உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்

தேதி: August 7, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு: 2
ஸ்பினாச் கீரை: 1/2 கட்
வெங்காயம்: 1
கடுகு: 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1/4ஸ்பூன்
சீரகம்: 1/2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய்: 5
உப்பு: தேவையான அளவு


 

முதலில் உ.கிழங்கை வேகவைத்து பொடியாக நருக்கிகொள்ளவும். ஸ்பினாச்கீரையை பொடியாக நருக்கி வைக்கவும்.
வானலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம் போடவும்.
பிறகு வெங்காயம் நருக்கி போடவும் கய்ந்தமிளகாய் போடவும்.
உ.கிழங்கையும் , கீரையும் போடவும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி போடவும்.
நன்றாக கிளறிக்கொன்டே இருக்கவும் கீரை வெந்ததும் இரக்கிவைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மாலினி சுரேஷ், இந்த பொரியலை செய்து பார்த்தேன். மிகவும் சத்தான, ருசியான பொரியல் இது. செய்வதும் சுலபம். நன்றி.

உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது, உங்கள் குறிப்புக்கு நன்றி.

என்றும் அன்புடன்
மைதிலி

Mb

மாலினி அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல் மிகமிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையானகுறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"