவோ உண்மை தான்.எங்க அம்மாச்சி வைக்கும் கத்திரிக்கா போட்ட கறிகுழம்புடன், தேங்காசோறு காம்பினேஷனில் செய்ததைப் போல் என் அம்மாகூட அதே ருசியில் செய்ததில்லை. உங்கள் பின்னூட்டம் எனக்கு நிறைய மலரும் நினைவுகளை கிளறி அதை உங்களிடமே பகிர்ந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,அதற்கும் மிக்க நன்றி விதியா.