யாரது?

யார் இந்த பாபு அண்ணா?

நல்ல கேள்வி.. இதே கேள்வியைத்தான் பாபு அண்ணாவும் தனக்குத்தானே ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காரு. (எல்லா ஞானிகளுமே தனக்குத் தானே கேட்டுக்கிற கேள்விதானே நான் யார் ங்கிறது.. :)

ippozhudhu adhigamaaga kuzhambi vittenn...babu annavum adminum oruvar dhaana??appadiyendraal admin veru usernameilum valam varugiraara??eppadi?ellarum baaby anna anna endru paasamazhai pozhiyumpozhudhu therindhu kolla summa oru curiosity avlo dhaan

நீங்க உண்மையிலேயே தெரியாமத்தான் கேட்டீங்களா? ஏதோ கிண்டல் பண்றீங்கன்னு நெனைச்சேன். என்னங்க இது.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு!! ரொம்ப நாளா அறுசுவையை நேயரா இருக்கிற உங்களுக்கே சந்தேகமா? இத்தனைக்கும் நாம ரெண்டு மூணு மெயில் பரிமாற்றம் வேற செஞ்சிருக்கோம். நான் அதில் எல்லாம் பாபுங்கிற பேர்தானே போட்டிருக்கேன்.

admin ங்கிறது ஒரு default account. Administrator. அவருக்குத்தான் எல்லா ரைட்ஸ்ம் இருக்கிறது. பக்கங்களை மாற்றுவது, சேர்ப்பது, பயனீட்டாளரை சேர்ப்பது, நீக்குவது இப்படி எல்லாவித உரிமைகளும் உடைய ஒரு அக்கவுண்ட் அது.

பாபு என்பது சாதாரண உறுப்பினர் பெயர்ப்பதிவு. வேற யாரும் அந்த பேரை எடுக்கிறதுக்கு முன்னாடி நான் எடுத்துக்கிட்டேன். அவ்வளவுதான். அட்மின்ங்கிற பேர்ல வந்து சில நேரங்கள்ல மன்றத்துல விவாதத்தில கலந்துக்கிறது கஷ்டமா இருக்கும். என்னோட தனிப்பட்ட கருத்தை ஒரு இணையத்தள நிர்வாகியா நான் வெளிப்படுத்தக்கூடாது. அந்த மாதிரி நேரத்துல நான் பாபுங்கிற பேர்லதான் பதிவுகள் போட்டிருக்கேன்.

அதை தவிர்த்து, வேற பேர்ல எல்லாம் நான் வர்றதில்ல. அதுக்கு அவசியமும் இருந்தது இல்லை. இப்ப குழப்பம் தீர்ந்துடுச்சா? (எல்லாரும் அண்ணா அண்ணான்னு பாச மழை பொழியறது என்னமோ உண்மைதான்.. ஆனா, உண்மையிலேயே அதில எத்தனை பேரு எனக்கு தங்கைகன்னு தெரியலை. நிறைய அக்காக்களும் என்னை அண்ணன்னு கூப்பிடுறாங்களோன்னு ஒரு சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு..:-) இனிமே 20 வயசுக்கு கீழே உள்ளவங்க மட்டும் என்னை அண்ணன்னு கூப்பிடுங்க. மத்தவங்க எல்லாம் தம்பின்னு கூப்பிடலாம்.)

nejamaagave enakku theriyaadhu....neenga anuppina mailslayum naan kavanikaama vittutten....mannikaavum..enakku oru baby girl..vayadhu 1 1/2...naughty girl...naan oru mesg anuppuvadharkul adhai aayiram dhadavai delete seidhum..disturb seidhum ennudaiya muzhu gavanam idhil irukaadhu..interesting topic irundhaal adharkku porukka mudiyaamal en badhilalippen....adhanaaleye neengal dhaan babu enbadhai miss panniyiruppen...

நலமாக இருக்கிறீர்களா? பாபு(அட்மின்). எனக்கும் தாளிகாவை போல அதே சந்தேகம் இருந்தது. நீங்கள் நேற்று சொன்ன பிறகு தான் தெரிந்தது பாபு என்கிற அட்மின் என்று. உங்களை எப்படி கூப்பிடுவது என்று சொல்லுங்கள். உங்கள் சமையல் அனுபவம் பற்றியும், உங்கள் மனைவி சமைப்பதில் மிகவும் பிடித்த உணவை பற்றியும் கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்? அறுசுவையில் எனது குறிப்புகளையும் சேர்க்க ஆசை ஆனால் இப்பொழுதுதான் அறுசுவையை பார்த்து சமையல் கற்றுக் கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் எனது குறிப்புகளையும் அறுசுவையில் பகிர்ந்துக் கொள்வேன். சமையல் மட்டும் அல்லாமல், அன்று நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி கவிதை, கட்டுரை, கைவினைபொருட்கள் பற்றிய குறிப்புகள் எப்பொழுது அறுசுவையில் இடம் பெறும் அல்லது அதற்கென்று தனியாக ஒரு புதிய இணையத்தளம் கொண்டு வரப்போகிறீர்களா? உங்களின் அடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற அறுசுவை நேயர்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
best wishes to my dear friend
puja

