பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட்

தேதி: July 18, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

ப்ரெட் ஸ்லைஸ் - 10
முட்டை - 3
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
புதினா - 5 இலை
உப்பு - தேவைக்கேற்ப

ப்ரெட்டை தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த முட்டை கலவையில் ப்ரெட்டை இருபுறமும் தோய்த்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

மிக எளிதில் தயாரிக்ககூடிய பயணங்களில் எடுத்து செல்லக்கூடிய சிறந்த உணவு இது. தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்

Comments

சகோதரி தளிகா,
இதை தோசை கல்லில் செய்தால் உட்கொள்ளும் எண்ணை குறையுமே !!

நன்றி,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் close-up உபயோகிப்பதில்லை) :)

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் உபயோகிப்பது close-up அல்ல) :)

add little oil in in a frypan and toast either side of the bread......thiz wat i meant but in tamil i dunt know wat to write..if u cud plzz help..i will edit the above.....like"dosaikallil porithu...??"

சகோதரி தளிகா,
Below text will be more appropriate
"தோசை கல்லில் சிறிது எண்ணை ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்"

நன்றி,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் close-up உபயோகிப்பதில்லை) :)

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் உபயோகிப்பது close-up அல்ல) :)

thanx a loot karthik

தளிக்கா
பிரெட் டோஸ்ட்டுகு பசங்க ஒகே சொல்லியாச்சு
சிறியவன் சூப்பரா இருந்துது என்றான்
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றிக்கா..எங்கம்மா முன்னெல்லாம் செய்து கொடுத்து விடுவாங்க நாங்க இதுக்கு வெச்ச பெயர் பிரியானி ப்ரெட் டோஸ்ட்..பிரியானி மணம் மாதிரி இருக்குறதால..நானும் இங்க பார்குக்கு போரப்ப எடுத்துட்டு போவேன்....சப்பிடுரவங்கல்லாம் எப்படி செஞ்சென்னு கன்டிப்பா கேப்பாங்க..செயவும் 20 நிமிஷம் போதும்

இன்று காலை டிபன் தளிக்கா உடைய பேச்சுலர்ஸ் பிரெட் டோஸ்ட்.
இத்துடன் சிறிது கருவேப்பிலை, கரம் மசாலா,முன்று தேக்கரண்டி பால் சேர்த்தேன் நல்ல இருந்தது.
மதியம் தக்காளி சாதம், இறால் வறுவல்

ஜலீலா

Jaleelakamal

dear ruby and jaleela akka,
assalamu alaikum.
can we use coriander lvs instead of mint,as we do not get mint lvs here.
akka,tell me one thing, does prawn contain fat?

டியர் ஹிபா
கருவேப்பிலை, கொத்து மல்லி , புதினா மூன்று இலைகளுமே நல்லது தான் எது கிடக்குதோ அதை சேர்த்து கொள்ளுங்கள்.
ஒரு டிபெரெண்ட் டேஸ்ட்டில் இருக்கும் அவ்வளவு தான் , கொத்துமல்லி மணம் இன்னும் சூப்பராக இருகும்.மிளகு தூள் கூட சேர்க்கலாம்.
தளிக்கா வரத்துக்குள் ஓடி போய் விடுகிறேன், அவங்க பதிவில் நான் என் கருத்தை சொல்லி விட்டேன்,
ஜலீலா

Jaleelakamal

போட்டு பாருங்க..நான் போட்டதில்லை..என்றும் இந்த பட்டரும்,ஜாமும் தேச்சு போர் அடிச்சு போரதுக்கு கொஞ்சம் வித்யாசமா இருக்கும்.எனக்கு ரொம்ம்ப இஷ்டம்
எதுக்கு ஓடரீங்க ஜலீலாக்கா..நீங்க தான் சமையல் புலியாச்சே நல்ல இருக்குமா இல்லையான்னெல்லாம் நீங்க தான் சரியா சொல்வீங்க

கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி மூன்றும் வெவ்வேறு மணம் உடையவை அல்லவா? பிறகு எப்படி ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுத்த முடியும்?

