நியுட்ரிஷியஸ் ரசம்

தேதி: July 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பாசிப்பயறு - ஒரு தேக்கரண்டி
கொண்டைக்கடலை - ஒரு தேக்கரண்டி
கொள்ளுப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
தட்டைப்பயறு - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு


 

துவரம்பருப்பை தவிர மற்ற பருப்புகளை 5 மணி நேரம் ஊற விடவும்.
குக்கரில் துவரம்பருப்பு, ஊற வைத்த பருப்பு வகைகளை சேர்த்து 4 கப் தண்ணீர், மஞ்சள்பொடி பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
5 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். குக்கர் ஆறியதும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடையவும். புளியை 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து தக்காளியையும் கரைத்து விடவும்.
மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
புளி, தக்காளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்க்கவும்.
4 நிமிடம் கொதித்ததும் கடைந்து வைத்துள்ள பருப்புத்தண்ணீரை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து இறக்கவும்.


இந்த ரசத்தில் எல்லா வகை பருப்புகளின் சத்துகளும் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிகவும் ருசியானதும் கூட.

மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதி, நியுட்ரிஷியஸ் ரசம் நன்றாக இருந்தது. பல பருப்புக்கள் சேர்வதால் சத்தான ஒரு ரசம்.உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலா...!! எனக்கும் இந்த ரசம் பிடிக்கும்.
பின்னூட்டத்திற்கு நன்றி..!!