சிக்கன் பிரியாணி - 2

தேதி: June 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (14 votes)

 

சிக்கன் - அரை கிலோ
பாஸ்மதி அரிசி - மூன்று கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
புதினா - அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - பத்து பல்
நெய் - ஒரு மேஜைக்கரண்டி(விருப்பப்பட்டால்)
எண்ணெய் - அரை கப்
மஞ்சப்பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - எட்டு
எழுமிச்சம் பழம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
உப்பு - இரண்டு தேக்கரண்டி
<b>பொடிக்க:</b>
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - ஆறு
ஏலக்காய் - ஆறு


 

வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும். பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
சிக்கனை தயிர், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவிவிட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை ஊறவைத்த தண்ணீரை வடித்து விட்டு எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் பொடித்த லவங்கம், பட்டை, ஏலக்காய் பொடி மற்றும் கரம் மசாலாவை போட்டு வதக்கவும்.
பிறகு சிக்கனை போட்டு வதக்கி மூடி போட்டு வைக்கவும். 15 நிமிடம் வரை அடிக்கடி கிளறவும்.
சிக்கன் பாதி வெந்தவுடன் நாலரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு ஒரு கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறவும்.
அரிசி பாதி வெந்தவுடன் அனலை குறைத்துவிட்டு எழுமிச்சையை பிழிந்து மூடி வைக்கவும்.
அரிசி வேகும்வரை அடிக்கடி திறந்து பார்த்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறிவிடவும். அரிசி வெந்தவுடன் இறக்கிவிட்டு புதினா மற்றும் கொத்துமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <a href="experts/57" target="_blank"> திருமதி. வாணி ரமேஷ் </a> அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வருவது கலிஃபோர்னியாவில். சமையலில் தான் இன்னமும் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பதாக அடக்கமுடன் கூறும் இவர், வித்தியாசமான, புதுபுதுக் குறிப்புகளை முயற்சித்துப் பார்ப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். இங்கே அறுசுவையில் நேயர்கள் பயனுறும் வண்ணம் பல குறிப்புகளை படங்களுடன் அளித்து வருகின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

colorful photos... ah... ahaa... naakkil neer ooorudu... method looks easy to me... I will try this sunday! and let you know what I get from my husband... if it is a good one! :)
aammaaaa... chalna yeppadi seivadu?

Hi,
I too need the receipe for salna that we used to get along with Parotta in hotel.. Do anybody know abt that one? Thanks..

Subha

எப்படி இருக்கீங்க?
இந்த பிரியாணி தான் எங்க வீட்டிற்க்கு வரும் விருந்தினர்களின் ஸ்பெஷல்...எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்...
செய்து பார்த்து சொல்லுங்கள்...எப்படி வந்தது என்று...
நன்றி...

நன்றி...

சால்னா செய்ய எனக்கு தெரியாது...மேலே உள்ள தேடுதல் பெட்டியில் "சால்னா" என்று டைப் செய்தால் நிறைய குறிப்புகள் வருகிறது...

நன்றி...

நன்றி...

Thanks vani. I will search and find out.

Subha

hai vani
i will try this biriyani and reply you the result soon

நன்றி...செய்து பார்த்து உங்கள் பதிலைச்சொல்லுங்கள்...

நன்றி...

hai vani
i made by the method you have given above it came out excellently.i use 4 cups of water for 2cups of rice.it will come good but then here rice seems to be wider .sterday i soaked the rice for 2 hrs and made with 1.5 cup of water as u have said .biriyani came so good that my husband appreciated me .the smell is still in my house thankyou for givig us such a nice easy recipe
now i am also a biriyani expert :)

நீங்கள் பிரியாணி செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி, புவனா...
நன்றி...

நன்றி...

ஹாய் திருமதி வாணி ரமேஷ்.

நலமாக இருக்கிறீர்களா?

இந்த சிகன் பிரியாணி சூப்பர்.........ஏற்கனவே சமையலில் அனுபவம் இருப்பதால் முதல் நாளே அசத்திவிட்டேன். அடுத்த நாள் விருந்தினர் வந்ததற்கும் இந்த பிரியாணியையே சமைத்து அவர்களின் பாராட்டையும் வாங்கினேன்.இந்தப் பாராட்டு உங்களையே சாரும். மிகவும் நன்றி திருமதி வாணி ரமேஷ். மேலும் இது போன்ற பல சுவையான சமையல் குறிப்புகளைத் தரவேண்டும்.

ஹாய் Rikha, நான் நலமாக உள்ளேன்...நீங்கள் எப்படி இருக்கிறிர்கள்? இந்த குறிப்பை செய்து பார்த்து உங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தியதற்க்கு ரொம்ப நன்றி...உங்களுடைய மகிழ்ச்சியை காணும் போது, எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது...மிக்க நன்றி, Rikha...

நன்றி...

