எனக்கு ஒரு புது பிரச்சனை. (பிரச்சனை தானா எனவும் தெரியவில்லை) அது தான் தூக்கத்தில் உளறுவது. நான் இந்தியாவில் இருந்த வரையிலும் எவ்வளவு கனவு கண்டாலும் அதிகம் உளறியது எல்லாம் கிடையாது. என் பெற்றோரும் அவ்வாறு சொன்னது இல்லை, நானும் உணர்ந்தது இல்லை. இங்கு (யூ.எஸ்) வந்து 3-4 மாதம் வரை கூட நன்றாக உறங்கின மாதிரி தான் நினைவு.
ஆனால், கடந்த 1-2 மாதமாக ஏதேதோ கனவு காண்பதும் அதில் பேசுவதை நிஜமாகவே பேசுவதுமாக உணர்கிறேன். எல்லாமே சாதாரண கனவுகள் தான், பெரிதாக சொல்லும்படி இல்லை. (அப்பா-அம்மா நினைவு என்றால் அவர்கள் தானே வரணும்?)
என் கணவரிடம் உளறினேனா எனக் கேட்டால், ஆமாம் என்கிறார். (அவர் சொல்வதை முழுக்கவும் நம்ப முடியவில்லை, உறங்கி விட்டால், இடியே விழுந்தாலும் எழ மாட்டார், நான் உளறுவது மட்டும் கேட்குமா?) எனக்கும் ஏதோ பேசினோமே என்று தான் தோன்றும். எல்லா நாளும் இவ்வாறு தோன்றினால், என் கற்பனை என ஒதுக்கலாம். ஆனால், வாரத்தில் 3-4 நாள் இப்படி மீதி நாள் நலம் என இருக்கிறது. இப்படி உளறியதாக எண்ணும் நாட்களில் நன்கு உறங்கிய திருப்தியும் இல்லை.
இரவில் நன்கு அசந்து தூங்க வேண்டும் என பகலிலும் தூங்குவதில்லை. எந்த விசனமான எண்ணங்களுடனும் உறங்க செல்வதும் இல்லை, பின் என்ன தான் காரணமாக இருக்கும்?? என் கரு வளையம் நாளுக்கு நாள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா? (ஏனெனில், 8 மணி நேர உறக்கம், ஏகப்பட்ட காய்-கனி என சேர்த்துக் கொண்டும் கருவளையம் அதிகரித்த வண்ணம் உள்ளது) இது பற்றி பெரிய கவலை இல்லை என்றாலும், பின்னாளில் இது பெரும் கவலை ஆகாமல் இருக்கவே இப்போது கேட்கிறேன். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து,
அன்புடன்,
ஹேமா.
விட்டமின் B உள்ள உணவு பொருட்கள்
நன்றி இலா மேடம்,
விட்டமின் B உள்ள உணவு பொருட்கள் என்னென்ன என்று சொல்லி உதவுங்கள்
அன்பே கடவுள்
அன்பே கடவுள்
ஹாய் தன்ஸ்
ஹாய் தன்ஸ்
அது போன்ற சமயத்தில் எழுந்து ஒரு வாக் பண்ணுங்க. கண்ணை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு குளிர்ச்சியான நீரை முகத்தில் அடித்துக் கொள்ளுங்கள்.
ஆச்சா. அப்புறம் கொஞசம் பச்சை பசேலென்று கண்ணுக்கு தென்பட்டால் அதையே சற்று நேரம் உற்றுப் பாருங்கள்.
பின்பு சீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் அருசுவை சைட்டை ஓபன் பண்ணி பாருங்க. கண்டிப்பா இந்த மெத்தட் வொர்க் அவுட் ஆகும்.
ஏன்னா இது அடியேனின் அனுபவங்கள்
உறக்கம்
தனலட்சுமி, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. அதனால கொஞ்சம் தூக்கத்தை இங்க எனக்கு அனுப்பிட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது.
சரி, சரி கோவிச்சுக்காதீங்க. சும்மாதான் சொன்னேன். எனக்கு ஒரு அட்வான்டேஜ். ஆபீசில் நான் இருக்கும் இடம் ஜே ஜேன்னு இருக்கும். அதனால தூங்கவும் முடியாது.
இரவு இன்னும் கொஞ்சம் சீக்கிரம் தூங்கப் போயிடுங்க.
மத்தவங்க சொல்லி இருக்கும் வழிகளையும் பின்பற்றுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
உறக்கம்
மனதை சிந்தனைகளின்றி பிளான்க் ஆக வைத்துக்கொண்டு உறங்க முயற்சித்து பாருங்கள்.
arusuvai is a wonderful website