புளி உப்புமா இரண்டாம் வகை

தேதி: July 31, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி நொய் - 1 ஆ
புளி - எலுமிச்சையளவு
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
எண்ணை - 2 அ 3 டீஸ்பூன்


 

புளியைக்கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை விடவும்.
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்த புளி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க விடவும்.
புளி வாசனை போனதும் அரிசி நொய்யைப் போட்டுக் கிளறவும்.
நொய் வெந்ததும் இறக்கி வைத்து சுடச்சுடப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்