அட்மின் தான் பாபு, பாபு தான் அட்மின். இனி உங்களுக்கு குழப்பம் வேண்டாம். என்னை பாபு என்றே கூப்பிடலாம். என் மனைவி சமையலை இது வரை சாப்பிட்டது கிடையாது (மனைவியே கிடையாதே.. ) என் அப்பாவின் மனைவி சமையல்தான் இது நாள் வரை. அதில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அறுசுவை பார்த்து சமையல் கற்றுக்கொண்டு அறுசுவைக்கே குறிப்புகள் கொடுக்கப் போகின்றீரா.. கேட்க நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். அறுசுவையில் இல்லாத குறிப்புகளை அனுப்புங்கள். (இப்படித்தான் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவதற்கு சிலர் அறுசுவையில் இருந்தே குறிப்புகளை காப்பி எடுத்து எனக்கு அனுப்புகின்றனர்.)

கதை, கவிதை, கட்டுரை பக்கங்கள் இன்னும் ஒரு சில வாரத்தில் வெளிவரும். அவை தற்போது அறுசுவையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதனை தனி தளமாக கொண்டு வருவதைப் பற்றி பின்னர் பரிசீலிப்போம்.

புதிதாக வேறு சில இணையத்தளங்கள் கொண்டு வரவிருக்கின்றோம். எப்போது என்பதுதான் எங்களுக்கே தெரியவில்லை. வழக்கம்போல விரைவில் என்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன்.

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

எனக்கும் இந்த குழப்பம் முதல்முதலில் அறுசுவைக்கு வந்தபோது இருந்தது. 2 நாள்கள் கழித்துதான் பாபுதான் அட்மின் என்று தெரிந்தது. பூஜா இப்போதுதான் அறுசுவையில் புது உறுப்பினராக இருப்பதால் பழைய பதிவுகளை பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தன்னால் நாத்தனார் கிடைக்க இனி சான்ஸே இல்லை என்று மனோஹரி மேடத்துக்கு அளித்த பதிலில் ஒரு முறை குறிப்பிட்டிருந்ததை வைத்து, அதன் மூலம் இன்னும் திருமணம் ஆகவில்லை அல்லது அப்படி ஒரு எண்ணம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம். 20 வயதுக்கு குறைந்தவர்கள் மட்டும்தான் அண்ணா என்று கூப்பிட வேண்டும் என்றால் பாபுவுக்கு வயது 21 ஆ. இதற்கும் பதில் நீங்கதான் சொல்லணும்.

எனக்கு மிகவும் பிடித்த விஷயம் மக்களின் மனதை நன்கு அறிந்து இன்னமும் அறுசுவையை கட்டண தளமாக மாற்றாமல் இலவசமாக நடத்துவதுதான். ஏனென்றால் ஒரு வெப்சைட், கட்டணம் கட்டிதான் பார்க்க முடியும் என்று ஆகிவிட்டால் அது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிடுகிறது. உதாரணமாக விகடன் முன்பு இலவசமாக இருந்தது. இப்போது கட்டணம் கட்ட வேண்டும் என்றான பிறகு நிறைய பேர் படிப்பதில்லை. மங்கையர்மலர், நக்கீரனும் அப்படியே. அதனாலேயே தினமலரும், குமுதமும் கட்டண சேவையை தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டு இன்னும் இலவசமாக நடத்தி வருகின்றன.நீங்கள் ஒரு முறை இதனை குறிப்பிட்டும் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு வெப்சைட் ஆரம்பித்தோம், இப்போது நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள், இனி கட்டண சேவையாக்குவோம் என்று நினைக்காமல், இதில் உள்ள எல்லா பகுதிகளையும் இலவசமாக பார்வையிடுவதற்கு ஏற்ப நடத்துவதற்கு முதலில் தங்களுக்கு என் பாராட்டுக்கள். மேலும் சமையல் மட்டும் இல்லாமல் அனைத்து பிரிவையும் கொண்டு வருவது(ஏற்கனவே மன்றத்தில் அனைத்து பிரிவும் இருக்கிறது) வரவேற்கத்தக்கது.

எனக்கு அறுசுவையில் மிகவும் பிடித்த பகுதி யாரும் சமைக்கலாம். சமையலே தெரியாதவர்களுக்கும் எளிதாக கற்றுக் கொள்ளும்படி இருக்கும் இந்த பகுதிக்கான ஐடியா எப்படி வந்தது என்று தெரிந்துக்கொள்ள ஆவல். மற்ற தளங்களில் இல்லாத அளவுக்கு அனைவரின் சமையல் திறனும், எழுத்துத் திறனும் இதில் வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததுக்கும் என் பாராட்டுக்கள். House Wife ஆக இருக்கும் பலருக்கும், இப்போது அறுசுவை மூலம் தனது சமையல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பும், சந்தேகங்கள் கேக்கவும், சொல்லப்போனால் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஒரு ரிலாக்சேஷனுக்கும்கூட உதவுகிறது.

