என் அன்பு அறுசுவை இணையதளத்திற்கு

இத்தளத்தில் நீங்கள் உபயோகித்துள்ள tamil font என்ன என்று கூறுங்கள்.
எனென்றால் உங்களது குறிப்புகளை காபி பேஸ்ட் செய்யமுடியவில்லை.

they have used font"latha"..it comes by default as a package under unicode tamil fonts..u can get it in the below ink..

http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&%20Software.htm

நீங்கள் அளித்த பதிலுக்கு நன்றி
ஆனால் "லதா" என்ற tamil font windows xp யில் load ஆக மறுக்கிறது.
எப்படி load செய்வது?

dhanabal

XP யிடம் ஏற்கனவே ஒரு லதா இருப்பதால் அது இன்னொரு லதா வேண்டாம் என்று சொல்கின்றதோ என்னவோ.. நீங்கள் XP பயன்படுத்தும்பட்சத்தில் புதிதாக தமிழ் எழுத்துரு எதுவும் install செய்ய தேவையில்லை. XP யுடன் லதா எழுத்துரு வருகின்ற காரணத்தால்.

உங்களது பிரச்சனை பார்வையிடுவதில் அல்ல. உங்களால் அறுசுவை தளத்தில் தமிழில் உள்ளவற்றை படிக்க இயலவில்லை என்றால்தான் லதா போன்ற யூனிக்கோடு தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்யவேண்டும். உங்களால் படிக்க முடிகின்றது ஆனால் குறிப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லை. இதற்கு உங்கள் XP யில் தமிழ் மொழி சேவை தரக்கூடிய சில கோப்புகள் இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே விவரிக்கின்றேன்.

இதை செய்வதற்கு உங்களிடம் XP CD இருக்க வேண்டும். எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது control panel ஐ திறந்து அதில் Regional and language option என்று இருப்பதை கிளிக் செய்யவும். அதில் languages என்று இருப்பதை தேர்வு செய்யவும். அதில் இரண்டு Check boxes இருக்கும்.

முதலில் Install files for complex scripts and right to left languages என்று இருப்பதை கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Apply பட்டனை அழுத்துங்கள். உங்களிடம் அது XP CD கேட்கும். சிடியை போட்ட பின்பு எல்லாம் தானாகவே install ஆகிவிடும். அதன்பிறகு restart செய்துவிட்டு அறுசுவை வந்து உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்