விரால்மீன் குழம்பு

தேதி: July 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

விரால்மீன் - அரை கிலோ
மாங்காய் - ஒன்று
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு
வர மிளகாய் - 8
மல்லி - 4 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 12
கறிவேப்பிலை- 3 கொத்து
விளக்கெண்ணெய் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 4 தேக்கரண்டி
தாளிக்கும் வடகம் - பாதி உருண்டை
உப்பு - தேவையான அளவு


 

மீனை கழுவி சுத்தப்படுத்தவும். ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
வரமிளகாய், மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம் 5, கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை அரைக்கவும்.
புளியை கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய், 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், தாளிக்கும் வடகம் போடவும்.
வடகம் பொரிந்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அரைத்த மசாலாவையும் கரைத்த புளியையும் ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் மீனை சேர்க்கவும். மாங்காயையும் போடவும், உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும், எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதி மேடம் உங்கள் வீரால்மீன் குழம்பு செய்தேன் நல்லா இருந்தது.மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டேன்.உங்கள் நல்ல குறிப்புக்கு நன்றி மேடம்.

அன்புடன்,
ஜாஸ்மின்.

மாலதி, உங்கள் விரால் மீன் குழம்பு செய்தேன். சுவையாக இருந்தது. என்னிடம் விளக்கெண்ணை இல்லை அதானால் அது மட்டும் சேர்க்கவில்லை.
உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஜாஸ்மின்..!! இந்த மீன் குழம்பில் 1/2 கப் தேங்காயையும் வறுத்து அரைத்து சேர்க்கலாம்.
நன்றி....!!

வத்சலா..!! விளக்கெண்ணெய் இல்லாவிட்டால் பரவாயில்லை.... அதற்குப்பதிலாக நல்லெண்ணெயை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொண்டால் போதும்...
நன்றி பின்னூட்டத்திற்கு...!!