உறக்கம்

எனக்கு ஒரு புது பிரச்சனை. (பிரச்சனை தானா எனவும் தெரியவில்லை) அது தான் தூக்கத்தில் உளறுவது. நான் இந்தியாவில் இருந்த வரையிலும் எவ்வளவு கனவு கண்டாலும் அதிகம் உளறியது எல்லாம் கிடையாது. என் பெற்றோரும் அவ்வாறு சொன்னது இல்லை, நானும் உணர்ந்தது இல்லை. இங்கு (யூ.எஸ்) வந்து 3-4 மாதம் வரை கூட நன்றாக உறங்கின மாதிரி தான் நினைவு.

ஆனால், கடந்த 1-2 மாதமாக ஏதேதோ கனவு காண்பதும் அதில் பேசுவதை நிஜமாகவே பேசுவதுமாக உணர்கிறேன். எல்லாமே சாதாரண கனவுகள் தான், பெரிதாக சொல்லும்படி இல்லை. (அப்பா-அம்மா நினைவு என்றால் அவர்கள் தானே வரணும்?)

என் கணவரிடம் உளறினேனா எனக் கேட்டால், ஆமாம் என்கிறார். (அவர் சொல்வதை முழுக்கவும் நம்ப முடியவில்லை, உறங்கி விட்டால், இடியே விழுந்தாலும் எழ மாட்டார், நான் உளறுவது மட்டும் கேட்குமா?) எனக்கும் ஏதோ பேசினோமே என்று தான் தோன்றும். எல்லா நாளும் இவ்வாறு தோன்றினால், என் கற்பனை என ஒதுக்கலாம். ஆனால், வாரத்தில் 3-4 நாள் இப்படி மீதி நாள் நலம் என இருக்கிறது. இப்படி உளறியதாக எண்ணும் நாட்களில் நன்கு உறங்கிய திருப்தியும் இல்லை.

இரவில் நன்கு அசந்து தூங்க வேண்டும் என பகலிலும் தூங்குவதில்லை. எந்த விசனமான எண்ணங்களுடனும் உறங்க செல்வதும் இல்லை, பின் என்ன தான் காரணமாக இருக்கும்?? என் கரு வளையம் நாளுக்கு நாள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா? (ஏனெனில், 8 மணி நேர உறக்கம், ஏகப்பட்ட காய்-கனி என சேர்த்துக் கொண்டும் கருவளையம் அதிகரித்த வண்ணம் உள்ளது) இது பற்றி பெரிய கவலை இல்லை என்றாலும், பின்னாளில் இது பெரும் கவலை ஆகாமல் இருக்கவே இப்போது கேட்கிறேன். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து,

அன்புடன்,
ஹேமா.

ஹலோ ரோஸ்மேரி, நேத்து கதை தான் பெரிய ஜோக்- உளறக் கூடாது உளறக் கூடாதுன்னே நினைச்சுட்டே தூங்கலை. சின்னதா கனவு வந்தா கூட முழிச்சுட்டேன்! :-) போதாக்குறைக்கு ஜிம்முக்கும் போகலை, அதான். இன்னிக்கு பார்க்கலாம் என்ன ஆகுதுனு!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நிச்சயம் முயற்சி செய்து விட்டு சொல்கிறேன் விமலாக்கா!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

Hi Hema,
தூக்கத்தில் உளருவதிற்கு போய் ஏன் கவலை. முளிச்சிருக்கும்போது உளரினாதான் கவலை படனும்.இதுக்குபோயா தூங்காம இருந்தீங்க?

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, அது என்னவோ நல்லா தூங்கின திருப்தியே இல்ல... முழிச்சு இருக்கும் போது தான் உளர்றேன்னா தூக்கத்திலயுமானு ஒரு கவலை தான்! ஏதாவது தேவையே இல்லாத சொத்தை கனவு வேற வந்து குழப்புது. இதனால தூக்கமே பிடிக்கறது இல்லனா பாருங்க!!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்னம்மா சொப்பன சுந்தரி, நேத்தும் சரியா தூங்கலையா?

ஒரு ஜோக். ஜாலிக்குத்தான். ஒருத்தன் ரூம் மேட்டிடம் எனக்குத் தூக்கமே வரலை. என்ன பண்ணறதுன்னு கேட்டானாம். படுத்துண்டதும் 1, 2 எண்ணுன்னு சொன்னான்னாம் ரூம் மேட். மறு நாள் காலையிலே பார்த்தா 19,34,567 னு எண்ணிண்டிருந்தானாம்.

