தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது.

தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது?

நானும் ரொம்ப ஆவலோடு வெய்ட் பன்னிட்டேஇருக்கேன் பார்ப்போம் நீங்க எந்த ஸ்டேட்ல இருக்கீங்க.
நன்றி
மாலினிசுரேஷ்

எப்படியிருக்கீங்க? குழந்தை எப்படியுள்ளது? கொஞ்சம் (!) உடம்பு சரியில்லை, இப்போ தேவலை. வீடு கட்ட ஆரம்பிச்சாச்சு, முடிய இன்னும் 6 மாசமாகுமென நினைக்கிறேன். இனிமேல் தான் குறிப்பு கொடுக்க ஆரம்பிக்கணும். அறுசுவை மிக அருமையான அரட்டைத் தளமாகி விட்டது போல், இருந்தாலும் ஜாலியா தானிருக்கு. மறுபடியும் ஏதேனும் டிப்ஸ் கொடுத்தீங்களா? மேக்கப் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்ல. விசாரிப்புக்கு மிக்க நன்றிமா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நாங்கள் UAE யில் துபாயில் இருக்கிறோம்.

இப்போ சன் டீவியில் நியூஸ் கேட்டேன். நியூயார்க்கில் கதிரியக்க தாக்குதல் நடத்தப்போரதாக சொல்றாங்க. ப்ளீஸ் என்ன நடக்குது அங்க??

எல்லாருக்கும் வணக்கம்,
நானும் உங்க அரட்ட கச்சேரில சேந்துகளாமா?

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

நலமாக இருக்கிறீர்களா . நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். வந்ததில் இருந்து அறுசுவைக்கே வர முடியவில்லை இன்று தான் நேரம் கிடைத்தது அதான் நிறைய நாள் மன்றத்தில் பார்க்காத பதிவுகளை பார்க்கலாம் என்று வந்தேன். அறுசுவையை பார்க்காவே நேரம் இல்லை இதில் குறிப்புகளை அனுப்ப நேரம் ஏது. எனது மகன் இங்கு வந்ததில் இருந்து யாரிடமும் பழக மாட்டிகிறான் என்னை பிரிந்து சிறிது நேரம் கூட இருப்பதில்லை. இப்ப கொஞ்சம் பரவாயில்லை . அதான் என் அம்மாவிடம் விட்டு விட்டு அறுசுவைக்கு வந்தேன். எல்லா சொந்தகாரங்க வீடுக்கும் போய்வரவே நேரம் சரியா இருக்கு. கூடிய விரைவில் குறிப்புகளை அனுப்புகிறேன்.உங்கள் விசாரிப்புக்கு மிக்க நன்றி

அன்புள்ள செல்வி அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. நான் நலம். மகனும் நன்றாக இருக்கிறான். நான் இப்பொழுதுதான் உங்கள் பதிவை பார்த்தேன் நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். இந்த மாதம் 4 ம் தேதிதான் இந்தியா வந்தேன். இன்னும் 2 மாதம் இங்குதான் இருப்பேன். ரமலான் கழித்துதான் திரும்ப ஜப்பான் போறதாக இருக்கிறேன். கணவர் மட்டும் இந்த மாதம் கடைசியில் போகிறார்கள்.ஊருக்கு வந்ததில் இருந்து கொஞ்சம் பிஸி. குழந்தை வேறு அங்கு தனியாக இருந்துவிட்டதால் யார் கூடவும் பழக மாட்டிகிறான். எப்பொழுதும் தூக்கியே வச்சிட்டு இருக்க சொல்கிறான். ஒரே அழுகை யாராவது தூக்கிடுவாங்களோ என்று. என் அம்மா,தங்கை கிட்ட போகிறான் ஆனால் நானும் அவன் கிட்டயே இருக்கனுமா இருக்கு. சொந்தகாரங்க வீட்டுக்கு போனால் கூட தூக்கியே வச்சிட்டு இருக்கனுமா இருக்கு.இப்பதான் 2 நாளா கொஞ்சம் பரவாயில்லை. இப்பொழுது தூங்குகிறான் அதனால் தான் மன்றத்தில் பார்க்காதபதிவுகளை பார்வை இடலாம் என்று இருக்கிறேன். அப்புறம் உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது. மீண்டும் சந்திப்போம்.
நன்றி.

அன்புள்ள கதீஜா,
எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாயிற்று. நான் இப்போது நலமாக உள்ளேன். நானும் கொஞ்சம் பிஸி தான், புது வீட்டு வேலைகள், மகனின் கல்லூரி சேர்க்கை., உங்கள் மகன் இப்பொழுது நலமாக உள்ளானா? மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்ததா? நீங்கள் ஜப்பானில் தனியாகவே வைத்திருந்ததால் இங்கும் உங்களையே தூக்க சொல்கிறான் போலும். மெல்ல அப்படியே பிறரிடம் பழக விடவும். 2 மாதம் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கடினம் தான். முடிந்தால் பாண்டிச்சேரி வரவும். உங்கள் குடும்பத்தினருக்கு என் விசாரிப்புகள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி செல்வி அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. நான் நலம். மகனும் நல்லா இருக்கான். மலசிக்கல் பிரச்சனை இப்பொழுது பரவாயில்லை. உங்களின் பிஸியான வேலைகளுக்கு இடையில் என்னை மறக்காமல் விசாரித்ததற்க்கு மிக்க நன்றி. நீங்களும் முடிந்தால் எங்கள் ஊருக்கு வரவும். நானும் முடிந்தால் வருகிறேன்.எனது குடும்பத்தினரும் உங்களை விசாரித்தார்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நானும் விசாரித்ததாக சொல்லவும்.
மீண்டும் சந்திப்போம்.

நீங்க விக்ரம் படம் பிடிக்கும் என்று சொல்லியிருக்கீர்கள் . எனக்கும் விக்ரம் படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் . இப்ப பீமா -க்கு வெயிட்டிங் (இதற்காக சிவாஜி பார்க்க கூட தியேட்டர் போகலை).
நான் அறுசுவையில் புதிதாக இணைந்துள்ளேன் . என்னையும் உங்கள் அரட்டையில் சேர்த்து கொள்ளுங்கள் . நான் சிங்கபூரில் வசிக்கிறேன்.

எனக்கு யாராவது தமிழ் பாடல்களை download செய்யும் websites கொஞ்சம் சொல்லுங்களேன்.
நன்றி
ராஜி

மேலும் சில பதிவுகள்