ஆட்டுக்கால் பாயா

தேதி: August 1, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கால் _ 4
தனியாபொடி - 2ஸ்பூன்
பச்சைமிளகாய்: 4
தக்காளி- 2
வெங்காயம்: 2
இஞ்சி: ஒரு பெரியதுன்டு
பூன்டு: 6பல்
கொத்தமல்லி: 1/2 கட்
கரிவேப்பிலை: தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
மஞ்சள பொடி: 1 ஸ்பூன்
பட்டை,லவங்கம் : 2
சோம்பு: 1 ஸ்பூன்

எண்ணை ; 2 ஸ்பூன்


 

முதலில் ஆட்டுக்காலை நன்றாக தீய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.
பிறகு குக்கரில் எண்ணை 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு ,பட்டை,லவங்கம், போட்டு பொரிந்ததும்
வெங்காயம் போட்டு வதக்கி பொன்னிரம் ஆனதும் இஞ்சி பூன்டு விழுதை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.
பச்சைமிளகாயையும் வதக்கவும்.
பிறகு ஆடுக்காளை போட்டு 4 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு கரிவேப்பிலை போட்டு குக்கரை மூடவும்.
குக்கரி 6 விசில் வந்ததும் சிரிது நேரம் கழித்து திரந்து அதில் கால் வெந்ததா என்று பார்த்து அதில் தனியா பொடி போட்டுகொத்தமல்லி நறுக்கி போட்டு உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து போரவில்லை என்றால் சிரிது உப்பை செர்த்து கொதிக்கவிடவும் .
மிகவும் தண்ணியாகமல் , திக்காகவும் இல்லமல் நல்ல பதத்தில் இரக்கி தோசை, சப்பத்தி, ஆப்பம் போன்றவைகலுக்கு சேர்த்து பரிமாறலாம்.


ஆட்டுக்காளை பெரும்பலும் சுத்தம் செய்துதான் வாங்கிவருவோம் இருந்தாலும் அதில் இருக்கும் ரோமம் அவ்வலவு துல்லியமாக தெரியாது அதனால் நாமும் அதை ஒரு தடவை அனலில் கான்பித்து சுத்தம் செய்வது நல்லது.

மேலும் சில குறிப்புகள்