தக்காளி மசால்

தேதி: July 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தக்காளி - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தாளிக்கும்
அளவு
மல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - சிறிதளவு
வரமிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தக்காளி, பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரமிளகாய் பொடி, மிளகு பொடி இரண்டையும் தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கின தக்காளி, பெரிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள், உப்பு, அரைத்த தேங்காய் மசால் சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றிய பின்பு இறக்கவும்.
இதனை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்