குழந்தைக்கு பால் பாட்டிலை மறக்கடிப்பது எப்படி?

என் குட்டி மகளுக்கு 1வயது மூன்று மாதம் ஆகிறது இன்னும் பால் பாட்டிலில் தான் பால் குடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள், ஸ்ரா டம்ளரில் பால் குடிக்க மறுக்கிறாள் வம்பாக நான் கொடுத்தால் தட்டி விடுகிறாள் ; இல்லை தலையை வேண்டாம் என்று ஆட்டுகிறாள். குழந்தை பால் பாட்டிலை கொண்டு பால் குடித்தால் குழந்தைக்கு காது வலி மற்றும் வயிற்று போக்கு போன்ற உபாதைகள் வரும் என்று புத்தகத்தில் படித்தேன். மேலும் டாக்டர்களும் பாலை பாட்டிலில் கொடுப்பது நல்லதல்ல என்கிறார்கள்.நான் பால் பாட்டிலை சுடு தண்ணீரில் போட்டு தான் கழுவுகிறேன் இருந்தாலும் பால் பாட்டில் வேண்டாம் என்று நினைக்கிறேன்.குழந்தைக்கு பால் பாட்டிலை மறக்கடிப்பது எப்படி என்று தெரிந்தால் கூறுங்களேன்?நன்றி.

யுவராணி,குழந்தைக்கு ஒரு வயது, 3 மாதம் தானே ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறக்க வைக்கணும். திட உணவு என்ன குடுக்கறீங்ன்னு தெரியலை. தண்ணியை குட்டி தம்பளர்ல ஊத்தி நீயே குடின்னு சொல்லுங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பாலுக்கும் மாத்திக்கலாம்அழகழகா மார்க்கெட்டில் குட்டித் தம்பளர் கிடைக்கும். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

உங்கள் குழந்தை பால் பாட்டிலை மறக்க வேண்டுமா..?

<b>"தமாஸ் அட்மினின் சபாஷ் யோசனைகள்!!"</b>

<table>
<tr>
<td>
1. தினமும் குழந்தைகிட்டே பாட்டிலை காமிச்சு, அது தேன் பாட்டில்னு குழந்தை காதுல முப்பது முறை சொல்லுங்க.. முப்பதே நாள்ல அது பால் பாட்டில்ங்கிறதையே அது மறந்துடும்.
</td>
<td>
<img src="files/pictures/idea1.jpg" alt="idea no 1" />
</td>
</tr>
<td>
2. பால் பாட்டில்ல இரண்டு மூணு கஷ்டமான அல்ஜீப்ரா பார்முலாவை எழுதி வச்சு, குழந்தைய மனப்பாடம் பண்ணச் சொல்லலாம். அது சுத்தமா மறந்துடும். </td>
<td>
<img src="files/pictures/idea2.jpg" alt="idea no 2" />
</td>
</tr>
<td>
3. கொஞ்சம் காஸ்ட்லி ட்ரீட்மெண்ட்.. ஒரு ஹிப்னாடிஸ்கிட்டே குழந்தையை காமிச்சு, ஹிப்னாடிஸம் மூலமா பால் பாட்டிலை மறக்கடிக்கலாம்.
</td>
<td>
<img src="files/pictures/idea3.jpg" alt="idea no 3" />
</td>
</tr>
<td>
4. ஸ்ட்ரா டம்ளர்ல பால் குடிக்கணும். அவ்வளவுதானே.. ஒரு நல்ல யோசனை. கொஞ்சம் பெரிய பால் பாட்டில் உள்ளே டம்ளரை வச்சி, ஸ்ட்ராவை ரப்பர் நிப்பிள் வழியா கொஞ்சமா வெளியே நீட்டிவிட்டு, அதுல பால் குடுக்கலாம். குழந்தைக்கும் பாட்டில்ல குடிச்ச திருப்தி. உங்களுக்கும் டம்ளர்ல கொடுத்த திருப்தி. </td>
<td>
<img src="files/pictures/idea4.jpg" alt="idea no 4" />
</td>
</tr>
</table>
<br /><br />
அப்படி இது எதுவுமே சரி வரலையா, கவலைய விடுங்க.. முத மூணுல எதாவது ஒரு மெத்தர்டை நீங்க ட்ரை பண்ணி, அது பால் பாட்டில்ங்கிறதை நீங்க மறந்துடுங்க. அப்புறம் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதே உங்களுக்கு தெரியாது.. எப்படி..!!

(தமாசுன்னா பேரு வைக்கிறீங்க.. இப்ப அனுபவிங்க..இன்னும் இருக்கு..)

யுவராணி கொஞ்சம் tips சொல்ரேன்.which workedout for my baby

1)if baby finds difficult to suck milk frm strawcup better buy a sippy cup with soft spout n have milk flow controller
2)than giving whole of the milk by cup n making the baby frustuated....juz give her little milk with cup n the rest by bottle for few days..when baby gets used to the cup gradually increase the amount of milk in cup n cut down the bottle.
3)for my baby i used to give her unsweetened milk..so i will add lil sugar in cup n feed her...later when she got used i stopped adding sugar gradually)
4)if the baby iz too stubborn to drink even after putting much effort for weeks juz offer him an empty bottle in his hands n a cup full of milk in ur hand n ask him which one will he choose??with some babies thiz works
ரொம்ப கஷ்டப்பட்டு அந்த வருத்ததையோ கோபத்தையோ குழந்தைகிட்ட காமிச்சா அப்ரம் அது cup பாத்தலே பயந்துடும்....ட்ய்ம் எடுத்து சிரிச்சு விளையாடிட்டே try பன்னுங்க

இப்படியே பதில் சொல்லிண்டு போனா முழு நேர காமெடியனா ஆக்கிடப்போறாங்க

அட்மின் அவர்களின் யோசனைகள் எல்லாம் சூப்பர். நன்றாக சிரித்தோம். நீங்க ஹேமா ரெண்டு பேருமே உக்காந்து யோசிப்பீங்களோ.

தலிகா அவர்களின் கமெண்ட் ரொம்ப அநாகரிகமாக தெரிகிறது. அதை நீக்கிவிடுங்கள்.

அடடா நீங்க்ளா நீக்கறதை விட நானா நீக்கரது தான் என்னோட image க்கு நல்லது...அதுல கெட்டவார்த்தை ஏதும் இருக்கோ?இருந்தா மன்னிக்கவும்..பேசினா கொஞ்சம் ஓவெரா உரிமைய காட்டிட்டு அடிவாங்கிட்டு தான்போவேன் ..அதான் வாயே தெரக்கரதில்ல....

கொசுறு (-------) அர்த்தம் தெரியாம எழுதிட்டீங்களோ. பார்த்தும்மா

ஓஹோ அதானா நான் அதுக்கு முடின்னு அர்த்தம்னெல்ல நெனச்சேன்...அது கெட்ட வார்த்தையா..கடவுள் என்ன சோதிக்கிறார் பாருங்க..இப்ப என்னால அதை மாத்தவும் முடியரதில்ல

தலிகா, நீங்க எழுதியிருந்த கடைசி வரியை படிச்சதும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. வயதில் மூத்த ஒருவரை இப்படி கமெண்ட் பண்ணுவது அவ்வளவு நாகரிகம் இல்லைன்னு என் மனசுக்கு பட்டதால அப்படி சொன்னேன். தப்பாக எதுவும் சொல்லியிருந்தா மன்னித்துவிடுங்க.

அவங்க மழையாள பொண்ணு.நகைச்சுவையாக எழுதுவதற்காக எழுதிவிட்டார்கள்.

மேலும் சில பதிவுகள்