உறக்கம்

எனக்கு ஒரு புது பிரச்சனை. (பிரச்சனை தானா எனவும் தெரியவில்லை) அது தான் தூக்கத்தில் உளறுவது. நான் இந்தியாவில் இருந்த வரையிலும் எவ்வளவு கனவு கண்டாலும் அதிகம் உளறியது எல்லாம் கிடையாது. என் பெற்றோரும் அவ்வாறு சொன்னது இல்லை, நானும் உணர்ந்தது இல்லை. இங்கு (யூ.எஸ்) வந்து 3-4 மாதம் வரை கூட நன்றாக உறங்கின மாதிரி தான் நினைவு.

ஆனால், கடந்த 1-2 மாதமாக ஏதேதோ கனவு காண்பதும் அதில் பேசுவதை நிஜமாகவே பேசுவதுமாக உணர்கிறேன். எல்லாமே சாதாரண கனவுகள் தான், பெரிதாக சொல்லும்படி இல்லை. (அப்பா-அம்மா நினைவு என்றால் அவர்கள் தானே வரணும்?)

என் கணவரிடம் உளறினேனா எனக் கேட்டால், ஆமாம் என்கிறார். (அவர் சொல்வதை முழுக்கவும் நம்ப முடியவில்லை, உறங்கி விட்டால், இடியே விழுந்தாலும் எழ மாட்டார், நான் உளறுவது மட்டும் கேட்குமா?) எனக்கும் ஏதோ பேசினோமே என்று தான் தோன்றும். எல்லா நாளும் இவ்வாறு தோன்றினால், என் கற்பனை என ஒதுக்கலாம். ஆனால், வாரத்தில் 3-4 நாள் இப்படி மீதி நாள் நலம் என இருக்கிறது. இப்படி உளறியதாக எண்ணும் நாட்களில் நன்கு உறங்கிய திருப்தியும் இல்லை.

இரவில் நன்கு அசந்து தூங்க வேண்டும் என பகலிலும் தூங்குவதில்லை. எந்த விசனமான எண்ணங்களுடனும் உறங்க செல்வதும் இல்லை, பின் என்ன தான் காரணமாக இருக்கும்?? என் கரு வளையம் நாளுக்கு நாள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா? (ஏனெனில், 8 மணி நேர உறக்கம், ஏகப்பட்ட காய்-கனி என சேர்த்துக் கொண்டும் கருவளையம் அதிகரித்த வண்ணம் உள்ளது) இது பற்றி பெரிய கவலை இல்லை என்றாலும், பின்னாளில் இது பெரும் கவலை ஆகாமல் இருக்கவே இப்போது கேட்கிறேன். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து,

அன்புடன்,
ஹேமா.

இலங்கை தமிழ் எல்லாம் புரிஞ்சுக்கலாம், இவங்க இங்கிலிபிஸ் புரியும் போது, கொஞ்சம் முயற்சி செஞ்சா உங்க தமிழ் புரியாதா? :-)

நீங்க பேசாம டிடெக்டிவ் தொழிலுக்கு போயிடுங்க, சரியா டிடெயில்ஸ் ஃபாலோ பண்ணி பிடிச்சீங்க பாருங்க பாயிண்ட.. அடிக்கடி அரட்டை அடிக்க வாங்க..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹலோ விமலா மேடம், என்ன ரொம்ப சிரிக்கறீங்க, எனக்குள் இருக்கும் சிங்கத்தை சொரிஞ்சு விடாதீங்க... சுந்தரினு சொல்லிருக்காங்க பாருங்க, என் அழகு இப்படி எட்டு திக்கும் பரவும்னு எனக்கே தெரியல :-) வேலை எல்லாம் முடிஞ்சுதா?

நான் டிரைவிங் கத்துக்கிட்டு சமைச்சு இட்லிக்கு மாவு அரைச்சு லாண்ட்ரி போட்டு ஜிம் போய் ஒரு வழி ஆகிட்டேன். இன்னிக்கு பார்க்கலாம் சொப்பன சுந்தரியா இல்ல வெறும் சுந்தரியானு ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்ன பெரியக்கா, இதுல நீங்க மாமியாரா மருமகளா?! :D பேசாம ஜோக்ஸ்னு தனியா ஒரு தலைப்பு தொடங்கிடுவோம்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹாய் அக்கா
கொஞ்ச நாள் அரட்டைக்கு வராம ஒழுங்கா(!!!!) படிக்கலானு பார்த்தா முடிய மாட்டேங்குது. எல்லாரும் காந்தமா மாறி இழுக்கறீங்க. ஜோக் நல்லாருந்தது. நன்றாக சிரித்தேன். தொடர்ந்து அனுப்பவும்.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் ஹேமா sorry sorry சொப்பன சுந்தரி,
எப்படி இருக்கீங்க? சுந்தரி கண்ணால் ஒரு சேதி......... அடடா என்ன அழகான பேரு. எப்படி ஹேமா எப்படி? உங்க அழகு இப்படி எட்டு திக்கும் பரவுது. ஜாக்கிரதை. கண்ணு பட போகுது, சுத்தி போட சொல்லுங்க.:-)

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

எக்சாமுக்கு படிங்கன்னா பாட்டு பாடிட்டு இருக்கீங்களா? இருங்க உங்க மம்மி கிட்ட சொல்றேன்...

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹாய் ஹேமா,
எனக்கும் இங்கு வந்து தூக்கம் சரியாக வரவில்லை. கனவு வருவது என்று இருந்தது. ஆனால் இப்பொதெல்லாம் தூங்கும் முன்பு மிதமான சுடு தண்ணீரில் குளித்து விட்டு படுக்கிறென்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.நன்றி

hi

ஹேமாவ இப்ப அதிகமா காணோம் போல தோனுதே.....அப்படியா??

இல்லை தளிகா இங்க தான் இருக்கேன், ஆனா ஏதோ லாஸ்ட் இன் தாட்ஸ். ஏன்னு தெரியல, ஒரு மாதிரி மூட் ஸ்விங். எப்படி சரி ஆகலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

உங்க ஐடியாவும் நல்லாருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்