பாகற்காய் சிப்ஸ்

தேதி: August 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பெரிய பாகற்காய் - 2
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
சோள மாவு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
கலர் பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

முதலில் பாகற்காயை கழுவி விட்டு கத்தியை வைத்து மேலே உள்ள முள் பகுதியை நீக்கிக் கொள்ளவும். பிறகு அதை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பிறகு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, திக்கான புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகன்ற கிண்ணத்தில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு, கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, அரை தேக்கரண்டி உப்பு போட்டு நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, கலர் பவுடர், மிளகாய் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
15 நிமிடம் கழித்து பாகற்காய் ஊறியதும் அதில் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக போட்டு நன்கு பிரட்டி விடவும். அப்படியே எல்லா மாவையும் போட்டு பிசைய கூடாது.
அதன் பிறகு அதில் 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து, மாவு பாகற்காயுடன் நன்கு சேரும்படி பிசைந்து 2 நிமிடம் வைத்திருக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் பாகற்காயை சிறிது சிறிதாக போடவும். இதை போல கலந்து வைத்திருக்கும் பாகற்காயை இரண்டு முறை போடலாம்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு பொன்னிறமாக ஆனதும் கருகவிடாமல் எடுத்து விடவும்.
இப்போது பாகற்காய் சிப்ஸ் தயார். இதை டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை நன்றாக மொறுமொறுப்பாக இருக்கும். இதை போல புளிகரைசல் சேர்த்து செய்தால் கசப்பு இருக்காது.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிறீர்கள்? பாகற்காய் சிப்ஸ் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி

திருமதி ஃபைரோஜாவின் இந்த குறிப்பை செய்து பார்த்தேன் ரொம்பவே நல்லா இருந்தது,பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள்,எனது பாராட்டை அவர்களுக்கு தெரிய படுத்தவும்.

நேற்று உங்க ரெசிப்பியை பார்த்து பாகற்காய் சிப்ஸ் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.நன்றி.இன்னும் நிறைய குறிப்புகளை எதிர் பார்க்கிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் குறிப்பில் உள்ள சோள மாவு தவிர்த்து செய்ய இயலுமா? சோள மாவு என்றால் தானே? தங்கள் பதிலுக்கு நன்றி
If God be with us what could be against us

If God be with us what could be against us

உங்கள் குறிப்பில் உள்ள சோள மாவு தவிர்த்து செய்ய இயலுமா? சோள மாவு corn flour என்றால் தானே? தங்கள் பதிலுக்கு நன்றி.

If God be with us what could be against us

If God be with us what could be against us

I made this recipe. It is really good.
Thank U