மட்டன் சாப்ஸ்

தேதி: August 7, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக் கறி: 1/2 கி
வெங்காயம்: 2 பெரியது
தக்காளி : 2 பெரியது
பச்சைமிளகாய்: 3
பட்டை: தேவையான அளவு
லவங்கம்: 3
சோம்பு: 1 ஸ்பூன்
மிளகு: 2ஸ்பூன்
தேங்காய்: 3 பீஸ்
உப்பு : தேவையான அளவு
கரிவேப்பிலை: 2 இனுக்கு
பூண்டு: 5 பல்
இஞ்சி: ஒரு சிரிய துண்டு


 

முதலில் கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் சோம்பு, மிளகை வருத்து எடுக்கவும். பிறகு வெங்காயத்தையும்,தக்காளியையும் வதக்கி எடுக்கவும்.
இவை அனைத்தையும் அரைத்து எடுத்துக்கவும்.
ஒரு வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி பட்டை , லவங்கம் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாய் போடவும். அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை போட்டு வதக்கவும். அதில் கறியை போடவும் போட்டு நன்றாக கிளரி அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் போடவும் அதில் கரிவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கிளரி கறி வேகுவதர்க்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் போட்டு மூடவும். கறி வெந்ததும் நன்றாக கிளரி இரக்கும் போது கோத்தமல்லி நருக்கி தூவி . சூடாக பரிமாரவும்.

.


கடைகளில் மட்டன் சாப்ஸ் என்று கேட்க்கவேண்டும் கரி நிரைய எலும்புகள் கம்மியாக கொடுப்பார்கள் இதை வாங்கி சமைக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் ரெசிப்பி மட்டன் சாப்ஸ் செதேன்.டேஸ்டியாக இருந்தது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.