அறுசுவையில் புதிய சேர்க்கைகள் - மேலும் ஆலோசனைகள் தேவை

நான் பலமுறை குறிப்பிட்ட விசயம் இது. அறுசுவை ஆரம்பித்த போது இது உணவு குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தளமாக மட்டும் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். நாளடைவில் வருகையாளர்கள் விருப்பத்திற்கு இணங்கி, எனது கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டு சமையல் அல்லாத மற்ற விசயங்களையும் அறுசுவையில் அனுமதித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக நேயர்கள் இன்னும் பல விசயங்களை சேர்க்க சொல்லி எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர். சிலர் தொலைபேசியிலும், நேரிலும் சொல்லியிருந்தனர். இது முழுக்க முழுக்க மகளிர் தளம் என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக ஒரு நேயர் தொலைபேசியில் பயமுறுத்தினார். சமையல் தளம் என்ற பெயர் மாறி மகளிர் தளம் என்ற பெயர் வந்துவிடுமோ என்ற பயம் வந்தாலும், அதுவும் ஒரு வகையில் சிறப்புதான் என்ற எண்ணத்தில் நேயர்களின் ஆலோசனைகள் பலவற்றை முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.

இதன்பொருட்டு அறுசுவையில் மகளிர்கென புதிய பகுதி ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் கீழ்கண்ட சிறப்பு பிரிவுகள் இடம் பெறும்.

1. கதைகள்
2. கவிதைகள்
3. கட்டுரைகள்
4. ஆன்மீகம்
5. கைத்திறன்கள் (கைவேலைகள், தையல், கோலம் போன்றவை)

இன்னும் பல..

கைவேலைகள், ஆன்மீகம் சம்பந்தமான தகவல்களை எங்கள் பக்கம் முன்பே திரட்ட ஆரம்பித்துவிட்டோம். நேயர்கள் விரும்பினால் பங்களிப்பு செய்யலாம். கதை, கவிதைகள், கட்டுரைகள் இம்மூன்றும் முழுக்க முழுக்க உங்கள் பகுதி. உங்களது திறன் பத்திரிக்கைகளில் வெளியாகவில்லை என்ற வருத்தம் இனி வேண்டாம். லட்சக்கணக்கான தமிழ் நேயர்கள் உலகமெங்கும் இருந்து பார்வையிடும் அறுசுவையில் உங்கள் படைப்புகளை கொண்டு வருகின்றோம்.

வழக்கம்போல் பின்னூட்டம் பக்கத்தின் வாயிலாக உங்கள் படைப்புகளை அனுப்பலாம். அவற்றை பார்வையிட்டு, தேவையெனில் திருத்தங்கள் செய்து வெளியிடுவோம். இதனால் உங்கள் படைப்புகள் வெளிவர சற்று தாமதம் ஆகலாம். அதிகப்பட்சம் ஒரு வாரம் ஆகலாம். கண்டிப்பாக நீங்கள் அனுப்பும் அனைத்தும் உங்களின் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.

இதைத்தவிர அழகுக்குறிப்புகள், பெண்கள் ஆரோக்கியம், உடற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், சமையல்கலைஞர்கள் அறிமுகம் என்று இன்னும் ஏராளமான பகுதிகள் புதிதாக சேர்க்கப்படவுள்ளன. இது குறித்து உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

திரு அட்மின் அவர்களுக்கு, அறுசுவையில் பெண்களுக்கென்று புதியதாக சேர்க்கவிருக்கும் பகுதிகள் மிகவும் பயனுரும்வகையில் தாயாராகிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இதில் என்னுடைய ஆலோசனை, பொழுதுப் போக்கு அம்சங்களான, திரைவிமர்சனம், பாடல்கள்,காமெடி, மற்றும் அன்றாட வாழ்க்கையில் யதார்த்தமாக நடக்கும் அல்லது நடந்த ஜோக்ஸ் போன்ற அம்சங்களுக்கென்று ஒரு பிரிவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் தமிழகத்தின் அழகிய கிராமங்கள்,புனிதஸ்தலங்கள், தற்போதைய சுற்றுலா போன்ற மைய்யங்களையும், தெரிந்துக் கொள்ளும் வகையில் ஒரு பிரிவும் இருந்தால் அதைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இது குறித்து தங்களின் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,நன்றி.

சகோதரி அவர்களுக்கு,

நல்ல ஆலோசனைகள். திரை விமர்சனம் போன்றவற்றை எளிதாக கொண்டு வந்து விடலாம். பாடல்கள், படங்கள் கொண்டு வர அனுமதி பெற வேண்டும். அதற்கு நிறைய செலவாகும் என்று நினைக்கின்றேன். மற்ற பகுதிகளை நிச்சயம் கொண்டு வரலாம்.

நீங்கள் குறிப்பிட்டு இருந்த கிராமங்கள் பற்றின தகவல்கள் எனது நீண்ட நாள் எண்ணம். இதற்கென தனியாகவே ஒரு தளம் கொண்டு வரலாம் என்று எண்ணியிருந்தேன். அதேபோல் ஆலயங்கள் பற்றியும் தனியாக தளம் கொண்டு வரும் எண்ணம் இருந்தது. இதற்காக சில வருடங்களுக்கு முன்பு நிறைய தகவல்கள் எல்லாம் திரட்டினேன். இப்போது அவற்றை அறுசுவையில் கொண்டு வருகின்றேன். பின்னாளில் தேவைப்பட்டால் அந்த பகுதிகளை தனித்தளமாக மாற்றிவிடலாம். மிகவும் நன்றி.

