உறக்கம்

எனக்கு ஒரு புது பிரச்சனை. (பிரச்சனை தானா எனவும் தெரியவில்லை) அது தான் தூக்கத்தில் உளறுவது. நான் இந்தியாவில் இருந்த வரையிலும் எவ்வளவு கனவு கண்டாலும் அதிகம் உளறியது எல்லாம் கிடையாது. என் பெற்றோரும் அவ்வாறு சொன்னது இல்லை, நானும் உணர்ந்தது இல்லை. இங்கு (யூ.எஸ்) வந்து 3-4 மாதம் வரை கூட நன்றாக உறங்கின மாதிரி தான் நினைவு.

ஆனால், கடந்த 1-2 மாதமாக ஏதேதோ கனவு காண்பதும் அதில் பேசுவதை நிஜமாகவே பேசுவதுமாக உணர்கிறேன். எல்லாமே சாதாரண கனவுகள் தான், பெரிதாக சொல்லும்படி இல்லை. (அப்பா-அம்மா நினைவு என்றால் அவர்கள் தானே வரணும்?)

என் கணவரிடம் உளறினேனா எனக் கேட்டால், ஆமாம் என்கிறார். (அவர் சொல்வதை முழுக்கவும் நம்ப முடியவில்லை, உறங்கி விட்டால், இடியே விழுந்தாலும் எழ மாட்டார், நான் உளறுவது மட்டும் கேட்குமா?) எனக்கும் ஏதோ பேசினோமே என்று தான் தோன்றும். எல்லா நாளும் இவ்வாறு தோன்றினால், என் கற்பனை என ஒதுக்கலாம். ஆனால், வாரத்தில் 3-4 நாள் இப்படி மீதி நாள் நலம் என இருக்கிறது. இப்படி உளறியதாக எண்ணும் நாட்களில் நன்கு உறங்கிய திருப்தியும் இல்லை.

இரவில் நன்கு அசந்து தூங்க வேண்டும் என பகலிலும் தூங்குவதில்லை. எந்த விசனமான எண்ணங்களுடனும் உறங்க செல்வதும் இல்லை, பின் என்ன தான் காரணமாக இருக்கும்?? என் கரு வளையம் நாளுக்கு நாள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா? (ஏனெனில், 8 மணி நேர உறக்கம், ஏகப்பட்ட காய்-கனி என சேர்த்துக் கொண்டும் கருவளையம் அதிகரித்த வண்ணம் உள்ளது) இது பற்றி பெரிய கவலை இல்லை என்றாலும், பின்னாளில் இது பெரும் கவலை ஆகாமல் இருக்கவே இப்போது கேட்கிறேன். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து,

அன்புடன்,
ஹேமா.

ஹலோ மேடம்

என் பெயர் தனலக்ஷ்மி, உஙகளுக்கு உறக்கத்தில் புலம்புவது தொல்லை, ஆனால் எனக்கு உறக்கமே தொல்லை, என்னேறம் பார்த்தாலும் தூக்கம்தான், தூக்கத்தை கட்டுப்படுத்த ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். Please
நான் காலை 5 மணிக்கு எழுந்து இரவு 11 மணிக்கு துங்கச்செல்வேன், ஆபிஸில் வேலை பார்க்கும் போது மதியம் 2 அல்லது 3 மணிபோல் பயங்கர துக்கம் வருகிறது. என்ன செய்வது

அன்பே கடவுள்

ஹாய் dhans காலை எழும்பும் டைமை சொல்லி இருக்கீங்க தூங்கும் டைமை சொல்லல தூக்கம் கம்மியானால்,அலுவலக வேலை பார்க்க எரிச்சல் ஏற்பட்டால் தூக்கம் வரும்..இரவு நிம்மதியுடன் டெங்ஷன் இல்லாமல் ரிலாக்ஸா குறிப்பிட்ட டைம் வரை தூங்கி எழும்பனும் அது முக்கியம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ மர்ழியாநூஹு எப்படி இருக்கிங்க?