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலிலா அவர்கள் செய்துள்ள ப்ரெட் டோஸ்ட்டின் படம்

<img src="files/pictures/fried_bread.jpg" alt="bread toast" />

ஐ ஜலீலக்கா நீங்க தான் என்னை விட அதிகமாக இதனை அடிக்கடி செய்கிறீர்கள் போல..படம் அழகாக விழுந்திருக்கிறது..ரொம்ப சந்தோஷம்

தளிகா இந்த டோஸ்ட் செய்து 1 வாரம் ஆகுது.ஆனால் பின்னூட்டம் தான் கொடுக்கலை இன்னைக்கிக்கு எப்படியாவது உங்களுடைய ரெசிபிகள் செய்து பார்த்தவைகளுக்கு பின்னூட்டம் கொடுக்கனும்னு ஒரு முடிவோட உடகார்ந்துட்டேன். நல்ல டேஸ்டாக இருந்தது செம ஈஸியாகவும் இருக்கு.சில சமயம் ஹஸ்ஸுக்கு ஆபீஸ் போகும் போது வீட்டில் சாப்பிட டைம் இல்லைன்னு ஓடிடுவாங்க அதனால காலை டிபன் நான் கைலயே கொடுத்துவிடுவேன் சாப்பிட லேசாகவும் இருகனும்னு நினைப்பேன் சில ஈஸியான டோஸ்ட்களை தான் வெரைட்டியாக செய்து கொடுப்பேன் அன்னைக்கு உங்கள் டோஸ்ட் செய்து கொடுத்தேன் டேஸ்டாக இருந்ததாக சொன்னார்கள். மிக்க நன்றி தளிகா இது போல பிரெட்டில் வேற ஏதாவ்து வெரைட்டியாக தெரிந்தால் சொல்லவும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதும் தொடர்ந்து மூன்று குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததில் இரட்டிப்பு சந்தோஷம்.
ப்ரெட்டில் முதலில் நான் கற்றுக் கொண்டது ஃப்ரென்ச் டோஸ்ட் அது எல்லாருக்கும் தெரியும்..பிறகு சின்ன வயதில் சொந்தமாக ஒரு டோஸ்ட் செய்து என் அப்பா நல்ல இருக்குன்னு சொன்னார்..ரொம்ப சந்தோஷமா இருந்தது.
ப்ரெட்டை தண்ணீரில் முக்கி உள்ளங்கைய்யின் நடுவே வைத்து பிழிந்து கொஞ்சம் எண்ணையில் போட்டு மேலே வெங்காயம் பச்சை மிளகாயை தூவி அதன் மேல் உப்பு கலந்த முட்டையை ஊற்றி திருப்பி போட்டு எடுத்து கொடுத்தேன்..அதை இன்றும் செய்வேன்.
பிறகு என் கனவருக்கு வேறு வேலையில் இருந்தபொழுது மாலை வீடு வந்து சாப்பிட ரொம்ப நேரம் ஆகும் அப்ப சிலது கைக்கு வந்த மாதிரி செய்து கொடுப்பேன்.
1)ப்ரெட்டை தண்ணீரில் முக்கி பிழிந்து உள்ளே வெஜிடபில் அல்லது நான் வெஜ் கட்லெட் கலவையை வைத்து மூடி பொரித்து கொடுப்பேன்
2)பொரிக்க வேண்டாமென்றால் நடுவே வைத்து டோஸ்டெரில் வைத்து கொடுப்பேன்
3)ஃபிஷ் ரோல் என்று என் குறிப்பில் உள்ளது அதுவும் செய்து கொடுப்பேன்

என்னெனவோ செய்து கொண்டு இருந்தேன் எலலம் மறந்து விட்டது கதீஜா

ரூபி,
சூப்பர் ரெசிப்பி.இந்த சன்டே பிரேக்ஃபாஸ்ட் உன் பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் தான்.இதை என் கணவர் விரும்பி சாபிட்டார்.ஆத்திக்கும் நாலு வாய் உள்ளே போச்சு.அது தான் ஹைலைட்.ரொம்ப சுலபமான நல்ல சுவையான ரெசிபீ.சில குழந்தைகள் வாயில் ஏதும் தட்டுப்பட்டால் உடனே துப்பிவிடுவார்கள் அது போல உள்ள குழந்தைகளுக்கு இதை முயற்ச்சி செய்து பாருங்க. பெரியவர்களும் இதை கண்டிப்பா விரும்புவார்கள்.கதீஜா சொன்னது போல் வெளியே எடுதுச்செல்ல, லேசான. சுவையான எளிதான ஒன்று.