அன்புள்ள வாணி அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா.குழந்தைகள் நலமா. நேற்று இந்த ஈசியான சிக்கன் பிரியாணி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நான் தேங்காய் பால் சேர்த்து செய்வதுதான் வழக்கம்.இது தேங்காய் பால் இல்லாமல் செய்கிறோமே என்று நினைத்தேன் ஆனால் சுவை நன்றாக இருந்தது. மேலும் இதுபோல நிறைய குறிப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

நலமாக உள்ளோம்...குழந்தைகளும் நலமாக உள்ளார்கள்...நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?
இந்த சிக்கன் பிரியாணி குறிப்பை செய்து, உங்கள் பாராட்டுகளை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...
சமையல் புலியான உங்களிடம் பாராட்டை பெற்றது இன்னமும் மகிழ்ச்சி அளிக்கிறது...

நன்றி...

நன்றி...

அன்புள்ள வாணி அவர்களுக்கு.
நான் நலமாக உள்ளேன். மகனும் நலமாக இருக்கிறான். என்ன இப்படி சொல்றீங்க நான் ஒன்றும் சமயல் புலி கிடையாது .உங்களை போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டி நிறைய உள்ளது.மேலும் உங்களின் அரிய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்

நன்றி.

Hi Vani,
Last week end i made this biriyani. Was quite different from the way i do. But it was really great. We had few guests on our home. They were appreciating me for the tasty Biriyani. Thanks for the recipe.

Regards,
Sumathi

natpu ennum puthagathin ganamana pakkam pirivu

அன்புள்ள வாணி மேடம், 3 கப் அரிசி என்றால் 600 கிராம் தானே?.

நலமா?
மிக்க நன்றி, சுமதி....தாங்கள் இந்த பிரியாணி செய்து பின்னூட்டம் அளித்ததற்க்கு...

நன்றி...

நன்றி...

நலமா?
1 கப் பச்சரிசி = 185 கிராம்
1 கப் பாஸ்மதி அரிசி = 200 கிராம்...
அதனால் நீங்கள் 3 கப் பாஸ்மதி அரிசிக்கு 600 கிராம் ஏடுத்து சமைக்கலாம்...
நன்றி...

நன்றி...

டியர் மேடம் ,நான் நலம். நிங்கள் நலமா?.தங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.இன்னும் பல அசத்தல் கொடுக்க வாழ்த்துக்கள்

நான் நலமாக உள்ளேன்...உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

நன்றி...

Hi,

Yesterday I have tried your receipe. Really very very wonderful receipe. My first briyani try was grand success.My husband appreciated very much.Thank you very much specially for this receipe.

Madam,

Could you please provide the measurement for 1 Kg chicken. I guess I cannot double the amount.

Regards,
Dinakaran

ஹலோ தினகரன் ஒரு கிலோவிற்கு நாலு ஆழாக்கு அரிசி போடுங்கள், இல்ல( நாலு பெரிய டம்ளர்)
ஜலீலா

Jaleelakamal

ஹலோ தினகரன் ஒரு கிலோவிற்கு நாலு ஆழாக்கு அரிசி போடுங்கள், இல்ல( நாலு பெரிய டம்ளர்)
ஜலீலா

Jaleelakamal

ஹாய் வாணி madam,
நேற்று உங்கள் recipe செய்து பார்த்தேன்,நன்றாக வந்தது,வாசனையே அமர்க்களமாக இருந்தது..
உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி...

உங்களுடைய சிக்கன் பிரியானி இன்று செய்து பார்த்தேன் சூப்பர் ஆனால் சிறிய தவறு நடந்துவிட்டது சிக்கனில் தயிர், அரைதேக்கரண்டி உப்பு என்று குறிப்பில் உள்ளது நான் தவறுதலாக தயிர் அரைதேக்கரண்டி என்று புரிந்து கலந்து பிரிட்ஜில் எடுத்துவைத்து விட்டேன் பிறகுதான் தெரிந்தது தயிருக்கு பக்கத்தில் கமா போட்டு இருக்கு

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

உங்க மூவருக்குக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :-).

நன்றி...

நன்றி...

Thanks for the nice recipe.This recipe inspiring me to cook.I would like to try this soon.could u plz give the measurement of onion,tomato and curd in grams.About how much teaspoon of ginger garlic paste, i have to use for this recipe.Thanks in advance.

கரமாசாலா இவ்வளவு போதுமா

Hi Vani, I did this recipe today, it came out very well. Actually i dont know to cook non-veg. i have already done chicken biriyani and got very worst comments from my husband. but today he appreciated me very much. Thanks you very much for the recipe.

Thanks and Regards,
Chitra Devi

Thanks and Regards,
Chitra Devi

Hai Mrs.Vani Ramesh,

Hope u all are doing good. Ur recipes are very impressive and looks very delicious.
I would like to know the water measurement for 2 cups of rice,if i soak the rice for 2 hrs, how much water should i need to use?

Thanks for posting.

Priya Chander

Priya Chander

Hai

Ennakku remba nalla oru doubt....

Veg Biriyani,Veg Pulav,Veg Rice --is this three same or different..

ithu moonum pannrathula konjam konjam difference irrukku...but more or less same.....

can some one tell me best receipe for veg.pulav.

If you do your work with luv and dedication,success will cum automatically.

Hello Mam,

I tried your chicken biryani yday and it was awesome. Thanks for sharing the recipe.