திரு அட்மின் அவர்களுக்கு, புதிய அறுசுவை பகுதிக்காக தோன்றிய மற்றொரு யோசனை அதாவது ஆரோக்கிய வாழ்க்கையின் அடிப்படையில், நமது நாட்டு உணவுகளின் பரிமாறும்/serving அளவின் கலோரிஸ்ஸை குறிப்பிடும் படியாக ஒரு பகுதி இருந்தால் நமது உணவிலுள்ள சக்திகளை தெரிந்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவ்வாறு ஏராளமாக இருக்கும் நமது எல்லா வித உணவை கூறமுடியாவிட்டாலும் அன்றாட தமிழக உணவுகளிலிருந்து கூட ஒரு இட்லி, ஒரு சப்பாத்தி, ஒரு கோப்பை சோறு, அல்லது உப்புமா போன்று அந்தந்த உணவிலுள்ள நியூட்ரிஷனல் வேல்யூ என்ன என்று தோராயமாக கணக்கிட்டு கூறுவதுப் போல் இருந்தால், அதிலிருந்து அவரவரின் உடல் பருமனுக்கு ஏற்றவாறு எவ்வளவு கலோரி தேவை என்று கணக்கிட்டு உணவை எடுத்துக் கொள்வது ஓரளவிற்காவது, நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று நினைத்தேன்.

வீட்டுக்கு வீடு வேறுபடும் நமது உணவுமுறைகளை வைத்து அதன் கலோரியை கணக்கிடுவதில் நிச்சயம் பல சிக்கல்கள் இருக்கும் என்று தோன்றுகின்றது. ஆனாலும் இதற்கு தீர்வு காண வேறு ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளனவையா என்று கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

parenting- ற்கு தமிழில் என்ன சொல்வது??அப்படி ஒரு பகுதி கண்டிப்பாக என்னை போன்ற வெளிநாட்டில் தனியே குழந்தையை வளர்க்க திணரும் பெற்றோருக்கு உதவும் என்பது என் கருத்து

சகோதரி மனோகரி அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டு இருந்த கலோரி சம்பந்தமான தகவல்கள் ஆரோக்கியம் பகுதியில் கண்டிப்பாக இடம்பெறும். இதற்கு கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களின் உதவி தேவை என்பதால் அந்த பகுதி நீண்ட நாட்களாக சேர்க்கப்படாமலேயே இருக்கின்றது. இந்த விசயத்தில் நமக்கு உதவுவதாக சில வல்லுநர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில விசயங்களை சரிசெய்து கொண்டு அவர்களின் உதவியைப் பெறலாம் என்று இருக்கின்றேன். விரைவில் அந்த பகுதி இடம்பெறச் செய்துவிடலாம்.

சகோதரி தளிகா அவர்களுக்கு,

parenting என்பதற்கு குழந்தை வளர்ப்பு என்று சொல்லலாம். இது நேரடி தமிழாக்கம் அல்ல. வேறு ஏதேனும் வார்த்தைகள்கூட இருக்கலாம். நல்ல பயனுள்ள ஆலோசனை. இதுபற்றி முன்பே என்னிடம் நிறைய பேர் கேட்டு இருக்கின்றார்கள். இதற்கு நல்ல அனுபவசாலிகள், குழந்தை மருத்துவர்கள் போன்றவர்களின் உதவி தேவை.

உங்கள் ஆலோசனைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவற்றை செயல்படுத்த எங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அதை முயற்சித்து வருகின்றோம். இன்னமும் ஒன்றையுமே செயல்படுத்தவில்லையே என்று எண்ணவேண்டாம். விரைவில் ஒவ்வொன்றாய் கொண்டு வருகின்றோம்.

இங்கே கேள்வி கேட்டு பதிவு செய்யும் நேரத்திற்கும் மன்ற்த்தில் வரும் நேரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எந்த நேரத்தை பின்பற்றுகிறீர்கள்.

இது பற்றி முன்பே ஒரு விளக்கம் கொடுத்ததாக ஞாபகம். அறுசுவையை உலகில் பல நாடுகளில் வசிப்பவர்கள் பார்வையிடுவதால், ஒருகிணைந்த பிரபஞ்ச நேரத்தினை (UTC/GMT) எடுத்துக்கொண்டுள்ளோம். Morocco (Casablanca), Monrovia, (சில சமயம் லண்டன்) போன்ற நகரங்களின் நேரங்கள் இதற்கு சரியாக வரும். GMT நேரம் தெரிந்தால் மற்ற நாடுகளின் நேரங்களை கணக்கிடுவது மிகவும் எளிது.

இந்தியாவிற்கு GMT+5.30, அதாவது GMT நேரத்துடன் 5:30 மணி நேரத்தை கூட்டினால் இந்திய நேரம் கிடைக்கும். நீங்கள் வசிக்கும் நாட்டின் நேரத்தை GMT இருந்து எவ்வளவு கூட்டி அல்லது கழித்து கணக்கிடவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கீழ்கண்ட முகவரியில் உள்ள இணையப்பக்கத்திற்குச் சென்றால், உலக நாடுகளின் நேரத்தை காணலாம்.

<a href="http://www.timeanddate.com/worldclock/full.html" target="_blank">World Time </a>

யோகாசனம் பற்றி ஒரு பதிவை சேர்க்கலாமே
paapu

paapu

மேலும் சில பதிவுகள்