ஹாய் ஹிபா
தேன்க் யூ வெரி மச் .எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..என் அம்மாக்கு தான் தேன்க்ஸ் சொல்லனும்..அம்மாவே எங்கயோ டிவில தான் பாத்து செஞ்சாங்களாம்.எனக்கும் இப்பவே சாப்பிடனும் போலிருக்கு

நேற்று மாலை டிபன் தளிக்கா உங்களுடைய பேச்சுலர்ஸ் பிரெட் டோஸ்ட் செய்தேன், சுவையாக இருந்தது, மல்லி இலை சேர்த்து செய்தேன், சுப்பராக இருந்தது, அடுத்தமுறை புதினா சேர்த்து செய்ய வேண்டும், இதன் சுவை என் மகனுக்கு மிகவும் பிடித்து விட்டது இன்று காலை அந்த டோஸ்ட் செய்து வேண்டும் என்றான் புதினா சேர்த்து செய்து சாப்பிட்டுவிட்டோம், இந்த அருமையான ரெசிபிக்கு மிக்க நன்றி,தளிக்காவுக்கு ஒரு ஓ,

ரொம்ப சந்தோஷம் ரைஹானா மகனுக்கும் பிடித்ததால்:-)

தளி உங்களுடைய ப்ரெட்டோஸ்ட் இன்று காலை செய்தேன். சுவை அபாரம். ப்ரெட் ஜாம் என்றால் என் 3 ஸ்லைஸ்தான் சாப்பிடுவார். இன்று 5 சாப்பிட்டார். எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. ரொம்ப நன்றி தளிகா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி தனிஷா.எனக்கு ரொம்ப சந்தோஷம் சாதாரண குறிப்புக்கு இவ்வளவு பின்னூட்டம் வந்ததுக்காக..பட்டிமன்றத்துக்கு வரலாம்னு நினைத்தேன் ஆனால் நேரப்பற்றாக்குறை மற்றபடி நமக்கு அடிதடி என்றால் நெம்ப இஷ்டம்:-D

இப்ப தளிகாவின் பேச்சிலர்ஸ் பிரெட் டோஸ்ட் செய்தேன் சூப்பர். எப்படியும் பிரெட் முட்டைன்னு முடிவாச்சு லன்ச்க்கு . ரொம்ப ஈசியா இருந்தது. கொஞ்சம் கெச்சப் வைத்து சாப்பிட்டேன் சூப்பர். இதோ டீயும் ஆச்சு.

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தேன்க் யூ இலா..ரொம்ப சந்தோஷம் இது சமைக்கிரப்ப பிரியாணிமணம் வரும்.

ரொம்ப ஈசியான சுவையான ரெசிப்பி.
நானும் கெட்சப்புடன் தான் சாப்பிட்டேன்.நன்றாக இருந்தது நன்றி. ஆனா பின்னூட்டம் கொடுக்கவும், அங்கு சொல்லவும் கொஞ்சம் லேட்டாகிவிட்டது. கெட்சப்பை ஸ்கூஸ் பன்னும்போது மறக்காமல் பின்குறிப்பு நாபகத்திற்கு வந்தது .
அதிக பின்னூட்டத்தைக் கொண்ட ரெசிப்பிக்ளில் இதுவும் ஒன்று!!!!! வாழ்த்துக்கள்.

indira

உங்க ப்ரெட் டோஸ்ட் செய்தேன். நைட் டிபனுடன் சேர்த்து. ரொம்ப நல்லாயிருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றி இந்திரா &தனிஷா
எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது..வார்த்தையே வரவில்லை .

அன்புள்ள தளிக்கா
ப்ரெட் டோஸ்ட் செய்தேன் வித்தியாசமான சுவை இருந்தது.மிகவும் பிடித்தது.மிகவும் நன்றி.

பர்வீன்.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் தயாரித்த பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்டின் படம்

<img src="files/pictures/aa163.jpg" alt="picture" />

ரொம்ப நன்றி பர்வீன் கீதா ஆச்சல்..மன்னிச்சுக்குங்க இப்போ தான் பார்த்தேன்;-)