சிவாஜி படம் உண்மையிலேயே ஹிட்டா?

ஆள் ஆளுக்கு புகுந்து கலாய்க்கறாங்க. இத்தனை நாள் சும்மா இருந்த நாங்களும் இப்ப உள்ளே வந்துட்டோம். சிவாஜி படத்தை எத்தனையோ கோடி ரூபாய் செலவு செய்து எடுத்ததா சொல்றாங்களே, அது உண்மைதானா? அந்த படத்திற்கு இவ்வளவு செலவு தேவைதானா அப்படி என்ன இருக்கிறது அந்த படத்துலன்னு எனக்கு தெரியலை. நான் பார்த்த ரஜினி படங்களிலிலேயே ரொம்ப ஆவரேஜ் படம்தான் இது. எனக்கு மட்டும்தான் அப்படி தோணுதா, வேற யாரேனும் படம் பார்த்தவங்க இருந்தா சொல்லுங்க. ரஜினி ரசிகையான ஹேமாவும் இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லணும். (சும்ம்மாதான், இப்படி ரஜினி ரசிகை அது இதுன்னு போட்டாத்தான் நீங்க பதில் சொல்வீங்கன்னு நம்புகிறேன்.)

நானும் சிறிய வயதில் இருந்து ரஜினி ரசிகை.
சிவாஜி படத்தை பொருத்த வரையில் ரஜினி அவருடைய வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு இவ்வளவு mass இருப்பதே ஒரு record. படத்திற்காக வேலை செய்த அனைத்து டெக்னீசியன்களும் திறமையானவர்கள்.என்ன செய்ய?no story.no logic.only rajni magic.
இயக்குனர் ஷங்கர் படம் இயக்குவதை விட்டு விட்டு music album போடலாம்.
அவரது கவனம் படத்தின் கதையை விட பாடல்களிலும்,ஆடை வடிவமைப்பதிலும்தான் அதிகமாக இருக்கிறது.ரஜினிக்காக மட்டும்தான் படம் ஓடுகிறது.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நானும் சிறு வயது முதல் ரஜினியின் ரசிகை...ரஜினி இந்த வயதிலும் என்ன அழகாக நடித்திருக்கிறார்...அதனால் தான் படம் ஓடி இருக்கும்...கதை ஒன்றும் இல்லை...பழைய ஷங்கர் படம் பார்த்தது போல் தான் உள்ளது...
ஆனால் கடைசியில் வரும் மொட்டை ரஜினி ரொம்ப அழகு...
அப்புறம் வருகிறேன்...நேரம் ஆச்சு என் பொண்ணோட பள்ளிக்கு போகனும்....
நன்றி...

நன்றி...

என்னங்க இது, நான் ரஜினி ரசிகை எல்லாம் இல்ல, இப்படி நீங்களா சொல்றீங்களே.. :-) சிவாஜி நானும் பாத்தேன், பொதுவா ரஜினி படத்துல இருக்கற தீவிர வில்லன் இதுல இல்ல. அதனால படையப்பா அளவு திரில் இல்ல. ஷங்கர் கொஞ்சம் குழம்பிட்டாரு, தன் படமா இருக்கணுமா, ரஜினி படமா இருக்கணுமானு.. கடைசில ரெண்டும்கெட்டானா போய் விட்டதுனு சொல்வேன். ஆனால், ரஜினி இளமையாக தெரிகிறார், தோற்றம் வெச்சு பாத்தா, இது கண்டிப்பா ரஜினிக்கு பெரிய மைல்கல். ஆனா எப்போதும் ஷங்கர்-சுஜாதா காம்பினேஷன் இன்னும் இம்ப்ரெஸிவ்வா இருக்கும். இந்த படத்துல அப்படி இருக்கறதா தோணல, அங்கவை-சங்கவை மாதிரி சிலரை புண்படுத்தற சீன்ஸ் எதுக்குனு புரியல.

பாட்டெல்லாம் எடுத்த விதம் எனக்கு பிடிச்சு இருந்துது, ஷங்கருக்கு அதுல திறமை இருக்குனா, அதில ஈடுபாடு காட்டறதுல தப்பு என்னங்க இருக்கு? படத்துக்கு இவ்வளவு அதிக செலவு- ஷங்கர், ரஜினி, ரஹ்மான், சுஜாதா சம்பளம், கிராஃபிக்ஸ் & பாட்டு செட்னால தான் நினைக்கிறேன். நியாயமா பார்த்தா இவங்க சம்பளத்த கழிச்சுட்டா, லோ-பட்ஜெட் படமாகிடும் போலிருக்கு!

