Hair fall

Hi everyboby,

I have 7 months old baby.....past 2 months i have too much of hair fall....please help me to get rid of this......

தினமும் இரவு ஏழு மணியளவில் தலையில் தூய்மையான தேங்காய் எண்ணையை நன்கு முடியின் வேர்கலில் படுமாறு நன்கு மசாஜ் செய்து கட்டிலின் மேல் படுத்து தலையை மட்டும் கட்டிலில் இருந்து தொங்குமாரு 20 நிமிடம் படுக்கவும்.பிறகு காலையில் எழுந்ததும் எண்ணை போகுமாறு தலைக்கு குளிக்கவும்...முடி உதிர்வதர்க்கு நல்ல பலன் கிடைக்கும்.

IT MAY BECAUSE OF WATER SALT CONDEMNATION. TRY TO CHANGE WATER IF POSSIBLE. & TRY BY MASSAGING IT WILL GIVE GOOD RESULT.

K.MANIVANNAN - ONGC-KKL - NAGAI.

K.MANIVANNAN
OIL AND NATURAL GAS CORPORATION LIMITED,
NERAVY,KKL / RESIDENCE - NAGAPATTINAM.

ஹாய் கீர்த்தி,
தலைமுடி உதிர்வதைத் தடுக்க பல வழிகள் உண்டு ஆனால் தலிகா கூறியது தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தலாம்.ஆனால் இரவு முழுவதும் எண்ணெய் வைத்திருப்பது எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளாது.
இரத்தஓட்டம் அதிகரித்தால் முடி உதிர்வது கட்டாயம் குறையும். அக்குப்ரஷர் முறை இதற்கு ஒரு நல்ல தீர்வு. இரு கை விரல்களையும் மடக்கி பெருவிரல் தவிர ஏனைய விரல் நகங்கள் இணையும்படி வைத்து விரல்களை மேலும்கீழுமாக உரசவும். இதனை காலை 5 நிமிடம் இரவு 5 நிமிடம் செய்தால் முடி உதிர்வது குறைவதுடன் இளநரையும் வராது. தலைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் விரல் நுனிகளில் முடிவதே இதற்குக் காரணம். முற்சித்துப் பாருங்கள்

ஹலோ மேடம் வணக்கம்

தலைமுடி உதிர்வதை தடுக்க கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் 100 மில்லிFranch oil கலந்து வைத்துகொள்ளவும். தலை குலித்தமறுநாள் இந்த எண்ணெயை லைட்டா சூடு படுத்தி முடிகால்கலில் தடவி கைகலால் மசாஜ் பண்ணவும்.தலையை எப்பொழுதும் ட்ரையாக வைக்காமல் இரண்டு நாளுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் தடவும் பழக்கத்தை வைத்துகொள்ள வேண்டும். எந்த ஒரு ட்ரீட்மெண்டும் ஒன்று இரண்டு நாட்களில் குணமாகாது. தொடர்ந்து செய்யும் போது கண்டிப்பாக பயன் கிடைக்கும். முடி கொட்டும் அனைவருக்கும் இந்த எண்ணெய் நல்ல பயன் தரும். நான் பிரான்ஸ்க்கு வந்தபுதில் ரொம்ப முடி கொட்டியது பிறகு இந்த எண்ணெயை இரண்டு வருடமாக தடவி வருகிரேன் முடி உதிர்வதில்லை.

Thanks.

thanks

ஹலோ டியர் கீர்த்தி எப்படி இருக்கின்றீர்கள்? புதியதாக தாயாகியுள்ள உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசியும். மகப்பேற்றுக்கு பிறகு ஏற்ப்படும் முடி உதிர்வை பற்றி கவலைப் படத்தேவையில்லை. இது பிரசவத்திற்கு பிறகு தற்காலிகமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்ப்படும் இயல்பான விசயம்.நாளடைவில் தானாகவே முடி கொட்டுவது நின்றுவிடும். காரணம் அது நமது உடலில் ஏற்படும் ஹார்மோன்ஸ் மாற்றத்தாலும், வைட்டமின்களும், இரும்பு சத்து போன்ற தாதுப் பொருட்களின் திடீரென ஏற்ப்பட்ட குறைபாடாலும் ஏற்ப்படும். என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்தே சரியாகிவிடும் ஆகவே நல்ல சரிவிகித சமமான ஆரோகியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதைக் குறித்து அதிகம் கவலைப் பட்டாலும் முடி கொட்டுவதின் அளவு அதிகரிக்கும்.ஆகவே கவலைப் படாமல் இருங்கள் இன்னும் ஒருசில மாதங்களில் சரியாகிவிடும்.நன்றி.

yess as she said u dunt need to worry much abt it now/......but the treatment which i said was genuine n adviced by my doctor...so if itz suits u go for it ddearr....i have to say that by doing thiz my hairfall reduced much

மேலும் சில பதிவுகள்