சொரா மீன் புட்டு

தேதி: July 28, 2007

பரிமாறும் அளவு: 5nos

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சொரா மீன் : 1/2 கி
வெங்காயம்: 4 பெரியது
பச்சைமிளகாய்: 6
க.பருப்பு: 3 ஸ்பூன்
கரிவெப்பிலை: 3 கீர்ரு
கொத்தமல்லி: 1/2 கட்
தெங்காய் துருவல்: 6 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எண்ணை: 5 ஸ்பூன்
பூன்டு: 5 பல்
இஞ்சி: 4 கிராம்

மஞ்சள் பொடி: 1ஸ்புன்


 

முதலில் மீனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே ஒரு துனி கட்டி மீனை ஆவி கட்டி வைக்கவும். 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் ஒரு அகலமான பாத்திரத்தில் அதை போட்டு மீன் தோலை உரிக்கவும் பிறகு மீனை கையால் உதிர்த்து பொடியக்கவும், அதில் இருக்கும் எலும்புகலை அப்புரபடுத்தவென்டும். மீனை நன்றாக உதிர்க்கும் போதே அதில் தேவையான உப்பும், மஞ்சள் பொடி போட்டு நன்றாக சேரும் படி பொடிக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணை உற்றி கடுகை போட்டு வெடித்ததும், கடலை பருப்பை போட்டுபொன்னிரம் வரும்போதே வெங்காயம்போட்டு நன்றக வதக்கவும், பச்சைமிளகாய் கரிவேப்பிலை பூன்டு இஞ்சி விழுதை அதில் போடவும், நல்ல மனம் வரும் போதுஅதில் பொடித்த மீனை போட்டு கிளறவும், மீன் ஏற்கனவே வெந்திருந்தாலும் இந்த மசாலா அதில் படும் படி நன்றாக கிளறவும், பிறகு தெங்காய் துருவலை போட்டு கொத்தமல்லி போட்டு கிளறி எடுக்கவும், சுவையான சொராபுட்டு தயார்......


தேவைப்பட்டால் மீனை இறக்கும் போது மிளகு பொடி போட்டு இறக்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

மாலினி இதே முறையிலேயே நாங்களும் இது செய்வோம், பெயர்தான் சுறாவறை என்போம். எத்தனை தடவை செய்து சாப்பிட்டாலும் அலுக்காது அவ்வளவு சுவை. நன்றாகவே இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்