நானும் ஒரு படத்துக்கு எதுக்கு இவ்ளோ செலவுனு நினைச்சேன், ஆனா பணம் என்பது என்ன? சுழன்றால் தானே பணத்துக்கு மதிப்பு, இதன் மூலம் எத்தனையோ தொழிலாளர்கள் வேலை பெற்றிருப்பார்கள் இல்லையா? ஒரு ஆள் கிட்ட இத்தனை கோடி தேங்கி கிடப்பதை விட இது தேவலை.

எது எப்படியோ, சாதாரண சினிமா ரசிகனுக்கு (ரஜினி ரசிகர் பற்றி இல்லை) இந்த படம் நல்ல பொழுது போக்காகவே இருந்தது. என்ன அடுத்த படத்துக்கு ஷங்கர் ரொம்ப கஷ்டப்படணும், இதே போல இன்னும் ஒரு படம் வந்தா அவர் காலி.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமாவின் கருத்துக்கள் சரின்னுதான் தோணுது. படத்துக்கு செட்டிங்ஸ் போடறது மூலமா நிறைய பேருக்கு வேலை கிடைக்கறது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கு சிவாஜி படம் ஜெண்டில்மேன் படத்தை இன்னும் நிறைய செலவழிச்சு ,ரஜினியை வெச்சு ரீமேக் பண்ண மாதிரி இருக்கு. படத்தின் கதையும் அதே போல் காலேஜ் கட்டறது, இலவசமா கல்வி கொடுக்கறதுன்னு அதே காதில் பூ வெக்கற கதை ,கொஞ்சம் ஹைடெக்கா பண்ணியிருக்காங்க . படத்தில் ரஜினி தன்னோட வேலையை பெர்பெக்டா பண்ணியிருக்கார். ஆனால் சங்கர் அதே கதையை வெச்சுட்டு இன்னும் ஒட்டிட்டு இருக்கார். ஜெண்டில்மேன், அந்நியன், இந்தியன் ,முதல்வன் எல்லாமே ஒரே வகை. மாற்றி எடுக்கலாம்னு நினைச்ச ஜீன்ஸ், பாய்ஸ் ஊத்திக்கிச்சு. படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி ஷங்கர்,ரஜினி,ரஹ்மான் சம்பளத்திற்குதான் போயிருக்கும். மற்றபடி ரஜினியால் மட்டுமே சிவாஜி ஓடிட்டு இருக்கு.

ஷங்கர் குழம்பவில்லை, இது தன்னோட படமாக தான் இருக்கனும்னு நினைச்சிருக்கார் போல.ரஜினி ஐ punch dialogue பேச விடாம,சும்மா அதிருதில்லனு சொல்லும்போது, நாம இல்லைனு தான் சொல்ல வேண்டி இருக்கு.ரஜினி யோட specialityயே comedy தான் அதுவும் missing.பாடல்களில் ஷங்கருடைய உழைப்பு தெரியுது,ஆனால் அதை கதையிலும் காமித்திருக்கலாம்.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அப்பாடா... ரொம்ப நாளுக்கு அப்புறம் லாகின் பண்ண்னா.. எவ்லோ நடந்து இருக்கு :)

மிச்சிங் அல்ல் திச்...

ரஜினி படம் எப்படியாவது ஒடும்.. அல்லது சந்தரமுகியை இப்போதும் ஒட்டுகின்ட்ரர்து பொல் எப்படியும் ஒட்டிடுவாங...
னான் அப்பவும் எப்பவும் கமல் ரசிகை.. ஆனலும் எல்ல ரஜினி படமும் பாத்துடுவேன்.
இந்த படத்திலும் எல்லா படங்களிலும் வருவது போல் பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் என சொல்லி எரிச்சல் படுத்துகிறார்.
20 வயதில் அமெரிக்கா சென்று 20 வருடம் வேலை செய்து சம்பாதித்த பணம் என ஒரு காட்சியில் விவேக்கிடம் சொல்லுவார் அவர்.. அந்த கணக்கு படி பார்த்தால், நாயகியின் அம்மா தான் சரியான ஜோடியாக இருப்பார்.. என்னவோ இது போல எத்தனை இருந்தலும், ரஜினி படம் அந்த நிமிஷம் ரசிக்ககூடியதாகவெ இருக்கும்... இதுவும் அப்படியே...

