பித்தளை விளக்குகளை சுத்தம் செய்வது எப்படி?

பூஜை பித்தளை விளக்குகளை சுத்தம் செய்வது எப்படி? நன்றாக தேய்த்து கழுவினாலும் கருப்பு கோடுகள் மற்றும் பச்சை நிற கோடுகள் நீங்குவதில்லை.

நலமா?
புளி உபயோகித்து கழுவலாம்.
"பீதாம்பரி" என்றொரு பவுடர் சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும். அதைக்கொண்டு கழுவலாம்.
நன்றி...

நன்றி...

விளக்குகளை எலுமிச்சைத் தோல்களை கொண்டு நன்றாக தேய்த்துக் கொண்டு விட்டு, பின்பு எந்த ஒரு க்ளீனிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்துக் கழுவினால்
சுத்தமாகி விடும்!மிகவும் பச்சையாக இருந்தால் நாள்பட சரியாகி விடும். அடிக்கடி விளக்குகளை (வாரம் ஒரு முறையாவது)எலுமிச்சை கொண்டு தேய்த்து வந்தால் பளிச்சென்று இருக்க்ம்!பீதாம்பரி பவுடரும் நல்லதே!

0

நான் நலமாக உள்ளேன். நான் எப்பொழுதும் புளி உபயோகித்து தான் பித்தளை விளக்குகளை கழுவுகிறேன். ஆனால் "பீதாம்பரி" பவுடர் விளம்பரம் தான் பார்த்திருக்கிறேன் உபயோகித்து பார்த்ததில்லை அந்த பவுடர் வாங்கி உபயோகித்து பார்க்கிறேன்.தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

எலுமிச்சைத் தோல்களை கொண்டும்,பீதாம்பரி பவுடர் கொண்டும் நன்றாக தேய்த்துக் கழுவி பார்க்கிறேன்.தங்கள் பதிலுக்கு நன்றி.

வெள்ளி விளக்குகளை சுத்தம் செய்வதும் எளிதுதான்.
சில்வர்ஃபாயில் பேப்பர்களை துண்டுகளாக்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து,அதில் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிகளை போட்டு அடுப்பை அணைத்துவிட்டு,கொஞ்ச நேரம் கழித்து, எடுத்து அதே பேப்பரில் வெள்ளிப் பொருட்களை தேய்த்துக் கழுவி
பின்பு சோப்புத் தண்ணீரில் கழுவினால் நன்றாக "பளிச்" சென்று இருக்கும். :>))

நான் சமையலுக்கு நீண்டநாட்களாக் சில்வர் பத்திரம் பாவிக்கிறேன் அதன் கீழ்பகுதி யில் கறுப்பு கறை பட்டிந்துள்ளது இதைபோக்க ஏதாவது வழி உள்ளதா

சில்வர்ஃபாயில் பேப்பர் எந்த கடையில் கிடைக்கும் என்று சொல்லுங்களேன்??நன்றி.

யுவராணி, எனக்குத் தெரிந்தவரை சில்வர் பாயில் பேப்பர் எல்லா பான்சி கடைகளிலும் கிடைக்கும். சகோதரிகள் தங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும்போது ஊரைக் குறிப்பிட்டால் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வசதியாக இருக்கும்

கஜானா, நீங்கள் எந்த வகை அடுப்பை உபயோகிக்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லை. இரும்பு நார் கொண்டு தேய்த்தால் கறுப்புக்கறை மறைய வாய்ப்பு உள்ளது

ப்ராஸோ BRASSO என்ற ஒரு பாலிஷ் விற்கிறது.
பித்தளை விளக்குகளைத்தேய்த்த பிறகு ப்ராஸோ கொண்டு தேய்த்தால் பளபளவென்றிருக்கும்.

மேலும் சில பதிவுகள்