நான் இரவு தூங்கச்செல்லும் டயத்தையும் குறிப்பிட்டுள்ளேனே(இரவு 11 மணி)

அன்பே கடவுள்

ஓஹ் ஓகே..தூங்கும் டைம் சரிதான் ஓகே எனினும் அப்ப தூங்கும் டைமை கொஞ்சம் அதிகமாக்கங்க அதாவது ஒரு 9.30 10 மணிபோல் தூங்க டிரை பண்னுங்க..அதோட ஆபிஸில் பிடிக்காத வண்ணம் வேலை பழு இருக்கா?அதும் காரணமா இருக்கலாம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தனா...உட்ம்பில் ஹீமோக்லோபின் குறைவாக
இருந்தாலும் இந்த சோர்வு வரும்,ஏனென்றால்,இதனால் நான் மிகவும் கஷ்டபட்டிருக்கிறேன்.ரத்தபரிசோதனை மூலம் தெரிந்து தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் விமலா.

If you are india, try to get vitamin B suppliment I took B-long. It helped. I was perpertually tired.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சே சே ! ஆபிஸ்ல டென்ஸன் லாம் கிடையாது
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

தன்ஸ் உங்களுக்கு சமயம் ஒதுக்க முடியும்னா 30 நிமிஷமாவது யோகா க்லாஸுகு போங்களேன்..ரொம்ப சுறுசுறுப்பா இருக்குமாம்..எனக்கொரு ப்ரச்சனை என்னனா பகலில் எக்செர்சைஸ் பன்னினா போதும் மதியம் தூக்கம் தள்ளி எக்செர்சைஸ் பனினதுக்கான பலன் கிடைக்காம தூங்கிடுவேன்..அதனால் இப்ப சரியில்லை என்றாலும் இரவு படுக்க போகும் முன் 1 மணி நேரம் முன் தான் எக்செர்சைஸ்..அப்ப அசந்து கணவு கூட வராம தூங்குவேன்..உங்களுக்கெல்லாம் எக்செர்சைஸ் பன்னினா பகல் தூக்கம் வராதா?

எப்படி இருக்கீங்க? எனக்கு தனலெஷ்மின்னு ஒரு ப்ரண்ட் இருந்தா ஸ்கூல் டேஸ்ல அவள இப்படி தான் கூப்பிடுவோம். தனா actual நான் இத ஒரு புக்ல தான் படிச்சேன் அத உங்க கூட சேர் பண்ணிக்கிறேன். தூக்கம் வரும் போது,
straight டா நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை நல்லா இழுத்து விடனும். இதுப் போல் ஒரு 5 முறை செய்யலாம்.
அடுத்து கால் இரண்டையும் stiff நீட்டி பிறகு மடக்கனும்.
அடுத்து பாட்டு கேட்கலாம், ஆபீஸ்ல அது முடியாதுல்ல ஒரு வாக் போகலாம் சும்மா ரிலாக்ஸா இருக்கும் இது எல்லாம் என்னோட ஐடியா தனா.
ட்ரை செய்து பாருங்க. 7 மணி நேரம் தூங்கனும் தனா நிச்சயம் இல்ல உடம்புக்கு ஆரோக்கியம் குறையும். 6 மணி நேரம் தூங்கினாலும் நல்லஆழ்ந்து உறங்குங்க அதுக்கு தளிகா மேடம் சொன்ன மாதிரி யோகா செய்துட்டு தூங்குங்க. யோகா செய்துட்டு தூங்கினா நல்ல தூக்கம் வரும்னு எனக்கு இப்பதான் தெரியும் பின்பற்ற வேண்டியது தான் நன்றி தளிகா

ஹலோ தாளிகா மேடம், எப்படி இருக்கிங்க?

உண்மைய சொல்லனும்னா என்னக்கு யோகா க்லாஸ் போரதுக்கு டைம் கிடையாது, ஆனா நீங்க சொன்னமாதிரி எக்ஸசைஸ் பண்ணிபார்கிறேன், நன்றி
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

மேலும் சில பதிவுகள்