உங்கள்.
மைதிலி தி சண்முகம்

முன்னாடி காம்பியரிங் பண்ணிகிட்டு இருந்தீங்களா?
உங்கள் மைதிலி ஷன்முகம்னு சொல்லியிருக்கீங்களே அதான் கேட்டேன்(சும்மா)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

என் கேள்விக்கு இவ்வளவு பதிலா!!!!! எனக்கு சந்தோசம் தாங்கல. எல்லாருமே ரஜினி பேன்ஸ் போல தெரியுது. நான் வேற தெரியாம வாயைக் கொடுத்து உடம்பை புண்ணாக்கிக்க போரேனோன்னு பயமா இருக்கு. இருந்தாலும் விடுறதா இல்லை.

ஹேமா சொல்லி தேவா ஏத்துக்கிட்ட லாஜிக் சரியான்னு எனக்கு தெரியவில்லை. ஒருவர் கோடியா கோடியா செலவு பண்றதுனால நிறைய பேருக்கு வேலை கிடைக்கிறது என்னவோ உண்மதான். ஆனா அவர் செய்யுறது தானம் இல்லையே. இந்த சினிமா பிஸினஸ். அரசியல்வாதிகல் பகட்டா விளம்பரம் செய்யுறது, பேனர் வைக்கிறது கட் அவுட் வைக்கிறது எல்லாம்கூட ஏத்துக்கலாம். அது யார் பணமோ, எப்படி வந்தோ பணமோ... அது வேற விசயம். ஆனா அந்த செலவை நேரடியா இன்வெஸ்ட்மெண்டா நினைச்சு அரசியல்வாதிகள் செய்வது கிடையாது. அதனால பேனர் கட்டுறவங்க, கட் அவுட் வைக்கிறவங்க, போஸ்டர் ஒட்டுறவங்க நிறைய பேர் வாழுறாங்க. எப்படியோ மக்கள்கிட்டே இருந்து கொள்ளை அடிச்ச பணம் இப்படி கொஞ்சம் ஏழை மக்களை போய் சேருது.

ஆனா இங்கெ சங்கர் கூட்டணி பண்னது வியாபார மோசடி. ஒரு படத்துக்கு தேவையில்லாம கோடிக்கணக்கா செலவு செஞ்சு, அதை இன்னும் பல கோடியா திருப்பி எடுக்கத்தான் முயறச்சி பண்ணியிருக்காங்க. எடுத்துடுவாங்க. நிறையப் பேர் வாழ்ந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். எவ்வளவு பேர் இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு யோசிச்சு பாக்கணும். வெறும் 25 ரூபா டிக்கெட்ஐ 500, 1000ம்னு ஆக்கி விற்று இருக்காங்க. அதையும் கூட்டம் கூட்டமா மக்கள் வாங்கி படம் பாக்குது. மத்த படங்களையெல்லாம் ஓரங்கட்டுற அளவுக்கு ஒவ்வொரு ஊரிலயும் ரெண்டு மூணு தியேட்டர்ல போட்டு ரெக்கார்டு ப்ரேக் எல்லாம் பண்ணியிருக்காங்க. இவ்வளவு பண்ணி படத்தை புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி கொடுத்து எல்லாரையும் ஏமாத்தி இருக்காங்கன்னுதான் சொல்லணும். இதுக்கு இவ்வளவு செலவு தேவையே இல்லைன்னு தோணுது. இவ்வளவு பணம் கொடுத்து படத்துக்கு போய் படம் சரியில்லாம போச்சுன்னா கோர்டுல கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கிற சட்டம் இந்தியாவில கொண்டு வரணும்.

bi.. bi.. bi.. hai jolly jolly jolly

billa ranga bhasha thaan...
pistal peesum beeshthan ..

bi.. bi.. bi.. hai jolly jolly jolly

பாட்டு எப்ப்புடி??

டான்ஸ் சூப்பரா ஆடலாம் தெரியுமா?. பப்ளிக்ள இப்படி பேசக்கூடாது.

எனக்கு கமல் படம் பிடிக்கும்.

ஏங்க பார்க்க முடியத அளவிற்கு சிவாஜி மோசமான படமா என்ன? நீங்க சொல்ற மாதிரி படம் நல்லா இல்லைன்னு நஷ்டம் எல்லாம் கேட்க முடியாதுங்க.ஏன்னா ஒருத்தரை மட்டும் படம் ஓடாததற்கு காரணம் சொல்ல முடியாது.படத்தை நீங்க கண்டிப்பா பார்த்துதான் ஆகனும்னு கட்டாயமில்லை.
Rs.1000 செலவு செய்த நாமே case போட்டா,கோடி கோடியா செலவு செய்த producer நிலமைய யோசித்து பாருங்க.cinema is for entertainment.don't take it serious.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்