பேபியோ ரைஸ்(பர்மா பிரைட் ரைஸ்)

தேதி: July 20, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் - 2 கப்
நீள வாக்கில் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 8 பல் (மெலிதாக நறுக்கவும்).
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2 (வறுத்து பொடி செய்யவும்)
முட்டை - ஒன்று
காய்ந்த இறால் - 10 (மிக்சரில் போட்டு அரைக்கவும்)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


 

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பாதி வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் போல் மொறு மொறுவென இருக்குமாறு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பூண்டையும் அதேபோல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
மீதமுள்ள எண்ணெயில் மீதி வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
காய்ந்த மிளகாய் பொடி, காய்ந்த இறால் பொடி, உப்பு சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
முட்டை உடைத்து ஊற்றி மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
சாதத்தை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் போல் கிண்டி, இறக்கவும்.
வறுத்து வைத்த வெங்காயம், பூண்டை தூவி பரிமாறவும்.


இது செய்வதற்கு மிகவும் எளிதான ஃப்ரைட் ரைஸ். காய்ந்த இறாலுக்கு பதில் வறுத்த மீனை முள்ளில்லாமல் எடுத்து பிய்த்துப் போட்டு செய்யலாம். கருவாடு வைத்தும் செய்யலாம். காய்ந்த இறாலை சிறிது தண்ணீரில் ஊற வைத்து(5 நிமிடம்) அரைத்தால் எளிதாக அரைப்படும்.

மேலும் சில குறிப்புகள்