இப்ப மேட்டர்க்கு வருவோமா.

தினமும் இராத்திரி முடிஞ்சா ஒரு 10- 15 நிமிஷம் தியானம் செய்யுங்க. அப்புறம் படுக்கப்போகும்போது எனக்கு இன்னிக்கு கண்டிப்பா கனவு வராது, வராதுன்னு மனசுக்குள்ள சொல்லிட்டு படுக்கப்போங்க.

அன்புடன் (இது ஹேமாவிடம் கற்றுக்கொண்டது).
ஜெயந்தி

வாங்கக்கா வாங்க! ஜோக் எல்லாம் சொல்லி பிளந்து கட்டறீங்க :-) நேத்து உளறலைனு நினைக்கிறேன், ஆனா கனவு வந்துது! அதுவும் என்ன, 5 வருஷம் முன்னாடி நடந்த என் கஸின் கல்யாணம் சீன் பை சீன் வந்துது, அது முழிச்ச அப்புறம் ஞாபகம் வேற இருக்கு :O நீங்க எல்லாரும் சொன்னதை செய்ய ஆரம்பிச்சுருக்கேன், பலன் கிடைச்சுதா இல்லியானு சொல்றேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நாம ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கிட்ட இருக்கோம்! :-) எப்படி நீங்க நான் இங்க தான் இருக்கேன்னு கண்டுபிடிச்சீங்க?! எந்த பதிவுல அந்த க்ளூ இருந்துது :-/ ஸ்மைலி தானே, நல்லா போடுங்க, என்ன காசா பணமா? அட்மின் வேற கொஞ்ச நாளைக்கு வர மாட்டாராம், நாம் அதுக்குள்ள முடிஞ்ச வரை போட்டுக்குவோம்!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எப்பிடி இருக்கிறீங்க? நீங்கதான் எதோ ஒரு பதிவில வாஷிங்டன்ல இருக்கிறதா சொன்னீங்க. அதோட Google சம்பந்தமா வந்த ஒரு பதிவிலயும் ஒரு comment குடுத்திருந்தீங்க. ஸோ ரெண்டயுமே connect செய்து பார்த்தேன் :) நான் சொன்னது சரிதானே ? :)

நான் பொதுவா மன்றத்திலே பதிவுகள் போடுறதில்லை. ஆனா உங்களுடைய பதிவுகள் ரசிக்கும் படியாக இருந்தது. அதுதான் உங்களுக்கு பதில் அனுப்பினேன்.

நான் மன்றத்திலே பதிவுகள் போடாததற்கு காரணம், எனது தமிழ். (இலங்கைத் தமிழ்) :) உங்களுக்கெல்லாம் விளங்க சிறிது கஷ்டமாக இருக்கும். (எனக்கும் கொஞ்சம் பஞ்சிதான் :)) ஆங்கிலத்திலும் எழுதக் கூடாது. :) அதனால் சமையல் குறிப்புகள் மட்டும்தான் அனுப்புறது.

Anyway, Nice to meet you. :) (just one lineதானே)

ஜெயந்தி!
சொப்பன சுந்தரி!:>)மிக மிக ந்ல்ல பேரு தான்
ஹஹஹா ஹா!!என்னாலே சிரிப்பை அடக்க முடியவில்லை!அச்சச்சோ,என்க்கு வேலை வேற இருக்கு.
அதனாலே,நான் அப்புறமா வந்து பார்த்துக்கிறேன்! வரட்டா!ஹஹ்ஹா!:)
நன்றி!

ஜோக் கைவசம் நிறைய இருக்கு. அப்பப்ப எடுத்து விடலாம்னு இருக்கேன். ஆனா எல்லாம் பழசாதான் இருக்கும். இப்ப ஒரு ஜோக்:

ஒரு மருமகள் இரண்டே இரண்டு அடை வார்த்து வைத்திருந்தாளாம். மாமியார் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து 'என்னடிம்மா ரெண்டே ரெண்டு அடை வார்த்து வெச்சிருக்கியே எனக்கும் என் புள்ளைக்கும். நீ என்னம்மா பண்ணுவ'ன்னு கேட்டாங்களாம். அதுக்கு அந்த மருமகள் சொன்னாளாம் 'நீங்க பாதி, உங்க புள்ளை பாதி குடுத்தா என் பொழுது போய்டும்'ன்னு சொன்னாளாம்.

அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்