எந்த ஊரில் எந்தெந்த உணவு வகை சிறப்பு என்று சொல்லும் பகுதி எப்போது அறுசுவையில் வரும். ஆஸ்திரேலியாவில் உள்ள சில சிறப்பு உணவுகளைப் பற்றியும், ரெஸ்டாரண்டுகளைப் பற்றியும் நான் அனுப்புகிறேன். அது நிச்சயம் அனைவருக்கும் பிடித்த பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

how r u deva? i am eagerly waiting for your tips to avoid c section delivery. since we are planning for a baby right know, it would be most helpful for me. and also the method of delivery and hospitals to choose are quit confusing here in Australia( the truth is since there are lot of choices a person new to Australia like me dont know what to choose). kindly if you find time do send your ideas and tips. thanks in advance.

தங்களுக்காக ஒரு பதிவையே எழுதுகிறேன். தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். தாங்கள் ஆஸ்திரேலியாவில் எங்கு வசிக்கிறீர்கள். நான் இருப்பது ப்ரிஸ்பேனில். இங்கே Royal Hospital For women,MaterHill Hospital,Princess Alexandra Hospital மிகவும் பிரபலம். பணத்துக்காக சிசேரியன் பண்ணுகிற கதை இங்கே இல்லை என்று நினைக்கிறேன். தங்களுக்கு மெடிகேர் கார்டு இருக்கும் என்று நினைக்கிறேன். பிரைவேட் கேர் இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும் நல்லது. மேலும் குழந்தை பிறந்த பிறகு Centrelink ல் சொல்லி Immunisation Schedule List வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. என் குழந்தைக்கு நான் அப்படிதான் செய்தேன். என் பிரெண்ட்ஸ் ப்ரைவேட் கிளினிக் ல் கேட்டு சரியான schedule கொடுக்காமல் சிலது விட்டுப் போயிடுச்சு.

எந்த ஹாஸ்பிடலாக இருந்தாலும் நீங்க நம்பிக்கையாக முக்கியமாக பயப்படாமல் இருங்க. பயம்தான் முதல் எதிரி. எனக்கு என் அம்மா சொன்ன அத்தனை டிப்ஸும் ரொம்ப உதவி செய்தது. குழந்தைக்கு ரெடியாகும் போது நிறைய விஷயத்தை யோசித்துக் கொள்ளுங்கள். முதலில் எப்போது குழந்தை வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது அதிகம் டிராவல் செய்யாதீர்கள். சாப்பாட்டில் கவனமாக இருங்கள். உடம்புக்கு சூடு கொடுக்கும் பப்பாளி, பைனாப்பிள், ஸ்வீட்ஸ் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். அப்படி சாப்பிட்டாலும் ஒரு கிளாஸ் பால் குடித்து விடுங்கள். முதல் மாத்திலேயே செக்கப்புக்கு ரெகுலராக போக ஆரம்பித்து விடுங்கள். முதல் மாத்திலிருந்தே Folic Acid,Iron கொடுப்பார்கள். Iron Tablets சாப்பிடும்போது Constipation ஏற்படக்கூடும். அது கர்ப்பிணிகளுக்கு நல்லது இல்லை. அதற்கு 2 கிளாஸ் பால் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு ஹார்லிக்ஸ் கூட அப்ப்டி ஒத்துக் கொள்ளாது. உடல் எடை முதல் மாதத்திலிருந்து கடைசி மாதம்வரை 10 கிலோ கூடினால் போதும். கர்ப்பமான நாளிலிருந்து எக்ஸர்சைஸ் செய்து வந்தால் இடுப்பு(Pelcvin Bone) எலும்புக்கு நல்லது. Elizabeth Fenwick எழுதிய Mother& Baby Care Book வாங்கிப் படிங்க. அது ஒரு பைபிள் மாதிரி. அதைப் படித்து நான் கற்றுக் கொண்டது அதிகம். எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். இயற்கை முறையிலிருந்து Allopathy வரை.

Hi Babu,
நானும் கூட மனைவிக்காகத்தான் சமையல் குறிப்புக்கள் இவ்வளவு ஆர்வமாக சேகரித்து வருவதாக நினைத்தேன்.அப்படி இல்லையா?பொதுவாக சமைப்பதில் பெண்களுக்குத்தான் அதிக ஆர்வம் என நினைத்திருந்தேன். நீங்க கொஞ்சம் வித்தியாசம்.சமையலுக்காக பல தளங்கள் இருந்தாலும் அருசுவை is something special.It helped me a lot.Thanks.Your recipe collection is amazing.I really felt It's not difficult to expertise in cooking with arusuvi.Great work. keep going.

மேலும் சில பதிவுகள்