உருளைக்கிழங்கு வேர்கடலை மசாலா

தேதி: July 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - ஒன்பது(சிறியது)
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
வேர்க்கடலை - அரை கப்
புளி - நெல்லிக்காயளவு
மிளகாய் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
தனியாப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது(அலங்கரிக்க)
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

முதலில் உருளைக்கிழங்கை நறுக்காமல் அப்படியே வேகவைத்து தோலை எடுத்து விடவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து ஆறு கப் தண்ணிர் கலந்து எடுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை வறுத்து தோலெடுத்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு போட்டு கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பை போடவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து, நன்கு வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, தனியாபொடி, உப்பு சேர்த்து கிளறி விட்டு, புளித் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் உருளைக்கிழங்கு சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த வேர்க்கடலை கலவைவை குழம்பில் சேர்த்து, மேலும் ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் உருளைக்கிழங்கு செய்தலே ஏன் hus சாப்பிட மாட்டார் எதாவது குறை கூறி கொண்டே இர்ருபர் நேற்று உங்கள் உருளைக்கிழங்கு வேர்கடலை மசாலா செய்தேன் மெகவும் அருமை

நன்றி
swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா